தஜ்ஜால் தொடர் - பதிவு- 36
தஜ்ஜாலும் போர்களும்
கடந்த பதிவில் தூதருக்கு பின் நடந்த அதிகார மோதல்களை கண்டோம்.இதன் தொடர்ச்சியை இப்போது காணலாம்.
பல சர்ச்சைகளுக்கு பின் அபூபக்கர் அவர்களும் அவரைத்தொடர்ந்து உமர் அவர்களும் அவரை தொடர்ந்து உத்மான் அவர்களும் ஆட்சி தலைவராக செயல்பட்டனர்.
உத்மான் அவர்கள் கொலை செய்யப்பட்ட விதத்தை நாம் காணும் போது அன்றைய முஸ்லிம்கள் எந்த அளவிற்கு மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்கள் என்பதை அறியலாம்.
உத்மானின் ஆட்சிக்கெதிராக, கூபா மற்றும் பஷ்ரா பகுதியிலிருந்து வந்த கிளர்ச்சியாளர்கள் உத்மானின் வீட்டை முற்றுகையிட்டனர்.
உத்மானின் ஆதரவாளர்கள், போருக்கு தயாரான போது முஸ்லிம்களுக்கிடையே ரத்தம் சிந்தப்படுவதை விரும்பாத உத்மான், போரைத் தடுத்தார்.
உத்மானின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்த போதும், உயிருக்கு அச்சுறுத்தல் உறுதியான பின்பும், முஸ்லிம்களுக்கிடையேயான யுத்தத்தை தடுத்த இவரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
உத்மான் அவர்களின் வீட்டின் பின்புறமாக நுழைந்த கிளர்ச்சியாளர்கள் உத்மானை கொலை செய்தனர்.
உத்மானின் சடலம் மூன்று நாட்களாக அவருடைய இல்லத்திலேயே விடப்பட்டது.
அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு பக்கீ என்னும் அடக்கத்தலத்திற்கு கொண்டு வந்த போது அங்கு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இறுதியில் வேறு வழியில்லாமல் யூதர்களின் அடக்கத்தலத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
ஆட்சித்தலைவரை,சுவர்க்கம் உறுதி செய்யப்பட்டவர் என்று தூதரால் அறிவிக்கப்பட்ட நபித்தோழரை அடக்கம் செய்ய மறுத்த முஸ்லிம்களின் காட்டுமிராண்டிதனத்திற்கு காரணமாக அமைந்தது அவர்களின் அதிகார வெறி தான்.
அதிகார வெறி தலைவிரித்து ஆடிய இந்நேரத்தில் கூட ஷியா-ஸன்னி என்ற பிரிவு ஏற்படவில்லை.
இதற்கு பின் அலி அவர்கள் நான்காவது கலிபாவாக பொறுப்பேற்றார். இவர் கூபாவை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார்.
உத்மான் அவர்களின் கொலைக்கு அலி தான் காரணம் என்று கூறி, அலி அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார் சிரியாவின் ஆளுநர் முஆவியா.
எனவே முஆவியாவிற்கும்,அலி அவர்களுக்கும் இடையே ஷிப்பின் யுத்தம் (யூப்ரடிஸ் நதியின் சிரிய நாட்டின் கரையில்)மூண்டது.இந்த யுத்தத்தில் 65000 முஸ்லிம்கள் மாண்டனர்.
இறுதியில் முஆவியா சிரிய பகுதியில் தன் நிர்வாகத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.
இதனிடையே அலி அவர்களுக்கும் காரிஜியா இனத்திற்கும் ஈராக் பகுதியில் பகை மூண்டது.
ஒரு நாள் அலி தொழுது கொண்டிருக்கும் போது காரிஜியா ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
தொழுது கொண்டிருந்த ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொலை செய்ய காரணமாக அமைந்தது அதிகார வெறி தானே தவிர கொள்கை வேறுபாடல்ல.
அலி அவர்களுக்கு பின் அவரின் மகன் ஹசன் அவர்கள் கலிபாவாக பொறுப்பேற்றார்.ஆனால் இதை விரும்பாத சிரியாவின் ஆளுநர் முஆவியா போருக்கு தயாராகி கொண்டிருந்தார்.
ஹசன் அவர்கள் சிறுவனாக இருந்த போது,இறைத்தூதர் அவர்கள் ஹசன் அவர்களை சுட்டிக்காட்டி இவர் எதிர்காலத்தில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் மாபெரும் செயலை புரிவார் என்று முன்னறிவித்தார்கள்.
முன்னறிவிப்பின் படி ஹசன் அவர்கள் முஆவியா உடன் உடன்படிக்கை செய்து கொண்டு தன் பதவியை துறந்தார்.
பதவி பித்தம் தலைக்கேறியிருந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த ஹசன் அவர்கள்,பதவி துறந்த செயல் என்பது, அவரின் ஈமான் என்பது எந்த அளவிற்கு உறுதியானது என்பதை நமக்கு காட்டுகிறது.
ஒப்பந்தத்தின் படி
1.முஆவியா மக்கள் வரிப்பணத்தை தன் செலவிற்கு பயன்படுத்தக்கூடாது.
2.தன்னை முஸ்லிம்களின் தலைவன் என்று அழைத்துக்கொள்ளக்கூடாது.
3.ஹசன் அவர்களின் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
4.முஆவியா தனக்கு பின் யாரையும் ஆட்சியாளராக நியமிக்கக்கடாது.
இந்த ஒப்பந்தத்தின் விதிகள், முஆவியா எந்த அளவிற்கு மோசமானவராக நடந்து கொண்டார் என்பதை நன்றாக விளக்குகிறது.
ஒப்பந்த விதிகளை முஆவியா காப்பாற்ற விரும்பவில்லை.
தன்னுடைய மகன், கொடியவன் யஜித்தை ஆட்சியாளராக நியமிக்க விரும்பினார்.
இந்த திட்டம் நிறைவேறவேண்டுமானால் ஹசன் கொல்லப்படவேண்டும்.
முஆவியா இந்த திட்டத்திற்கு ஹசன் அவர்களின் மனைவிகளில் ஒருவரையே பயன்படுத்தி கொண்டார்.விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு ஹசன் கொலை செய்யப்பட்டார்.
முஆவியா என்பவரை முஸ்லிம் என்று கூறவதை விட ரத்தம் குடிக்கும் மிருகம் என்று கூறுவதே சரியாக இருக்கும்.
தூதரின் மறைவிற்கு பின் முஸ்லிம்கள், தங்களின் பழைய குலப்பகை,தன் முனைப்பு,அதிகாரவெறி,உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி,தாங்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதை மறந்து தங்களுக்குள் போரிட்டனர் என்பது தான் கசப்பான உண்மை.
இன்று முஆவியாவின் அட்டூழியங்களை கண்டது போல நாளைய தினம் யஜித்தின் அயோக்கியத்தனத்தை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்...........
தஜ்ஜால் தொடர் - பதிவு- 35; தஜ்ஜாலும் போர்களும்; இனி மல்ஹமா யுத்தத்தின் போக்கை நாம் காண்பதற்கு முன் இஸ்லாமிய உலகத்தில் ஏற்பட உள்ள ஷியா-ஸன்னி யுத்தத்தை பற்றி முதலில் காணலாம்.ஏனெனில் மல்ஹமா யுத்தத்திற்கு முன்பு வரவுள்ள இப்போரால் இஸ்லாமிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு ஏற்பட உள்ளது. https://e-funandjoyindia.blogspot.com/2020/12/35.html?spref=tw
Post a Comment