HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 27 February 2020

Image result for indian 2 fan made poster




கமல் 60 நிகழ்ச்சி, கமலுக்கு நடந்த அறுவைசிகிச்சை, தற்போது ஈ.வி.பி-யில் நடந்த கோர விபத்து என 'இந்தியன் 2' படத்துக்கு பிரச்னைகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால், படக்குழு திட்டமிட்டு வைத்திருக்கும் `2021, பொங்கல்’ என்கிற ரிலீஸ் தேதி தாமதமாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார் கமல்.

சமீபத்தில் ஈ.வி.பி-யில் நடந்த விபத்துக்குப் பிறகு, படப்பிடிப்பை எப்போது ஆரம்பிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்க, படப்பிடிப்பை நின்ற இடத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாராம் ஷங்கர்.




ஆனால், இந்த விபத்தின் வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டிருப்பதால், சில நாள்களுக்குப் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம் தயாரிப்பாளர் `லைகா’ சுபாஸ்கரன். அதுமட்டுமல்லாமல், பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வந்த செட் வேலைகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டாராம். இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த பிறகுதான், படப்பிடிப்பு ஆரம்பிப்பதைக் குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, செட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது மற்றும் காயமடைந்தவர்களுக்குக் கமல் சார்பில் 3 கோடியும், லைகா சார்பில் 2 கோடி மற்றும் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளம்


இந்தியன் 2 படப்பிடிப்பு தளம்
இந்த விபத்து நடந்ததும் தயாரிப்பு தரப்பிற்குக் கமல் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ’இந்த விபத்திற்கான முழுப் பொறுப்பையும் தயாரிப்பு தரப்பே ஏற்கவேண்டும். மற்றும் காயமடைந்தவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தகுந்த உதவியைச் செய்வது, தயாரிப்பு தரப்பின் கட்டாயமாகும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த தயாரிப்பு தரப்பு, ’உங்கள் கடிதம் எங்களுக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே 2 கோடி மற்றும் மருத்துவச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மற்றும் இந்தப் படப்பிடிப்பு இயக்குநர் ஷங்கர் மற்றும் உங்களின் மேற்பார்வையில்தான் நடந்தது என்பதை நாங்கள், உங்களுக்கு நினைவுக்கூர வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியது. இது போக, படம் குறித்த சில அப்டேட்ஸ் கீழே....



ஷங்கர் - பீட்டர் ஹெய்ன் காம்போவில் உருவான `அந்நியன்’ படத்தில் நூற்றுக்கணக்கான ஃபைட்டர்களை வைத்து ஒரு சண்டைக்காட்சியை வடிவமைத்ததுபோல் `இந்தியன் 2’ படத்திலும் சில சண்டைக்காட்சிகளைப் பிரமாண்டமாகப் படமாக்கயிருக்கிறார்கள்.
500-க்கும் மேற்பட்ட ஃபைட்டர்களை இந்தச் சண்டையை வடிவமைத்திருக்கிறாராம் பீட்டர் ஹெய்ன். பீட்டர் ஹெய்னைத் தவிர சில ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்களும் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்தியன் 2


இந்தியன் 2

`இந்தியன்’ படத்தில், டெலிபோன் பூத்தில் இந்தியன் தாத்தா போன் பேசுவதுபோல் படம் முடியும். தற்போது படமாக்கி வரும் இரண்டாம் பாகம், அந்த டெலிபோன் சீனில் இருந்துதான் தொடங்குமாம். அந்த டெலிபோன் சீனையும், அதற்கடுத்து இந்தியன் தாத்தா என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையும் சீனாவில் படமாக்க நினைத்த ஷங்கர், அதற்காக லொகேஷன்களைப் பார்த்து ஃபைனலும் செய்துவிட்டாராம். ஆனால், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்தக் காட்சிகளை இத்தாலியில் படமாக்கலாம் என நினைத்திருக்கிறாராம் ஷங்கர்.
இந்தியன் தாத்தாவின் கெட்டப்புக்காக முதலில் போடப்பட்ட மேக்கப், கமலின் முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்தியதால், அந்த சமயத்தில் படப்பிடிப்பில் ஓர் இடைவெளி ஏற்பட்டது. பிறகு, படத்தின் பட்ஜெட்டை இறுதி செய்வதில் ஷங்கர் தாமதப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.

இந்தியன்' படத்தின் முதல் பாகத்தில் இருந்தது போலவே, இரண்டாம் பாகத்திலும் சேனாபதி கேரக்டருக்கு இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றங்களும் இருக்கிறதாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து முதுமையான தோற்றத்தின் காட்சிகளை மட்டுமே படமாக்கியவர்கள், அறுவை சிகிச்சைக்காக கமல் சென்று வந்த பிறகு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய, சேனாபதி கேரக்டரின் இளவயது போர்ஷனை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த கமல், இளவயது கேரக்டருக்காக உடம்பையும் குறைத்திருந்தார்.

