HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 19 October 2023

 



DHIVYA DURAISAMY CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2023/10/dhivya-duraisamy-cute-images.html

ஒரு பக்கம் விலங்குகளை காப்பாற்றுவது, இன்னொரு பக்கம் காபி ஷாப், மனைவி, குழந்தைகள் என சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் ஒரு நாள், தன் குழந்தைக்கு சிலரால் ஆபத்து நேரிட, எதிரில் நிற்கும் அத்தனை பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்துகிறார் பார்த்திபன். இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் கூட்டாளிகள் பார்த்திபனையும், அவனின் குடும்பத்தையும் கொல்ல முற்பட, அவர்களுடன் பெரும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார் பார்த்தி.

இதனிடையே பார்த்தியின் வாழ்க்கைக்குள் வரும் ஆண்டனி தாஸ் அங்கு இருப்பது பார்த்தி அல்ல லியோ என புது குழப்பத்தை உருவாக்குகிறார். அப்படியென்றால் உண்மையில் அங்கு இருப்பது பார்த்தியா, லியோவா என்ற கேள்விக்கான பதிலை கண்டு பிடித்தால் அதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. ஆம், அன்பு பொழியும் அப்பாவாக, பொறுப்புள்ள கணவனாக, குடும்பத்துக்காக பொங்கி எழும் பார்த்தியாக, கில்லாடி லியோவாக நடிப்பில் வேரியேஷன் புகுத்தி வியப்பு காட்டுகிறார். குறிப்பாக லோகேஷின் பிரேமில் விஜய் வரும் சில இடங்கள் கிளாஸ் ரகத்தை சேர்ந்தவை. விஜய், திரிஷா காதலில் அவ்வளவு ஆழம் இருந்தது.

ஆனால் அந்த காதலை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்து இருக்கலாம். அர்ஜுனின் தர லோக்கல் ஆக்ஷன் ரசிக்கும் படியாக இருந்தது. ஆண்டனியாக வரும் சஞ்சய் தத் வழக்கமான வில்லனிசத்தில் மிரட்டுகிறார். கவுதம் மேனன் அவருக்கே உரித்தான கிளாஸ் பாணியில் கலக்கி இருக்கிறார். இதர கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன.

முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார். ஆம், லோயோவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் வைத்த காரணம் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதை கொஞ்சம் மறக்கடித்து திரையை நோக்கி நம்மை இழுத்து செல்வது விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் தான். பின்னணி இசையில் அனிருத் முழு பலம் கொடுத்து தாங்கி இருக்கிறார். எல்.சி. யூ கனெக்ட் சுவாரசியம் கூட்டியது. இதற்கு முன்னதாக லோகேஷ் படங்களில் இரண்டாம் பாதி எப்போதுமே தாண்டவமாக அமைந்து இருக்கும்.

ஆனால் அது இதில் மிஸ்ஸானது சற்று ஏமாற்றம் தான். இருப்பினும் ஆக்ஷனில் லோகேஷ் மற்றும் அன்பறிவு மாஸ்டர்ஸ் மேற்கொண்ட மென கெடல் பாராட்டுக்கு உரியது. மனோஜ் ஒளிப்பதிவு அபாரம். கதையின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், லியோவை கொண்டாடி இருக்கலாம்.நீங்கள் ‘விக்ரம்’ அல்லது ‘கைதி’யை எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் என்பது உறுதி.

இந்த தீவிர குற்றபடம் வெகுஜனங்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் இருக்கலாம். லோகேஷ் கனகராஜ் ஆண்ட்ரூ கார்ஃபீல்டு போல நடந்து கொண்டார், மேலும் 1477 பேட்டிகளில் எதையும் வெளிப்படுத்தவில்லை, திரைப்படம் LCU இன் கீழ் வருகிறது என்பது வெளிப்படையானது. கைதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் நெப்போலியன் இங்கே காவலராக வருகிறார், அது எப்படி இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாதியில், த்ரிஷாவும் ஜிவிஎம்மும் விஜயின் பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். டிசோசா (மன்சூர்) ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். லியோ தாஸின் நுழைவு சிறிது வேகத்தை எடுத்தது, ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. லியோ தாஸ் திருமலை விஜய்யை நிச்சயம் நினைவுபடுத்துவார். விஜய்யின் தங்கையாக மடோனா செபாஸ்டியன் அமெச்சூர். படத்தின் ஒரே பாசிட்டிவ் காரணி ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். வழக்கம் போல், லோகி இரண்டு ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார், ஆனால் அது விக்ரம் போல போதுமான வரவேற்பைப் பெறவில்லை. ‘தாமரை பூவுக்கும்’ பாடலைப் பயன்படுத்தினார்.ஆமை வேகம்.. பொறுமை சோதிக்கும் இரண்டாவது பாதி படத்தில் செண்டிமெண்ட் சீன் நம்புற மாதிரி இல்ல !மொத்தத்துல விஜய் ரசிகர்களை தவிர யாருக்கும் பிடிக்கல போல 

மொத்தத்தில்- லியோ படத்தில் LCU இல்ல பார்த்த நமக்கெல்லாம் ICU இருக்கு !

மதிப்பீடுகள்: ⭐ ⭐  ✰ 2.25/5


LEO MOVIE REVIEW :விஜய் நடித்த லியோ படத்தின் முழு விமர்சனம் இதோ !

Sunday 15 October 2023

























 

DHIVYA DURAISAMY CUTE IMAGES

Wednesday 11 October 2023

 தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் தல அஜித் குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வந்து இருந்தாலும் தற்போது தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

 விடாமுயற்சி படத்தை அடுத்து, தல அஜித், விடுதலை பட தயாரிப்பாளர் Elred Kumar Santhanam RS.Infotainment தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. 

இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது  P.S. Mithran இவர்களில் ஒருவர் இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. இப்படத்திற்காக தல அஜித்துக்கு,  ரூ 170 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Bike ride முடித்த பிறகு இந்த படத்தில் அஜித் நடிக்கப்போவதாகவோம் இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் விரைவில் இது பற்றி அதிகார்வபூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...



தல அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..பல மடங்கும் சம்பளத்தை உயர்த்திய தல:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com