தஜ்ஜால் தொடர்- பதிவு- 37 இஸ்லாத்தில் ஷியாமற்றும் ஸன்னி பிரிவு எவ்வாறு வந்தது? யாரால் உருவாக்கப்பட்டது
தஜ்ஜாலும் போர்களும்
நேற்றைய பதிவில் முஆவியா அவர்களின் கொடிய செயல்களை கண்டோம்.
தந்தை வழியில் மகன் செய்ததை இன்று காணலாம்.
முஆவியாவிற்கு பின் அவருடைய மகன் யஜித் ஆட்சித்தலைவனாக பொறுப்பேற்றான்.
ஒவ்வொரு ஆட்சித்தலைவரின் மறைவுக்கு பின்னும் புதிய ஆட்சி தலைவரை தேர்ந்தெடுக்க சில குழுக்கள் அமைக்கப்பட்டடோ, அல்லது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டடோ, தான் புதிய ஆட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அபுபக்கரும் சரி உமரும் சரி உத்மானும் சரி அலியும் சரி இவ்வாறு தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முஆவியாவும் பல நிபந்தனைகளுடன் தான் ஆட்சியில் அமர்ந்தார்.ஆனால் யஜித் வகையில் மேற்சொன்ன எந்த முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வாரிசுரிமையின் அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாத யஜித்
பொறுப்பேற்றான்.
இதை ஏற்றுக்கொள்ளாத அலியின் இளைய மகன் ஹுசைன் அவர்கள்,யஜித்தை எதிர்ப்பதற்கு கூபா நகர் மக்களின் அழைப்பை ஏற்று தமது மதீனா நகர ஆதரவாளர்களுடன் கூபா நகர் நோக்கி சென்றார்.
கூபா நகர் நோக்கி செல்லும் வழியிலேயே ஈராக்கின் கர்பலா பகுதியில் ஹுசைன் அவர்கள்,யஜித் படையினரால் வழிமறிக்கப்பட்டார்.
கர்பலா யுத்தத்தின் முடிவில் ஹுசைன் கொலை செய்யப்பட்டார்.
வாரிசுரிமை என்ற கேட்டிற்கு எதிராக போராடிய மாமனிதரின் தலை வெட்டப்பட்டு யஜித்திடம் சமர்பிக்கப்பட்டது.
ஹுசைன் அவர்களின் வெட்டப்பட்ட தலையின் உதட்டு பகுதிகளில்,யஜித் கூரான குச்சியை கொண்டு குத்தி விளையாடிய செய்திகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
இந்த கர்பலா யுத்தத்தின் முடிவில் தான் ஷியா என்ற கோட்பாடு அமைப்பு வடிவம் பெற்றது.
ஹுசைன் அவர்களின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு இஸ்லாத்தில் புதிய விசித்திரமான கோட்பாட்டை முன்மொழிந்தனர்.
அதன்படி இஸ்லாமிய அரசின் ஆட்சி பொறுப்பு என்பது தூதரின் குடும்பத்தினருக்கு,ரத்த உறவுக்கு மட்டுமே உரியது என்ற கோட்பாட்டை உருவாக்கியது.
வாரிசுரிமைக்கு எதிராக போராடிய ஹுசைனின் ஆதரவாளர்கள் தூதரின் வாரிசுகளுக்கு மட்டுமே, ஆட்சி பொறுப்பு உரியது என்ற கோட்பாட்டை உருவாக்கினர்.
அவர்களின் கோட்பாட்டின் படி அபுபக்கரின் கிலாபத்தும் உமரின் கிலாபத்தும் உத்மானின் கிலாபத்தும் சட்ட விரோதமானது இஸ்லாத்திற்கு எதிரானது.
அலி அவர்களின் கிலாபத் மட்டும் தான் முறையானது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த விசித்திரமான கோட்பாட்டை முன்மொழிந்த மக்களே தங்களை ஷியாக்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.
கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஸன்னி என்று அறியப்பட்டனர்.
யஜித்திற்கு பின் அவன் மகன் இரண்டாம் முஆவியா ஆட்சி பொறுப்பை ஏற்றான்.
சுருக்கமாக சொல்வதாக இருந்தால் அரசு என்ற பொதுச்சொத்தை குடும்பச்சொத்தாக மாற்றிக்கொண்ட யஜித்தும் இரண்டாம் முஆவியாவும் ஸன்னி பிரிவை சார்ந்தவர்கள்.
ஆட்சி அதிகாரத்தை அடைவதற்காக இஸ்லாத்தில் புதிய வாரிசுரிமை கோட்பாட்டை உருவாக்கி, பாரசீக பகுதிகளிலே ஆட்சியை அமைத்தவர்கள் ஷியாக்கள்.
ஆக மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுதல் என்ற நோக்கில் நடைபெற்ற யுத்தங்களும் அதன் விளைவாக ஏற்பட்ட அமைப்பு பேதங்களும் தான் ஷியா-ஸன்னி என்ற பிரிவை இஸ்லாத்தில் உருவாக்கியது.
மார்க்கத்தை உடைக்கக்கூடாது என்று இறைவன் குர்ஆனில் கட்டளையிடுகிறான்.
ஆனால் அதிகாரத்திற்காக நம் முன்னோர்கள் மார்க்கத்தை ஷியா-ஸன்னி என்று உடைத்தார்கள்.
உலக அளவில். ஷியா-ஸன்னி என்ற பேதம் இருப்பதை போல உள்ளூர்களிலும் மத்ஹப்புகள் வடிவிலும் ஜமாத்கள் வடிவிலும் பல பிரிவுகள் இருக்கின்றன.
தான் முஸ்லிம் என்பதை மறந்து விட்டு தன்னை எவர் ஷியா அல்லது ஸன்னி என்று கூறிக்கொள்கிறாரோ அது போல எவர் தன்னை தப்லீக் அல்லது தவ்ஹீத் அல்லது சுன்னத் என்று அடையாளப்படுத்திக்கொண்டு பிரிவை தூண்டுகிறாரோ அவர்கள் அனைவரும் இறைக்கட்டளையை புறக்கணிப்பவர்களே மார்க்கத்தை உடைப்பவர்களே.
வீட்டில் தொழுதுக்கொள்ள வேண்டிய ,எண்ணிக்கை வரையறையற்ற,தராவிஹ் தொழுகைக்கு எண்ணிக்கையை வரையறுத்து,அதை பள்ளியில் தொழுது அதற்கு 8ரக்ஆத்?20ரக்ஆத்?என்று மோதிக்கொண்டு பல ஜமாத்கள் பிறந்துள்ளதும், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் அதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் தானே தவிர மார்க்கத்தை தூக்கி நிறுத்த அல்ல.
இன்று இஸ்லாத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் காரணம் அதிகார வெறி தான்.
ஆகையால் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் தன்னை ஷியா என்றோ ஸன்னி என்றோ கூறிக்கொள்ளக்கூடாது.
பிரிவுகளை ஏற்படுத்தி நாம் போரிட்டுக்கொண்டால் நமக்கு நரகம் நிச்சயம்.
ஏன் ZIONISTகள்(தஜ்ஜாலின் அடியாட்கள்) இஸ்லாமிய உலகில் ஷியா-ஸன்னி போரை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை பற்றியும் இதில் அவர்களுக்கு என்ன லாபம் என்பதை பற்றியும் நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்...........
தஜ்ஜால் தொடர் - பதிவு- 36 தஜ்ஜாலும் போர்களும் கடந்த பதிவில் தூதருக்கு பின் நடந்த அதிகார மோதல்களை கண்டோம்.இதன் தொடர்ச்சியை இப்போது காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/36.html?spref=tw
Post a Comment