HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 27 February 2022

 



அஜித் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் வலிமை.

இரண்டு ஆண்டுககள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

முதலில் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ. 36 கோடி வசூல் செய்து சர்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளது வலிமை.

ஆம், மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது.

ᴛᴀᴍɪʟ - 𝙰𝙵𝙲ⱽᵃˡⁱᵐᵃⁱ@TamilJC2·7m#Valimai TN Reports:


Day 1 - 36.17crs (Tamil nadu BO collection only)

Highest opening day record🔥


Day 2 - 24.45 crs  (Tamil nadu BO collection only)

Higher than master opening day collection 😁


Day 3 - 30 crs  (Tamil nadu BO collection only)

Higher than Sarkar and master opening day collection 🔥💥💥...


100 கோடி வசூல் அள்ளிய வலிமை திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி சாதனை:-

Thursday 24 February 2022

 



Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


ஹுசைன் அலையை கூபாவுக்கு அழைத்த நபி தோழர் சுலைமான் பின் ஸுர்த் (ரலி)|கர்பலா-73,74:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/7374.html

Please watch this bayan without fail.

தினம் தினம் இழிவுபடுத்தப்படும் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள், கர்பலாவில் என்ன நடந்தது?கர்பலா-75:-

 


சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயின் பறிப்பு, போதை கடத்தல், கொலை என இவர்களின் குற்றங்கள் போலீஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவு நடந்து கொண்டே இருக்கிறது. மற்றொரு புறம் அஜித் Assistant commissioner அர்ஜுனாக மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தனது தம்பி மற்றும் அண்ணனின் நடவடிக்கை காரணமாக சென்னைக்கு குடும்பத்துடன் வருகிறார் அஜித். பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் ஹுமா குரேஷியுடன் இணைந்து சென்னையில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார் அஜித்.

விசாரணையில் சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களும் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்களால் தான் நடத்தப்படுகிறது என்பது தெரியவர, Satan Slave தலைவராக இருந்து இத்தனை நாட்கள் அனைத்து குற்றங்களையும் முகம் காட்டாமல் பின்னால் இருந்து செயல் படுத்தி வரும் கார்த்திகேயாவை அஜித் தனது அதிரடி நடவடிக்கையால் பிடிக்கிறார்.

அதேசமயம் அஜித்தின் தம்பியும் Satan Slave குழுவை சேர்ந்தவர் என்பது தெரியவர படத்தின் திரைக்கதை மாறுகிறது. பின்னர் அஜித் கார்த்திகேயா சதித்திட்டத்தை எப்படி உடைக்கிறார், தம்பியை Satan குழுவிடம் எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

வலிமை திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அஜித் தாங்கி நிற்கிறார் என்றே கூறலாம். இத்தனை நாட்கள் கழித்து திரையில் அஜித்தை பார்க்கும் ரசிகர்களை தனது தோற்றத்திலும் நடிப்பில் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹுமா குரேஷி மாஸ் காட்சிகளும் வைக்கப்பட்டு கிளாப்ஸ் வாங்கியுள்ளார். வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள கார்த்திகேயா தனது நடிப்பினால் மிரட்டியுள்ளார்.

மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற சில நடிகர்களும் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இப்போது திரைக்கதைக்கு வருவோம்.

பட தொடக்கத்திலே நகரத்தில் நடக்கும் குற்றங்களை பதறவைக்கும் படி காட்சிப்படுத்தியுள்ளது இயக்குனர் வினோத் ஸ்டைலை காண்பிக்கிறது. அப்போதில் இருந்து தொடங்கும் முதல் பாதி டாப் கியரில் விறுவிறுப்பாக செல்கிறது.

இன்டெர்வல் வரை ஒரு இடம் கூட சலிப்பு தட்டவில்லை, அந்தளவிற்கு அதிரடியான காட்சிகளுடன் செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அஜித் படத்திற்கே உரிய வழக்கமான காட்சிகளுடன் முடித்துள்ளார்.

