HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 15 October 2026

ஜெயிலர் 2 கதைக்களம்

வர்மனை கொலை செய்தது யார்? கடத்தப்பட்ட சிலைகளின் மூன்று கண்டெய்னர்கள் யாரிடம் உள்ளது என்பதை கல்பக் குடும்பத்தினர் (எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி) வர்மனின் நண்பன் திலீப் (சுராஜ்) மூலம் தேடி வருகிறார்கள்.

இவர்களின் தேடல் ஒரு பக்கம் நடக்க, தன்னை சுற்றியும், தன் குடும்பத்தை சுற்றியும் ஏதோ தவறாக நடப்பதை உணரும் டைகர் முத்துவேல் பாண்டியன், தன்னை தேடுபவர்கள் தன் குடும்பத்தை நெருங்குவதற்கு முன், நாம் அவர்களை நெருங்க வேண்டும் என திட்டமிடுகிறார்.

ரஜினியின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக நடக்க, ஒரு கட்டத்தில் சுராஜ் இடத்திற்கே சென்றுவிடுகிறார். சுராஜை வைத்து கல்பக் குடும்பத்தை கண்டுபிடித்து, இந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரையும் முடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

ஆனால், ரஜினி நெருங்குவதற்குள் சிவராஜ் குடும்பத்தை எஸ்.ஜே. சூர்யா கடத்தி விடுகிறார். இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதால், தமிழ்நாட்டிலிருந்து கோவாவிற்கு, அதாவது கல்பக் குடும்பம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார். சிவராஜ் குடும்பத்தை ரஜினி காப்பாற்றினாரா? இந்த சிக்கலில் இருந்து ரஜினி எப்படி தப்பித்தாரா? மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ரஜினி, தான் தோன்றிய முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை பட்டையை கிளப்பியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

பணிவாக பேசுவது, கண் பார்வையில் மாஸ் காட்டுவது, ஸ்டைல், வசனங்களை மாஸாக பேசுவது, ஸ்க்ரீன் பிரசன்ஸ், ஆக்ஷன், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலும் ரஜினிகாந்த் வேற லெவல். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சியில், தனது கண்களால் வலியை திரையில் காட்டிய விதம் சிறப்பு.

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்பை சரியாக செய்துள்ளார். அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். காவாலா பாடல் போன்ற சிறு சிறு விஷயங்களில் டீடைலிங் செய்தது அருமையாக இருந்தது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகளை நமக்கு அழகாக காட்டிய விதம், டார்க் ஹ்யூமர் காட்சிகள், மாஸான கேமியோக்கள் என திரைக்கதையை நன்றாக வடிவமைத்துள்ளார்.

முதல் பாதியின் Fun + மாஸ் = என்டர்டைன்மென்ட் என படத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு. அதே போல் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் + எமோஷனல் ட்ராமாவாக எடுத்து சென்ற விதமும் வேற லெவல். ஆனால், படத்தின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வுக்கு படத்தின் நீளம் காரணமாக அமைகிறது.

வில்லன்களாக வரும் சுராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிற்கு இன்னும் சற்று வெயிட்டேஜ் இருந்திருக்கலாம். ஆனாலும், நடிப்பு அரக்கன் நடிப்பு அரக்கம்தான் என்பதை நிரூபித்துவிட்டார். குறிப்பாக ரஜினியின் வீட்டிற்கு சென்ற, அவரை எமோஷனலாக உடைக்கும் காட்சியில், ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்கிறார். வித்யா பாலன் ரஜினிக்கு எதிராக திமிராகவும், தோரணையோடும் பேசும் விதம் சிறப்பு.

நமோ நாராயணன் + யோகி பாபு + ரஜினிகாந்த் காம்போவில் வந்த நகைச்சுவை காட்சிகள் பிளாஸ்ட். அதிலும் நமோ நாராயணன் வேற லெவல் Fun. மற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் மாஸ் காட்சிகள், எலிவேஷன் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என அனைத்திற்கும் தனது பின்னணி இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார், படத்தின் மற்றொரு ஹீரோ அனிருத். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கிராஃபிக்ஸ் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம், அதில் சற்று கோட்டைவிட்டனர். அதே போல், நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள். லாஜிக் இல்லா மேஜிக்தான் ஜெயிலர் என்றாலும் கூட, அதற்கென இப்படியா? என்றுதான் கேட்க தோன்றுகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
  • நமோ நாராயணன்
  • எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் மற்றும் வித்யா பாலன்
  • எமோஷனல் காட்சிகள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • லாஜிக் மீறல்கள்
  • படத்தின் நீளம்

மொத்தத்தில், 'ஜெயிலர் 2' தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகம் படம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாகவும் மற்றவர்களுக்கு ஒரு முறை பார்க்கும் படமாக இருக்கிறது. 