இந்தியன்

இந்தியன்

கமல்ஹாசனைப்போல் காஜலுக்கும் இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்கள் இருக்கிறதாம். வயதான சேனாபதியின் தோழியாக 83 வயதுடைய கதாபாத்திரத்திலும், அதே கதாபாத்திரத்தின் இளவயது தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இளவயது தோற்றத்தின் காட்சிகளுக்காகக் களரியும் கற்றுள்ளார் காஜல். `இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த சுகன்யாவின் கேரக்டரில்தான், இந்தப் படத்தில் ப்ரியாபவானி ஷங்கர் நடிக்கிறாராம்.

ஈ.வி.பி விபத்தும் பின்விளைவுகளும், தாமதமாகும் படப்பிடிப்பு, 2021 பொங்கலுக்கு வருமா இல்ல தாமதமாகுமா? `இந்தியன் 2' ஸ்டேடஸ் அப்டேட்!

Tuesday 25 February 2020

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO BELOW




கல்வி கற்று கல்வி யை பரப்புங்க. இது தான் இந்த நேரத்துல செய்யவேண்டியது. நீங்களோ நானோ (அ) சிலர் மட்டும் அறிந்து ஒண்ணும் சாதிக்க முடியாது. அதிகமான மக்களுக்கு தெரியப்படுத்தனும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மேற்கொண்டு கல்வியை பரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமேதான் பணி. இந்த நிலையிலேயே நாம் மரணிக்கும் வரை இருந்தாலும் சரி. இப்போதைக்கு இதுதான். மற்றபடி அப்பப்ப இறைவன் நன்மையின் பக்கம் வழிகாட்டுவான்

அல்லாஹ் மட்டும் போதுமா? |அடிப்படைக்கல்வி-05:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/05.html?spref=tw

கடவுளுக்கு தூதரா? நாங்க நம்பமாட்டோம் | அடிப்படைக் கல்வி - 06:-

Image result for kamal kiss images



கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
இதோடு கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலையும் சந்தித்து வருகின்றார், இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் லில்-லாக் முத்தக்காட்சியாக புன்னகை மன்னன் படத்தை தான் சொல்வார்கள்.
இதில் கமல் நடிகை ரேகாவிற்கு முத்தமிடுவார், அந்த காட்சி அந்த காலக்கட்டங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியதாம்.
இதுக்குறித்து ரேகா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அந்த காட்சி எடுக்கப்போகிறார்கள் என்று சொல்லவே இல்லை.
எனக்கும் தெரியாது, திடீரென்று படப்பிடிப்பில் கமல் முத்தமிட்டார், எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதை நான் பல பேட்டிகளில் கூறியுள்ளேன்’ என ரேகா சொல்ல, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அதோடு பலரும் கமல், பாலசந்தர் இப்படி செய்திருக்க கூடாது என கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயினிடம் சொல்லாமலேயே லிப்-லாக் முத்தம் கொடுத்த கமல்ஹாசன், ஹீரோயின் கொடுத்த அதிர்ச்சி பேட்டி...

Sunday 23 February 2020

Image result for thala 60 fan made images


KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படமோ, படத்தை பற்றிய அப்டேட்டோ, நடிகர்கள் பற்றிய தகவலோ எதுவும் வெளியாக கூடாது என பக்காவாக திட்டம் போட்டு இயக்கி வருகிறார் வினோத்.
ஆனாலும் அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

Saturday 22 February 2020



இரட்டை வேடம் போடும் முஸ்லிம்கள்




              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO BELOW



தாவூத் நபியிடம் வந்த வழக்கு | குர்ஆன் தப்ஸீர் 38:01 to 25 PART-4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/01/3801-to-25.html?spref=tw

அல்லாஹ் ஏன் முஸ்லிம்களை வெறுக்கின்றான்? சூரா அஸ் ஸஃப் 1 to 5 PART-1

the youth who asked rajinikanth in the thoothukudi incident arrested in theft case


ரஜினியை பார்த்து பயம் இல்ல - வெளுத்து வாங்கிய டி.ஆர்:https://youtu.be/pVgv_1oEixI

தூத்துக்குடி: "நீங்க யாருன்னு" தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து ஒருத்தர் கேட்டாரே ஞாபகம் இருக்கா? அந்த இளைஞரை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து உள்ளே வைத்துவிட்டார்கள்! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு பார்க்க சென்றிருந்தார்... ஆஸ்பத்திரியில் குண்டடி பட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியபடி வந்தார்... அப்போது அங்கு இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்... அவர் டக்கென ரஜினியை பார்த்து, "யார் நீங்கள், இங்கே எதுக்கு வந்தீங்க" என்று கேட்டார். இதை ரஜினிகாந்த் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. இது அப்போது சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது. அந்த இளைஞர் பெயர் சந்தோஷ்... இது ரஜினிக்கே பெரும் அவமானமாகவும், கோபத்தையும் தூண்டியதாககூட சொல்லப்பட்டது.

