தஜ்ஜால் தொடர் பதிவு- 40
தஜ்ஜாலும் போர்களும்
கடந்த பதிவில் மல்ஹமா யுத்தத்தில், யூப்ரடிஸ் நதிக்கரையில் நடைபெறும் சண்டை பற்றி கண்டோம்.இன்று மூன்று இஸ்லாமிய நாடுகளுக்கு தோல்வியை ஏற்படுத்தும் சண்டையை காணலாம்.
ஹதிஸ்களில் கீழ்க்காணும் செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஈராக் நாட்டின் பணம் மதிப்பிழக்கும்(செல்லாத்தாக்கப்படும்)
சிரியா நாட்டின் பணம் மதிப்பிழக்கும்.
எகிப்து நாட்டின் பணம் மதிப்பிழக்கும்.
நமது இந்த தஜ்ஜால் தொடரில் காகிதப்பணத்தை பற்றி விளக்கும் போது,இன்றைய காகிதப்பணத்தின் மதிப்பு என்பது அரசாங்கத்தின் உத்தரவாதத்தை பொறுத்தது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.
எனவே இன்றைய தினம், ஒரு நாட்டின் அரசாங்கத்தை வீழ்த்திவிட்டால் அந்த நாட்டின் பணம் இயல்பாகவே வீழ்ந்துவிடும்.
ஹதிஸின் படி ஈராக்,சிரியா,எகிப்து போன்ற நாடுகள் வீழ்த்தப்படும்.
சில மார்க்க அறிஞர்கள் இந்த சண்டைகள் மல்ஹமா யுத்தத்துடன் தொடர்பற்றது என்றும் இது ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்துவிட்டதாகவும் கருதுகிறார்கள்.
ஆனால் அவர்களின் இந்த கருத்து கீழ்க்கண்ட காரணங்களால் தவறானதாகும்.
1.எகிப்து நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்ற ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை, அமெரிக்காவானது உள் நாட்டு கலகத்தை ஏற்படுத்தி தான் அகற்றி இருக்கிறதே தவிர.போர் தொடுத்து வெற்றி பெறவில்லை.எகிப்து நாட்டின் காகிதப்பணத்தின் மதிப்பு குறைந்திருந்தாலும் அது அழிந்துவிடவில்லை.
2.சிரியா இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறதே தவிர வீழ்ந்துவிடவில்லை.
3.ஈராக்கை அமெரிக்கா நேரடியாகவே வீழ்த்திருந்தாலும் அங்கு தன்னுடைய நேரடியான அரசை நிறுவவில்லை.மேலும் அதனுடைய வணிகத்தினை முழுமையாக தடுத்து ஈராக் நாட்டின் பணத்தை அழிக்கவில்லை.இன்றும் ஈராக் பணம் தான் அந்த நாட்டில் புழக்கத்தில் உள்ளது.
எனவே இந்த மூன்று சண்டைகளும் ஏற்கனவே நடைபெறவில்லை என்பதும் மல்ஹமா யுத்தத்தில் தான் வரவுள்ளது என்பதும் தெளிவாகிறது.
நான் இந்த தொடரில், முன்பே பல முறை கூறியிருக்கிறேன் ZIONISTகளின் முக்கிய லட்சியம் என்பதே கிரேட்டர்(Greater) இஸ்ரேல் என்பதாகும்.
அது என்ன கிரேட்டர்(Greater) இஸ்ரேல்?
நபி சுலைமான்(அலை) அவர்களின் ஆட்சிக்குட்பட்ட,பனூ இஸ்ராயில்களின் பூர்விக நிலம்.
பனூ இஸ்ராயில்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் என்பது ஜெருசலமும் அதை சுற்றிய ஷாம் பகுதி மட்டுமே.இப்பகுதி வரை மட்டும் தான் நபி சுலைமான்(அலை) அவர்களின் ஆட்சியும் இருந்தது.
ஆனால் இன்று ZIONISTகள் Greater Israel என்பதற்கான வரையறையையே மாற்றியிருக்கிறார்கள்.
இவர்களின் நவீன கூற்றுப்படி கிரேட்டர் இஸ்ரேல் என்பது நைல் நதிக்கும்(எகிப்திற்கும்) யூப்ரடிஸ் நதிக்கும்(ஈராக்கிற்கும்) இடைப்பட்ட நிலப்பரப்பாகும்.