இரண்டாம் பாதி கொஞ்சம் ஒரு சில இடங்களில் பொறுமையை சோதிக்கின்றது. ஆனால் அந்த பஸ் பைட் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் தான், வினோத் அந்த காட்சிகாக எடுத்த மெனக்கெடல் அதோடு திலீப் மாஸ்டர் ஸ்டெண்ட் என அதகளம்.

அதோடு நிரோவ் ஷா ஒளிப்பதிவு மொத்த படத்தையும் தாங்கி நிற்கின்றது, கண்டிப்பாக தனி விருது அவருக்கு தரலாம், இசை யுவனா, ஜிப்ரானா தெரியவில்லை, சுமார் ரகம் தான்

க்ளாப்ஸ்

அஜித்

ஹுமா குரேஷி 

  படத்தின் முதல் பாதி

சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைல்

  டெக்னிக்கல் ஒர்க்

வினோத்தின் கதை மற்றும் திரைக்கதை

நிரோவ் ஷா ஒளிப்பதிவு மொத்த படத்தையும் தாங்கி நிற்கின்றது

  பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் கத்திரி போட்ருக்கலாம்.

பின்னணி இசை சுமார் ரகம் தான்

Overall:- மொத்தத்தில் வலிமை  அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.

4.25/5

அஜித்தின் வலிமை படத்தின் விமர்சனம்:-

Sunday 20 February 2022

 


பிக் பாஸ் ஷோவை தமிழில் கடந்த ஐந்து வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். ஓடிடி எக்ஸ்க்ளுசிவ் ஷோவான பிக் பாஸ் அல்டிமேட் ஷோவையும் கமல் தான் மூன்று வாரங்களாக தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் திடீரென ஷோவில் இருந்து வெளியேறி இருக்கிறார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த முடிவெடுக்க என்ன காரணம் என கமல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்திற்காக தேதிகள் ஒதுக்கு வேண்டி இருப்பதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.

அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறினாலும் பிக் பாஸ் 6வது சீசனுக்கு நிச்சயம் வருவேன் என அவர் தெரிவித்து உள்ளார். 

கோவிட் பெருந்தொற்றுப் பரவலும் அதனையடுத்து வந்த லாக் டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கோவிட் பெருந்தொற்று என்னையும் தாக்கியபோது, மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்தேன். குணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். பிக்பாஸ் சீசன் 5 வழக்கம்போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும். மக்களை மகிழ்விக்க கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்கு பிக் பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு.

லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்ட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால். பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும், கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்த காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் வருகிற 20ம் தேதி எபிசோடுக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விளங்கிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 இந்த முடிவை எடுப்பதில் விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் மிகச்சிறந்த முறையில் என்னோடு ஒத்துழைத்தார்கள். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.. 

இவ்வாறு கமல் குறிப்பிட்டு இருக்கிறார். 

Gallery Gallery


பிக் பாஸ் 6ல் சந்திக்கிறேன் - கமல் வெளியிட்ட அறிக்கை! திடீரென வெளியேற இது தான் காரணம் :-




Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


முஃமீனின் இலக்கு இறைபொருத்தமா!? ஆட்சி அதிகாரமா!?:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/blog-post_94.html


Please watch this bayan without fail.

தோட்டக்கார்களும் அல்லாஹ் கூறும், இறுதிகால அடையாளமும்| Surah Al-Kahf PART-5:-

 



ரஜினி என்றாலே எப்போதும் ஒரு எனர்ஜி தான். ஏனெனில் பல வருடங்களாக ரசிகர்களை தன் ஸ்டைல் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்க போவதாகவும் அதை அருண்ராஜா காமராஜா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அப்படத்தை வலிமையான தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




நெல்சனை தொடர்ந்து ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் இவரா..வேறலெவல் காம்போ:-

