HEADER

... (several lines of customized programming code appear here)
Showing posts with label BIGG BOSS. Show all posts
Showing posts with label BIGG BOSS. Show all posts

Sunday, 20 February 2022

 


பிக் பாஸ் ஷோவை தமிழில் கடந்த ஐந்து வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். ஓடிடி எக்ஸ்க்ளுசிவ் ஷோவான பிக் பாஸ் அல்டிமேட் ஷோவையும் கமல் தான் மூன்று வாரங்களாக தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் திடீரென ஷோவில் இருந்து வெளியேறி இருக்கிறார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த முடிவெடுக்க என்ன காரணம் என கமல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்திற்காக தேதிகள் ஒதுக்கு வேண்டி இருப்பதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.

அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறினாலும் பிக் பாஸ் 6வது சீசனுக்கு நிச்சயம் வருவேன் என அவர் தெரிவித்து உள்ளார். 

கோவிட் பெருந்தொற்றுப் பரவலும் அதனையடுத்து வந்த லாக் டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கோவிட் பெருந்தொற்று என்னையும் தாக்கியபோது, மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்தேன். குணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். பிக்பாஸ் சீசன் 5 வழக்கம்போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும். மக்களை மகிழ்விக்க கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்கு பிக் பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்ட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால். பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும், கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்த காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் வருகிற 20ம் தேதி எபிசோடுக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விளங்கிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 இந்த முடிவை எடுப்பதில் விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் மிகச்சிறந்த முறையில் என்னோடு ஒத்துழைத்தார்கள். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.. 

இவ்வாறு கமல் குறிப்பிட்டு இருக்கிறார். 

Gallery Gallery


பிக் பாஸ் 6ல் சந்திக்கிறேன் - கமல் வெளியிட்ட அறிக்கை! திடீரென வெளியேற இது தான் காரணம் :-

Friday, 7 January 2022

 


பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து அமீரை குறிப்பிடாமல், மீதமுள்ள 5நபர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.

இந்நிலையில், இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வியாழக்கிழமை வாக்குகள் நிலவரம் படி,  பவனி (45% வாய்ப்பு) அல்லது தாமரை(55% வாய்ப்பு) உள்ளதாக  நாம் அறிவித்துஇருந்தோம்.

இந்தநிலையில் தாமரை, பவனியா விட குறைந்த வாக்கு பெற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது..

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர், வருத்தத்தில் ரசிகர்கள், வந்தது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு:-

Friday, 31 December 2021



விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் 2 வாரத்தில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் ராஜு, நிரூப், பிரியங்கா, சஞ்சீவ், அமீர், தாமரை, பாவனி, சிபி ஆகிய 8 பேரும் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

எனவே கடந்த வாரம் வருண், அக்ஷரா இருவரும் திடீரென்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.

இன்னிலையில் தற்போது இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆனா சஞ்சீவ் மக்களிடம் குறைவான ஓட்டுக்களைப் பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளார். எனவே அவரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சிபி மற்றும் அமீருடன் போட்டி போட்ட சஞ்சீவ் நூலிழையில் தோற்றுவிட்டார். ஒருவேளை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் முன்னேறி சென்றிருந்தால் எலிமினேஷனிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு நடக்காததால் குறைந்த வாக்குகள் பெற்று சஞ்சீவ் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..

இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Friday, 24 December 2021

 



வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.

அவர் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல் மக்களுக்கு தேவையான சில கருத்துக்கள், புத்தகங்களை கூறுவார். பொது விஷயங்கள் பற்றி முக்கிய விஷயங்கள் எல்லாம் பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.

இந்த வாரமும் அவரது எபிசோடுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷாரா தேர்வாகியுள்ளனர்.

முதல் இடத்தில் பிரியங்கா இருக்க கடைசி இடத்தில்   வருண் மற்றும் அக்ஷாரா உள்ளார்கள். எனவே, அக்ஷாரா மற்றும் வருண் குறைந்த வாக்குகள் பெற்று.  இந்த இருவரும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..


