HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 28 August 2021

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் அண்ணாத்த படம் 2021 தீபாவளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திற்கான இயக்குனர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ரஜினியின் 169 வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ரஜினி தன்னுடைய உடல் எடையை கருத்தில் கொண்டு இன்னும் குறைந்தது இரண்டு படங்கள்தான் செய்வார் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் ரஜினியின் கடைசி படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வியும் எழுந்தது.

அதை ரஜினி ஏற்கனவே முடிவு செய்துவிட்டாராம். தன்னுடைய கடைசி படத்தை தனக்கு ஏற்கனவே பல வெற்றிகளை கொடுத்த மூத்த இயக்குனர் ஒருவருக்குத்தான் தரப்போகிறேன் என தன்னுடைய வட்டாரத்திற்கு சஸ்பென்ஸ் வைத்து விட்டாராம்.

அது கண்டிப்பாக கேஎஸ் ரவிக்குமாராகத்தான் இருக்கும், அப்படி இல்லை என்றால் பி வாசுவாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் தங்களுடைய கணிப்புகளை பேச ஆரம்பித்துவிட்டனர்.

என்னுடைய கடைசி படம் அவருக்குத் தான்.. முடிவு செய்தார் ரஜினி:-

Monday 23 August 2021




Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





தாலிபான் வெற்றியும் மஹ்தி (அலை) திடீர் வருகையும்:-

Sunday 22 August 2021

 



உலகநாயகன் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் தில்லர் திரைப்படமான விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் மலையாள ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் இந்தியன் 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் "இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 60% முடிந்தது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். விக்ரம் முடிந்த பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்தியன் 2 உருவாகிறதா! உலகநாயகன் கமல் சொன்ன அதிரடி பதில்:-

Saturday 14 August 2021

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டாலும் அவரது மனதில் ஒரு கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருக்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் தொட்ட உயரத்தை பற்றி நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக ரஜினியும், 60 ஆண்டு காலமாக கமலும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக  வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் 70 வயதில் டாப் ஹீரோவாக வலம் வருவது ரஜினியும், கமலும் மட்டும்தான்.

எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு படங்கள் எவ்வளவு வெற்றிகள் கொடுத்தாலும் ரஜினிகாந்த் மனதிற்குள், எதனால் தனக்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்தது? அந்த அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்? என்ற சந்தேகம் இருப்பதாக நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கமலஹாசன் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாகும்போது அது என்னுடைய பொருள், அது தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எடுப்பாராம். அதனால் தனக்கு இந்த உயரத்திற்கு வந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை எனவும் தன்னம்பிக்கையை நிறைய உள்ள ஆளாக இருப்பார் எனவும் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கவிதாலயா கிருஷ்ணன் ரஜினியின் குரு சிஷ்யன், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களில் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கே பாலச்சந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் இவர் தலை காட்டாமல் இருந்ததில்லை

100 கோடி சம்பளம் வாங்கினாலும் ரஜினிக்கு இருக்கும் ஒரு டவுட், கவலை இல்லாத கமல்.. ரகசியம் உடைத்த பிரபலம்:-

Tuesday 10 August 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



 லூத் நபியுடைய சமுதாய மக்கள் பின்பற்றிய கலச்சாரத்தை பின்பற்றிகிறதா?இன்றைய நவீன உலகம்?நிழல் உலகம் மனித இனத்தின்மேல் தொடுத்திருக்கும் மறைமுகப் போர்:-https://e-funandjoyindia.blogspot.com/2021/05/blog-post_24.html


Please watch this bayan without fail.

நவீன கல்வி மற்றும் அறிவியல் மூலம் சாத்தான் மனிதஇனத்தை கட்டுப்படுகிறதா?நிழல் உலகம் மனித இனத்தின்மேல் தொடுத்திருக்கும் மறைமுகப் போர் PART-2:-

Tuesday 3 August 2021

 



அஜித் ரசிகர்கள் நடிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இரவு வலிமை படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடல் ஒரு சில மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இதுமட்டுமின்றி திரையுலகில் அஜித் நடிக்க வந்து 29 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இப்பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்பாடலில் விக்னேஷ் சிவன் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இப்பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இப்பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங் NO.1-ல் இருந்து வருகிறது










வெளியான ஒரே நாளில் தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை தகர்த்த, சாதனை படைத்த வலிமை படத்தின் பாடல்.. இணையதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com