ஜெயிலர் 2 திரை விமர்சனம்

Friday, 24 July 2026



கதைக்களம்

கௌதம் மேனன் மகள் மமிதா பைஜு, சிறு வயதிலேயே அம்மா இறப்பை கண்டு பயந்து சுபாவம் உள்ளவராக வளர்கிறார், ஜெய்லராக இருக்கும் கௌதம் மேனனுக்கு ஜெயிலில் இருக்கும் தளபதி விஜய் நட்பாகிறார்.

அவர் தன் மகளை மிக தைரியமாக இந்த சமுதாயத்தில் வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அந்த நேரத்தில் எதிர்பாரத விபத்தில் கௌதம் மேனன் இறக்க, மமிதாவை வளர்க்கு பொறுப்பை விஜய் ஏற்றுக்கொண்டு, அவரை இந்த சமுதாயத்தில் மிக தைரியமான பெண்ணாக வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.

அந்த நேரத்தில் மமிதா தெரியாமல் வில்லன் செய்யபோகும் சதிதிட்ட வேலையின் பையில் ஒன்றை பெற, வில்லன் கேங் மமிதாவை பிடிக்க, பிறகு என்ன தளபதி மமிதாவை மீட்டு, இந்த சதிதிட்டதிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆடும் ஆக்‌ஷன் அதகளமே மீதிக்கதை.

விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

படத்தை பற்றிய அலசல்

காட்சிக்கு காட்சி 52 வயதிலும் தூள் கிளப்புகிறார். அதிலும் ரசிகர்களுகாக அந்த ஒரு நிமிடம் நடன காட்சி, இவர் ஆட்டத்தை இனி பார்க்க முடியாது என்பதை எப்படி சொல்ல முடியும், ரசிகர்கள் அவரின் ஆட்டத்தை மறந்து இனி சினிமாவிற்கு வரமாட்டாரா என்ற ஏக்கமே அதிகம் தெரிந்தது.

அதே போல் ஆக்‌ஷன் காட்சி அதே எனர்ஜி அதிலும் இடைவேளை அந்த பேக்ட்ரி சண்டைகாட்சி, கிளைமேக்ஸ் ரோபோட் சண்டைகாட்சி என அனைத்தும் அடி தூள் மொமண்ட் தான். ப்ளாஷ் பேக் தளபதி போலிஸாக வரும் காட்சி அதிலும் அவர் முதலமைச்சர் ஆனதும் அதையெல்லாம் பார்க்கும் போது ரசிகர்கள் பெர்சனல் ஆக கனேக்ட் செய்து கொண்டாடி தீர்ப்பார்கள்.

மமிதா பைஜு விஜய்க்கு பிறகு படத்தின் முக்கிய கதாபாத்திரம் இவர் தான், விஜய் சொல்வதை கேட்காமல் சுந்ததிரமாக வாழ வேண்டும் என காதல் அதன் பின் வரும் அசம்பாவிதம், அதிலிருந்து மீண்டும் விஜய் எதற்காக நம்மிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொண்டு அவர் தைரியமான பெண்ணாக மாறி கிளைமேக்ஸில் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பது என அவர் பங்கையும் சிறப்பாக செய்துள்ளார்.

பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் டீசண்ட், ஆஹா ஓஹோ என்றில்லை, பாபி தியோல் கேரக்டர் அவர் ஏன் இப்படி மாறினார் என்பதற்காக ஒரு காட்சி வைத்துள்ளார் வினோத், உண்மையாவே ஒரு கமர்ஷியல் படத்தில் இப்படி வில்லனுக்கு ஒரு பேக் ஸ்டோரி வைத்தது நன்று, ஆனால் அதற்காக அவர் இண்டர்நேஷனல் லெவலில் காட்டி எங்கெங்கோ கதையை கொண்டு சேன்றது, ஒரு கட்டத்திற்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிட்டது.

படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு விஜய் ப்ளாஷ்பேக் வரைக்குமே நன்றாக சென்றது, ஆனால் அந்த மதம் சார்ந்த சண்டை போஷன் படத்திற்கு முக்கியமாக இந்த கமர்ஷியல் களத்திற்கு கொஞ்சம் அந்நியமாகவே இருந்தது, அதை தவிர்த்து இருக்கலாம்.