இந்த வாரம் டபுள் எலிமினேஷன், பிக்பாஸில் இருந்து வெளியேறிய இருவர் யார்?- வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Friday, 17 December 2021

 



பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக எந்த சண்டையும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கிறது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட கடுமையாக போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் நாமினேஷன் நடைபெறுகிறது.

அதில் போட்டியாளர்கள் இரண்டு, இரண்டு பேராக வந்து தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபரின் போட்டோக்களை காட்ட வேண்டும். பிக்பாஸின் இந்த அறிவிப்பு படி போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபர்களை கூறுகின்றனர்.

பின்னர் அதன் முடிவுகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவிக்கிறார். அதில் அபிநய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேட் ஆனவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அப்போது ராஜு தன்னுடைய பெயரை அறிவிக்கும் முன்பே எழுந்து விடுகிறார்.

ஏனென்றால் சஞ்சீவின் மகள் பிக்பாஸ் வீட்டை பார்க்க வேண்டும் என்பதற்காக ராஜு சஞ்சீவை காப்பாற்றிவிட்டு தன்னை நாமினேட் செய்து கொண்டார். அவரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பவானியும் அமீரை காப்பாற்றினார்.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட இந்த ஆறு பேரில் பிரியங்கா மற்றும் ராஜூவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். அவர்களை தொடர்ந்து பவானி, அக்ஷரா, வருண் இவர்களும் கணிசமான ஓட்டுகளை பெற்று நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

ஆனால் பல நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக தராமல் இருக்கும் போட்டியாளர் என்றால் அது அபிநய் மட்டும்தான். பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் அவர் மற்ற போட்டியாளர்கள் அளவுக்கு அதிக ஈடுபாடு காட்டவில்லை.

இதுநாள் வரை அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் முக்கியமான மற்றும் கடுமையான போட்டியாளர்கள் நிறைய பேர் இருப்பதால் அபிநய் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புவந்துள்ளது..

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.. இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Friday, 10 December 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறினர்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்களில் நிரூப் மற்றும்  Imman அண்ணாச்சி evictedஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லாமல் ஒரே ஒரு எலிமினேஷன் மட்டும் நடந்தால் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. ‌‌‌‌‌

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான், ஒரு வேளை, டபுள் எலிமினேஷன் இருந்தால் இந்த வாரம் வெளியேறப் போகும் இரண்டு நபர்கள் இவர்கள் தான். ஓட்டிங் நிலவரம் இதோ:-

Friday, 3 December 2021

 


வினோத் தெறிக்க விட்டுட்டீங்க.. வலிமை பார்த்துட்டு அஜித் சொன்ன விமர்சனம்;தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு:-https://e-funandjoyindia.blogspot.com/2021/12/blog-post_5.html


கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கொரோனா தொற்றில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள கமல் ஹாசன், கண்டிப்பாக இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்

அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியேறி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் இந்த வாரம் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வார இறுதியில் என்ன நடக்கிறது என்று.


இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான்.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Friday, 26 November 2021

 


பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

தற்போது பிக்பாஸ் குறித்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-:-

Saturday, 20 November 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அவர் அறிவிப்பார்.

இந்த வார நாமினேஷனில் இறந்தவர்களில் இசைவாணி மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தற்போது வரை கடைசி இடத்தில் இசைவாணி தான் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நிரூப் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் கடைசி இடம்பிடித்த இசைவாணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Thursday, 21 January 2021

 



Aari First Emotional Video to his fans- என்ன மன்னிச்சிடுங்க| Bigg Boss 4:- https://youtu.be/DFPjnqDusQo


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது. கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனிலும் கமல் தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த சீசனில் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். மேலும், நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார்.

கமலின் இந்த House Of Khaddar என்ற புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சித்தும் வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் போட்டியாளராக கலந்துகொண்ட சுச்சித்ரா, தனக்கு கொடுத்தது கதர் துணியே இல்லை அது சிந்தடிக் துணி என்றும் கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கைப்பாவை குரு என்றால் அது கமல் தான். அவரின் முட்டாள் தனமான பிராண்ட் கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை என்பது தெரியும். அதை என்னை அணிய வைத்து அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள். என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல். மோசமான குணம் கொண்டவர். ஒரு ரூபா கூட செலவு பண்ணல.

