HEADER

... (several lines of customized programming code appear here)
Showing posts with label Thala 61. Show all posts
Showing posts with label Thala 61. Show all posts

Tuesday, 30 April 2024

 



தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தலஅஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார், முக்கியமான ரோலில் சிம்ரன் மற்றும் மீனா நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஆமாம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டதட்ட 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..




ஷூட்டிங்கே தொடங்கல.. பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி உரிமை – அஜித் ரசிகர்களைக் கொண்டாட வைத்த தகவல்:-

Thursday, 6 July 2023

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில விஷயங்கள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்

இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து கெட்டப்பை மாற்றியுள்ளார் அஜித். இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முயற்சியும் நடந்து வருகிறதாம். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அசல் திரைப்படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் | Vidaamuyarchi Movie Latest Update

அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் #VidaaMuyarchi

Thursday, 20 January 2022



தல அஜித் நடிக்க உள்ள ஏகே 61 படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வலிமை படம் வரும் மார்ச் மாதமும், ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் தான் ஏகே 61. இந்த படத்தையும் முந்தைய படங்களை தயாரித்த போனி கபூரே தயாரிக்க உள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தல அஜித் 61 படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வலிமை படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதால் அப்படம் வெளியான பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ ஒரே சமயத்தில் அஜித்தின் இரண்டு படங்களின் வெளியீட்டை அறிவித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த முறையாவது படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகிறார்களாம்.

மார்ச்-இல் ரிலீஸ் ஆகிறது வலிமை, அதனை தொடர்ந்து அடுத்த பட ரிலீஸுக்கு நாள் குறித்த படக்குழு..தல 61 அசத்தலான அப்டேட்:-

Friday, 23 April 2021

 



விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மட்டும்தான் சன் டிவியில் இதுவரை அதிகம்பேர் பார்க்கப்பட்ட டிஆர்பி சாதனையை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 18.1 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.

அதன் பிறகு பல திரைப்படங்கள் சன் டிவியில் முதல்முறை ஒளிபரப்பப்பட்டாலும் தற்போது வரை தவிர்க்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது விஸ்வாசம் திரைப்படம். விஜய் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகத் அமைந்து வருகிறது.

எப்போதுமே டிஆர்பி யில் விஜய் படங்கள் ஏகப்பட்ட வரவேற்பு பெறும். ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு சன் டிவியில் மட்டமான டிஆர்பியை பெற்றுள்ளது.

வெறும் 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே தொட்டுள்ளது மாஸ்டர் திரைப்படம். இதற்கு முன்னர் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்ட தெறி, பைரவா, பிகில் போன்ற படங்களை விட குறைவான பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சும்மாவே தல ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள், இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டார்கள். இனி சமூக வலைதளத்தை என்ன பாடு படுத்தப்போகிறார்களோ.



சன் டிவியில் மட்டமான TRP பெற்ற மாஸ்டர்.. விஸ்வாசம் 3வது ஒளிபரப்பை கூட தொட முடியாத சோகம்; தல அஜித் என்றும் நம்பர் 1:-

Thursday, 10 December 2020

 



ஷங்கர் இயக்கத்தில் 'முதல்வன் 2' படத்தில் அஜித் இணையவுள்ளதாக உலவி வரும் தகவல், இருதரப்பு ரசிகர்களையும் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது

கடந்த 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்' படம், அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்த படங்களில் ஒன்று. கடந்த 25 ஆண்டுகளாக இயக்குநராக இருக்கும் ஷங்கர், முக்கிய ஸ்டார்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜூன் பலருடனும் பணியாற்றிவிட்டார். ஆனால், முன்னணி நடிகர்களில் இதுவரை அவர் பணியாற்றாதது அஜித்துடன் மட்டும்தான். ஒரு படத்தில் ஷங்கர் - அஜித் இருவரும் இணைய வேண்டும் என்பதே இருதரப்பு ரசிகர்கள் பலரது விருப்பம்.

இந்நிலையில், ஷங்கர் சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகவும், அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன. தற்போது நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்புகள் முடியும்வரை அஜித் காத்திருக்கச் சொன்னதாகவும் வெளியான அந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், திரைப்பட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் 'இந்தியன்' 2 படத்தினை இயக்கி வந்தார். சில மாதங்களுக்குமுன் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழப்பும் ஏற்பட்டதால் படப்பிடிப்பை ஒத்திவைத்தது படக்குழு. அதோடு, கொரோனா ஊரடங்கினாலும் தள்ளிப்போனது. இதனிடையே, கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்

இந்தியன் 2' படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 'முதல்வன் 2' படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் பரவி வருகிறது

ஏற்கெனவே, ஷங்கர் இயக்கத்தில் 'ஜீன்ஸ்' படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் நடக்காமல் போனதால் பிரசாந்த் உள்ளே வந்தார். இந்த முறையாவது இருவரும் இணைவார்களா என்பது ஷங்கர் - அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை, உறுதி செய்யப்படாத இந்தத் தகவலின்படி, 'முதல்வன் 2'-ல் இருவரும் இணைந்தால், அது அஜித் - ஷங்கர் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.




