சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதே தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேள்வி ஆகும். முன்னணி இயக்குனர்களான பாண்டி ராஜ், சிறுத்தை சிவா, கே. எஸ் ரவிக்குமார், பால்கி ஆகியோர் பெயர் பரவலாக ரசிகர்கள் மத்தியில் அடிபட்டது. இதில் எச். வினோத், லோகேஷ் கனகராஜ் பெயரும் சிலகாலம் சுற்றின.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பங்கு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment