தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா, ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா என எட்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, ஷிவானி, கேப்ரியெல்லா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கேப்ரியெல்லா, ஆஜீத் மற்றும் அனிதா ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷிவானி பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும் கேப்ரியெல்லா, ஆஜீத் மற்றும் அனிதா விட அதிக வாக்கு வந்துள்ளதாம்.
இதன் காரணமாக அனிதா, ஆஜீத் விட குறைவான வாக்கு பெற்றதால் அனிதா வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..
Post a Comment