முதல்வன் 2'-க்காக இணைவார்களா? - எதிர்பார்ப்பில் அஜித், ஷங்கர் ரசிகர்கள்!:-

Tuesday, 8 December 2020

 



தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் யாருடைய இயக்கத்தில் யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அதேசமயம் சமீப காலமாக அஜித் நடிப்பில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருவதால் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மங்காத்தா படத்தில் இடம்பெறும் அன்சீன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது எங்களோட ட்ரீட் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தல 61 படத்திற்காக அஜித்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே திடீரென்று அஜித் படம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது நாங்க கொடுக்கிற ட்ரீட்.. அஜித்துக்கு கொக்கி போடும் சன் பிக்சர்ஸ், இணையத்தில் வெளியான பதிவு – சிக்குவாரா தல.!!

Thursday, 9 January 2020



தல அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சமீபகாலமாக பாக்ஸ் ஆபீசை பதம் பார்த்து வருகின்றன. அந்த வகையில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் சக்கை போடு போட்டது.
அந்தவகையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என இயக்குனர் தரப்பு தெரிவித்தது. இதனால் இந்த படத்திற்காக கட்டு மஸ்தான உடலைப் பெற தொடர்ந்து ஜிம்மில் ஈடுபட்டு வருகிறார் தல அஜித்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இப்பொழுதே ஏற்பட்டுள்ளது. அந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தல அஜித்க்கு ஒரு இயக்குனரின் வேலை பிடித்தால் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்புகளைக் கொடுத்து வருவார். அந்த வகையில் தொடர்ந்து சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து நான்கு படங்கள் இயக்கினார் என்பதும் குறிப்பிட வேண்டியது.
அதே வரிசையில் தற்போது எச். வினோத் இணைந்துள்ளார். தல அஜீத்துக்கு, வினோத்தின் வேலை செய்யும் விதம் மிகவும் பிடித்துள்ளதாம். இந்நிலையில் தல 61 படத்தை இண்டர்நேஷனல் லெவலில் உருவாக்க அதற்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டார் வினோத்
அஜித்திடம் கூறிய ஒரு கதையில், ஓஷன் லெவன், டாக்ஸி போன்ற ஹாலிவுட் திரைப்படங்களை போன்ற தரத்தில் உருவாக இருக்கிறதாம். அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு டானாகவும், ஒரு மாபெரும் வங்கி கொள்ளை நடக்கும் விதமாக இருக்கும்படி கதை கூறி இருக்கிறார் வினோத்.
மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படம் பெரிதும் பேசப்படும் என நம்புகிறாராம் தல அஜித்.

தர்பார் திரை விமர்சனம்:-https://youtu.be/OTX678LVGUU

இன்டர்நேஷனல் ரவுடி.. வங்கி கொள்ளை.. வேற லெவல் படத்தில் அஜித்...

Saturday, 14 December 2019


'பில்லா' வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

2007-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி வெளியான படம் 'பில்லா'. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். எல்.சுரேஷ் தயாரித்த இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும், படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை என அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டிய படம் 'பில்லா'. இப்போதும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகவும் பிரபலம்.

இன்று (டிசம்பர் 14) இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகளாகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பதிவில், "வாவ்! 'பில்லா' வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. என்னவொரு பயணம். நேற்றுதான் ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது,

ஆனால் இன்னமும் என் இதயத்தில் புதிதாக இருக்கிறது. அஜித்துடன் இணைந்த முதல் படம். நன்றி அஜித் சார். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அன்பான ரசிகர்களுக்கு எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவின் நன்றிகள். லவ் யு ஆல், விரைவில் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திப் படமொன்றை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். அதனைத் தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன்  அஜித் படம் இயக்குவார் எனத் தெரிகிறது.


நன்றி அஜித் சார்; விரைவில் சந்திப்போம்: தல 61 பற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் சுவாரசிய ட்வீட்...

Wednesday, 30 October 2019

Image result for thala 61 fan made images




BIGIL BOX OFFICE COLLECTION REPORT, VERDICT HUGE LOSS:-https://youtu.be/AFxh2FRf0pg


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது தல 61 படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித்தின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் அஜித், முருகதாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தல 61 இயக்குனரும் இசையமைப்பாளரும் இவரா? – இணையத்தில் வலம் வரும் மாஸ் தகவல்.!...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com