தீந்து போச்சு கணக்கு. அவர் ஒன்னுத்துக்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை என்று மிகவும் கடுமையாக கமல் மற்றும் அவரின் புதிய பிராண்டை விமரித்து உள்ளார் சுச்சித்ரா. இப்படி ஒரு நிலையில் கமல் ஆரம்பித்துள்ள House Of Khaddar பிராண்ட்டின் இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள House Of Khaddar ‘சுச்சத்ிராவிற்கு கொடுத்தது கதர் ஆடை தான் ஆனால், அவர் விரும்பியவாறு அவர் அணிந்த சட்டை மட்டும் ‘H&M பிராண்ட் சட்டை தான்’ என்று பதில் அளித்துள்ளது. இதில் இருந்தே சுசித்ரா கூறியது பொய் என்று அம்பலமாகியுள்ளது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சுச்சியும் ஒருவர். சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

கதர் ஆடை கொடுத்த கமலை விமர்சித்த சுச்சி - கமலின் 'House Of Khaddar' பதிலடி.:-

Thursday, 14 January 2021

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. ஆரி, சோம், கேபி, ரம்யா, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய 6 பேர்களில் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமானது என்பதும் தெரிந்ததே அந்த வகையில் தற்போது அகில இந்திய அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர் யார் என்பது குறித்த ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

இதில் பிக்பாஸ் தமிழ் போட்டியாளரான ஆரிக்கு அகில இந்திய அளவில் 5வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் அகில இந்திய அளவில் 5வது இடம் பெற்றுள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே ஒரு பெருமை என்பது மட்டுமின்றி ஆரியின் ஆர்மியினர் தங்களது காலரை தூக்கிக்கொண்டு இதனை கொண்டாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற போட்டியாளர்களின் முதல் 6 பேர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. சித்தார்த் சுக்லா
2. அபிஜித்
3. ஆசிம் ரியாஸ்
4. ஷெனாஜ் கில்
5. ஆரி அர்ஜூனன்
6. ரூபினா திலைக்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரிக்கு 5வது இடம்: பரபரப்பு தகவல்:-

Monday, 11 January 2021




 பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது ஆரி "எனக்கு எங்கே எல்லோரையும் பிடிக்கும், ஆனால் அவர்கள் நான் இதுவரை செய்தது அனைத்தும் போட்டிக்காகவும், பொறாமைக்காகவும் செய்தேன் என கூறுகின்றனர்".

இதற்கு பதிலளித்த நிஷாநான் உங்களுடன் 70 நாட்கள் இந்த வீட்டில் இருந்துளேன், நீங்கள் ஒரு நாள் கூட பொறாமையில் செய்ததில்லை" என கூறியுள்ளார்.

#BiggBossUNSEEN - இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ்






முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத ஆரி, என்ன கூறியுள்ளார் பாருங்கள்:- #Biggboss4 #Aari

Friday, 8 January 2021

தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா,  ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா மற்றும் ஆஜீத் என பத்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா, கேப்ரியெல்லா மற்றும் ஷிவானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் (7.8 CR VOTES) முதல் இடத்தை பிடித்துள்ளார். கேப்ரியெல்லா, ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல்  ரியோக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்,ரியோ இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்

இதன் காரணமாக ஷிவானி, ரம்யா விட குறைவான வாக்குபெற்றதால் ஷிவானி வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..





ரியோவும் இல்ல, சோமும் இல்ல. இந்த வாரம் வெளியேறியது இவரா ?வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

Saturday, 2 January 2021

  தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா,  ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா என ஒன்பது பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சோம், ரம்யா, ஷிவானி, கேப்ரியெல்லா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் சோம் அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கேப்ரியெல்லா, ஷிவானி மற்றும் ஆஜீத் ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல்  ரம்யாவுக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்,ரம்யா இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்

இதன் காரணமாக ஆஜீத், ஷிவானி விட குறைவான வாக்கு பெற்றதால் ஆஜீத் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..