Friday 18 February 2022


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

ஹுசைன் அலையை கூபாவுக்கு அழைத்த நபி தோழர் சுலைமான் பின் ஸுர்த் (ரலி)|கர்பலா-74:-
கிஸ்ராவின் வழிமுறையில் முஆவியா(ரலி) தடுக்க முயன்ற சஹாபாக்கள்!!கர்பலா-73:-
கிலாபாத்த்துக்கும் மற்றும் மன்னராட்சிக்கும் இடையிலான 8 வித்தியாசம்|கர்பலா-71,72:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/7172.html



ஹுசைன் அலையை கூபாவுக்கு அழைத்த நபி தோழர் சுலைமான் பின் ஸுர்த் (ரலி)|கர்பலா-73,74:-

Sunday 13 February 2022

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


குழப்பமான காலகட்டத்தில் மக்களோடு ஒதுங்கி வாழ்வது நல்லதா?அல்லது சேர்ந்து வாழ்வது நல்லதா?Surah Al khaf-Part-3:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/surah-al-khaf-part-3.html

முஃமீனின் இலக்கு இறைபொருத்தமா!? ஆட்சி அதிகாரமா!?:-

 



வலிமை தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் புக்கிங் மலேசியாவில் தற்போதே தொடங்கிவிட்டதாம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஷோ தொடங்க தொடங்க ஹவுஸ்புல் போர்ட் தான் மாட்டி வருகிறார்களாம். அந்த அளவிற்கு வலிமை படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறதாம்..மேலும், பல நாடுகளிலும் முன்பதிவில் சாதனை படைத்துவருகிறதாம் KING OF OPENING NA சும்மாவா..

அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், முன்பதிவில் சாதனை படைத்த வலிமை:-

Monday 7 February 2022

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதே தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேள்வி ஆகும். முன்னணி இயக்குனர்களான பாண்டி ராஜ், சிறுத்தை சிவா, கே. எஸ் ரவிக்குமார், பால்கி ஆகியோர் பெயர் பரவலாக ரசிகர்கள் மத்தியில் அடிபட்டது. இதில் எச். வினோத், லோகேஷ் கனகராஜ் பெயரும் சிலகாலம் சுற்றின.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

பேச்சுவார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பங்கு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




யாரும் எதிர்பாராத இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்? வந்தது தலைவரின் 169 படத்தின் அதிர்க்கரபூர்வ அறிவிப்பு?

Sunday 6 February 2022

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


அல்லாஹ் உதவியுடன், குகைவாசிகளைப்போல்இஸ்லாத்தை காப்பற்ற போகும் இளைஞர்கள்|Surah Al Khaf- Part-2:-https://e-funandjoyindia.blogspot.com/2022/01/surah-al-khaf-part-2.html

குழப்பமான காலகட்டத்தில் மக்களோடு ஒதுங்கி வாழ்வது நல்லதா?அல்லது சேர்ந்து வாழ்வது நல்லதா?Surah Al khaf-Part-3:-

Thursday 3 February 2022

 



சங்கர் இயக்கத்தில் முதன் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி.

சந்திரமுகி படத்தின் வெற்றியை அடுத்து வெளிவந்த சிவாஜி திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய ஒன்றாக அமைந்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மாஸ், கமெர்ஷியல் மற்றும் சமூக அக்கறை, நகைச்சுவை என பல விஷயங்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில், சிவாஜி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 152 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதுமட்மின்றி, சிவாஜி படம் தான், தமிழ் திரையுலகில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிவாஜி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இது வேற லெவல் சாதனை:-


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

ஹாசன்(அலை) ஷாகதத்தும் மிக்கதாம்(ரலி)யின் கோபமும்|கர்பலா-71:-


 கிலாபாத்த்துக்கும் மற்றும் மன்னராட்சிக்கும் இடையிலான 8 வித்தியாசம்|கர்பலா-72:-


முஆவியா (ரலி)யின் நபிவழிக்கு  மாற்றமான நடவடிக்கைகள்|கர்பலா-67,68,69,70:-https://e-funandjoyindia.blogspot.com/2022/01/67686970.html

கிலாபாத்த்துக்கும் மற்றும் மன்னராட்சிக்கும் இடையிலான 8 வித்தியாசம்|கர்பலா-71,72:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com