அதாவது நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் பூர்விகப்பகுதிக்கும்,நபி யூசுப்(அலை) அவர்கள் வாழ்ந்த பகுதிக்கும் இடைப்பட்ட நிலம் தான் GREATER ISRAEL என்று வரையறுக்கிறார்கள் ZIONISTகள்.
நபி யூசுப்(அலை) பனூ இஸ்ராயில் குலத்தை சேர்ந்தவர் தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.ஆனால் அவர் என்ன எகிப்தின் ஆட்சியாளரா?அந்த நிலத்தில் பிறந்தவரா?இல்லை.எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டவர்.பின்பு அமைச்சராக உயர்ந்தவர்.அவ்வளவு தான்.நபி யூசுப்(அலை) அவர்களின் காலத்தில் பனூ இஸ்ராயில்கள் எகிப்தில் குடியேற தொடங்கினர்.இருப்பினும் இவர்கள் எகிப்தின் ஆட்சியாளர்களால் அந்நியர்களாக கருதப்பட்டு, குறிப்பாக பிர்அவ்னால் அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.பின்பு நபி மூஸா(அலை) அவர்களின் தலைமையில் எகிப்தை விட்டு தப்பினர்.
இதுவே எகிப்து பனூ இஸ்ராயில்களுக்கானது அல்ல என்பதை தெளிவாக விளக்குகிறது.
நமது தந்தை நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயிலா?.
பனூ இஸ்ராயில்களுக்கும்,பனூ இஸ்ஹாக்களுக்கும்,பனூ இஸ்மாயில்களுக்கும் அவர் தான் தந்தை.அப்படி இருக்க இப்ராஹிம் நபியின் பிறப்பிடமான ஈராக் எவ்வாறு பனூ இஸ்ராயில்களுக்கு மட்டும் சொந்தமாகும்?
ஆக மொத்தத்தில் ZIONIST நாய்களின் கிரேட்டர் இஸ்ரேல் என்ற வரையறையே தவறானது.
ZIONISTகள் தங்களின் Greater Israel வரையறை படி ஒரு வல்லரசை உருவாக்க வேண்டுமானால் அவர்கள் கண்டிப்பாக ஈராக்,சிரியா,எகிப்து ஆகிய நாடுகளை வீழ்த்த வேண்டும்.
எனவே ஹதிஸில் சொல்லப்பட்ட சண்டை, மல்ஹமா யுத்தத்தில் தொடர்புடையதாகும்.இன்னும் சொல்வதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு மாபெரும் தோல்வியை ஏற்படுத்தும் மல்ஹமா யுத்தத்தின் முதற்பகுதியாகும்.
எகிப்து,சிரியா,ஈராக் ஆகியவற்றின் தோல்வி கிரேட்டர் இஸ்ரேலை உருவாக்கும்.
2010 ஆம் ஆண்டில் லிபியாவின் மாபெரும் தலைவர் முஆம்மார் கதாஃபி அவர்களை NATO நாய்கள் வேட்டையாடிய போது எகிப்து வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் உதவவும் செய்தது.
ஆனால் என்று மல்ஹமா யுத்தம் தொடங்குகிறதோ அன்று இஸ்ரேல், எகிப்தை கிழக்கிலிருந்தும்,NATO மேற்கிலிருந்தும் தாக்கும்.எகிப்தின் தோல்வி தவிர்க்க முடியாததாக மாறும்.
மல்ஹமா யுத்தத்தில் முதற்பகுதியில் முஸ்லிம்கள் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது இமாம் மஹதி அவர்களின் வருகை ஏற்படும்.அவரின் வருகைக்கு பின் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றிகள் வந்தடையும்..
இன்ஷா அல்லாஹ் நாளைய பதிவில் இமாம் மஹதியை பற்றி காணலாம்.
பதிவு நாளை தொடரும்.......
தஜ்ஜால் தொடர் -பதிவு- 39 தஜ்ஜாலும் போர்களும் மல்ஹமா யுத்தம் பற்றி ஹதிஸ்களில் கீழ்கண்ட செய்திகள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/39.html?spref=tw
Post a Comment