முதல் ரெண்டு நாட்கள் ரம்யா குறைந்த வாக்குகள் பெற்று இருந்தார், அவங்களுடைய சகோதரர் BIGG BOSS HOUSE KU வந்து ரம்யா விடம் நீ இந்த வாரம் வெளிய வந்த உன் தவறு இல்லை என்று கூறினார். ஆதற்கு ரம்யா இந்த வாரம் நான் வெளிய வர வாய்ப்பு இருக்க என கேட்பார். இதன் பிறகு தான் ரம்யாக்கு வோட்டிங் கூட ஆரம்பித்தது..



இழுபறியில் பிக் பாஸ் ஓட்டிங் – கடைசி விளும்பில் இரண்டு போட்டியாளர்கள். இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா ?:-

Tuesday, 29 December 2020



பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை.

காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த ஒரு பதிவும் போடவில்லை.

இந்த நிலையில் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதாவின் தந்தை திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம், புகைப்படங்கள் இதோ:-

Saturday, 26 December 2020

 தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா,  ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா என எட்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, ஷிவானி, கேப்ரியெல்லா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கேப்ரியெல்லா, ஆஜீத் மற்றும் அனிதா ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷிவானி பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்  கேப்ரியெல்லா, ஆஜீத் மற்றும் அனிதா விட அதிக வாக்கு வந்துள்ளதாம்.

இதன் காரணமாக அனிதா, ஆஜீத் விட குறைவான வாக்கு பெற்றதால் அனிதா வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..



இந்த வாரம் வெளியேற போவது இவரா ?வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

Saturday, 19 December 2020

 தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா,  ரமேஷ் மற்றும் நிஷா என ஏழு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஷிவானி, ஆஜீத் மற்றும் அர்ச்சனா ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சோம் பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்  ஷிவானி, ஆஜீத் மற்றும் அர்ச்சனா விட அதிக வாக்கு வந்துள்ளதாம்.

இதன் காரணமாக அர்ச்சனா, ஆஜீத் விட குறைவான வாக்கு பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..




அனிதாவும் இல்ல, ஷிவானியும் இல்ல. இந்த வாரம் வெளியேறியது இவரா ?வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

Saturday, 12 December 2020

 



பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் ஷெட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேபோல் போட்டியாளர்களில் பாதிக்குமேல் இன்னும் பிக்பாஸ் வீட்டிலேயே இருப்பதும் ரசிகர்களை குழப்பி வந்தது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த வண்ணம் இந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. ஆம் நிஷா மற்றும் சோம் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இழுபறியில் பிக் பாஸ் ஓட்டிங் – கடைசி விளும்பில் இரண்டு போட்டியாளர்கள். இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா ?:-

Saturday, 5 December 2020

 



தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா என ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அனிதா மற்றும் சனம் செட்டி ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷிவானிக்கு பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்  அனிதா மற்றும் சனத்தை விட அதிக வாக்கு வந்துள்ளதாம்.

இதன் காரணமாக சனம் அனிதாவிட குறைவான வாக்கு பெற்றதால் சனம் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்


ஆஜித்தும் இல்ல, ஷிவானியும் இல்ல. இந்த வாரம் வெளியேறியது இவரா ?வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

Saturday, 28 November 2020

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர்.

இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக ‘Nomination Topple Card’ என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர்.

இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த ‘Nomination Topple Card’ கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் ஆரிக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.த வாரம் ஆரி மற்றும் பாலாஜியை தவிற மற்ற 5 பேருக்கும் குறைவான வாக்குகள் தான் வந்தது. அதிலும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் ஆரம்பத்தில் சம்யுக்தா மற்றும் நிஷாவிற்கு குறைவான வாக்குகள் கிடைத்தது. எனவே, இவர்கள் இருவரில் யாரவாது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


நிஷாவும் இல்ல, சம்யுக்தாவும் இல்ல. இந்த வாரம் வெளியேறியது இவரா ?

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com