ஆனாலும் கிளைமேக்ஸ் விஜய் அதிரடி ஆக்‌ஷன் அதை தொடர்ந்து ரசிகர்களுகாக வைத்த அந்த சர்ப்ரைஸ் புட்டேஜ் இதெல்லாம் படம் முடியும் போது தளபதி விஜய்யை கொண்டாட வைக்கின்றது. மேலும் படத்தில் குழந்தைகளுகாக விஜய் பேசும் ஒரு காட்சி மிக முக்கியமான ஒன்று, அப்படியான காட்சியை குழந்தைகள் பார்க்க முடியாதப்படி A சான்றிதழ் வாங்கிய பெரும் வருத்தம்.

டெக்னிக்கலாக அனிருத் பின்னணி சூப்பர் என்றாலும் விஜய்-அனிருத் காம்போ-விற்கு இருக்கும் கிக் இதில் இல்லை, அதோடு ஒளிப்பதிவு பல இடங்களில் நன்றாக இருந்தாலும் சில செட் ஒர்க் காட்சிகளில் கொஞ்சம் செயற்கையாக இருந்தது.

க்ளாப்ஸ்
விஜய் விஜய் விஜய்..இதற்கு மேல் என்ன வேண்டும்.

பல்ப்ஸ்
இரண்டாம் பாதி நிறைய விஷயங்களை திணித்தது கொஞ்சம் திகட்ட ஆரம்பித்துவிட்டது.

மொத்தத்தில் ஜனநாயகன் விமர்சனம் கடந்து விஜய் ரசிகர்கள் கொண்டாடும் படமாக வந்துள்ளது, இருந்தாலும் இது ஒரு  நல்ல Farewell படம் கிடையாது.. ஜனநாயகம் ஏமாற்றம்.. 

2.25/5

விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்:-

Monday, 20 July 2026

SARANYA TURADI CUTE IMAGES 2...

Monday, 13 July 2026


 லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே முதல் மகளிர் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி.. 


இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஒருமுறை கூட தோற்காமல் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வரும் இந்திய அணி, கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகள், 3 டிராக்கள் மற்றும் ஒரே ஒரு தோல்வியுடன் உச்சத்தில் உள்ளது.


இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 58 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 57 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.


இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.


தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.


இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.


இறுதியில் ரிச்சா கோஷின் 50 ரன்களுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஏமி ஜோன்ஸ் 54 ரன்களும், சோபி எக்லெஸ்டோன் 50 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினாலும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.


இந்திய அணி தரப்பில் சினே ரானா 4 விக்கெட்டுகளையும், சாயலி சத்காரே, கிரான்டி கௌட் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 270 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.. 









சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 142 ஆண்டில் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் மெகா வெற்றி:-

Saturday, 10 January 2026




சுதா கொங்கரா இயக்கிய "பராசக்தி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம். சென்னை.

1960 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.

புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வரும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அப்படி ஒரு போர.


அப்படி ஒரு போராட்டத்தின் போது ஒரு ரெயிலை வழிமறித்து சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர்கள் எரிக்கிறார்கள். அப்போது அந்த ரெயிலில் பயணிக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை நடக்கிறது. இதில் ரவி மோகனின் விரல் பறிபோகிறது..

இந்த சூழலில் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்று முதல் போராட்டத்தை கைவிடுகிறார். தன்னால் யாரும் பாதிப்பு அடைந்த 
விடக்கூடாது என்று போராட்ட உணர்வை தன் மனதிலேயே குழி தோண்டி புதைக்கிறார். அதே வேலை சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் துடித்துக் கொண்டிருக்கிறார்.


சில ஆண்டுகள் கடந்து போக சிவகார்த்திகேயன் தம்பி அதர்வாவும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கிறார். போராட்ட களத்தில் இருந்து தம்பியை பின்வாங்க செய்யும் முயற்சிகளில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இப்படியான சூழலில் மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பரிபோக அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா? சிவகார்த்திகேயனை, ரவி மோகன் சந்தித்தாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.


புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களும் பேசி கவனிக்க வைக்கிறார்.

ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்து கட்டி உள்ளார் பார்வையிலேயே கொலை வெறியை காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சி புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்.

அழகு பதுமையான ஸ்ரீலீலா நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் திறமையான கதாநாயகி தயார். போயா போ என்று அவர் சொல்வது அழகு. இதர நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்கள்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையும் பிரமாதம். பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.

உண்மைச் சம்பவங்களை நினைவு கூறும் வகையில், பரபரப்பான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் சுதா கொங்கரா. தவறாமல் பார்க்க வேண்டிய படம், மிக அருமையாக உள்ளது - 3.5/5.


"பராசக்தி"... தீ பரவியதா?- படம் எப்படி இருக்கு.. விமர்சனம்

Monday, 3 November 2025



















































































RUKMINI VASANTH CUTE IMAGES

Thursday, 18 September 2025




















CHAITRA REDDY CUTE IMAGES

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com