அந்த கோபத்தில்தான் நேராக ஏர்போர்ட்டுக்கு வந்தவர், செய்தியாளர்களிடம் காட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்றும் செய்திகள் வந்தன.. ஆனால் தூத்துக்குடி சம்பவம், ரஜினி ஏர்போர்ட்டில் பேசியது இன்றுவரை நினைவில் உள்ள அளவுக்கு, அந்த இளைஞரை அதற்கு பிறகு எல்லாருமே மறந்து போய்விட்டனர்.. இப்போது அந்த இளைஞர் மீதுதான் திருட்ட கேஸ் ஒன்று பதிவாகி உள்ளது. தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவர் தன் வீட்டு வாசல் முன்பு பைக்கை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.. 2 நாளைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றிருக்கிறார்.. விடிந்து வந்து பார்த்தால் பைக்கை காணோமாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வடபாகம் போலீஸில் இதை பற்றி புகார் அளித்துள்ளர்.

போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மணி 23, சரவணன் 22, ஆகியோரை இந்த பைக் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இவர்கள் அனைவரும் கைதாகி உள்ளனர்.. பைக் திருடியதில் சந்தோஷும் ஒருவர் என்பதால்தான் இந்த செய்தி பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது.

தூத்துக்குடி சம்பவ வழக்கின் விசாரணைக்காக ரஜினிகாந்திடம் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த நிலையில், தூத்துக்குடி இளைஞர் கைதாகி உள்ளதும் பரபரப்பை தந்து வருகிறது.




"நீங்க யாருன்னு" ரஜினியை கிண்டல் செய்தாரே.. ஞாபகம் இருக்கா.. அவர் இப்போது திருட்டு கேஸில் கைது!

Thursday 20 February 2020

KRITI SANON BEAUTIFUL IMAGES..

Image result for indian 2 fan made poster


கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தில் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் கீழே விழுந்து கொடூரமான மரண சம்பவம் நடந்தது.
இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் தங்களது அழுந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கிரேன் வாகனத்தை ஆபரேட் செய்த ராஜன் என்பவரின் மீது தவறான முறையில் வாகனத்தை கையாண்டதற்காக, அஜாக்கிரதையாக இருந்ததற்காக போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அந்த கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு அழகியுள்ளதாவும், அவரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா?

Wednesday 19 February 2020

Image result for thaala king of box office images


தலதளபதி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் படங்களின் சாதனையை இவர்கள் படங்களே தான் மாறி மாறி உடைக்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது, இவை இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வசூல் தகவல்படி விஸ்வாசம் படம் தான் நம்பர் 1 வசூல் என கூறப்பட்டுள்ளது.
இதில் விஸ்வாசம் ரூ 149 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்திருந்தது, பிகில் ரூ 145 கோடி என குறிப்பிட்டுள்ளனர், இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அதோடு பேட்ட ரூ 109 கோடி, நேர்கொண்ட பார்வை ரூ 102 கோடி, காஞ்சனா 3 ரூ 74 கோடி காப்பான் ரூ 69 கோடி முறையே வசூல் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் NGK , நம்ம வீட்டு பிள்ளை, கைதி, அசுரன் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல்கூறப்பட்டுள்ள அனைத்தும் படங்களின் இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டும் கூறப்பட்டுஉள்ளது..
இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவர்கள் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், மிக முக்கிய பாக்ஸ் ஆபிஸ் தளம் இவை என்று கூறப்படுகின்றது.

வசூலில் பிகில் நம்பர் 1 இல்லை, விஸ்வாசம் தான், அதுவும் இத்தனை கோடியா! பாக்ஸ் ஆபிஸ் தளம் அறிவிப்பு


PRIYANKA PANDITT CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2020/02/priyanka-panditt-cute-images.html?spref=tw

இந்தியன்-2 படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படம் ரிலீஸாகிவிட வேண்டும் என்பது கமல் கணக்கு. ஆனால்...

காலில் அறுவைசிகிச்சை காரணமாக பிரேக்கில் இருந்த கமல்ஹாசன், இப்போது மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார். தற்போது பூந்தமல்லியில் உள்ள இவிபி-யில் நடைபெற்றுவரும் இந்தியன் -2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார் கமல்.

24 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ' இந்தியன்' படம், நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் மிக முக்கியமான படம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்த கமலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, அந்த மேடையிலேயே 'இந்தியன் -2' படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். முதலில் தெலுங்கு தயாரிப்பாளர் 'தில்' ராஜுதான் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் லைகா, இந்தியன் -2 புராஜெக்ட்டை கையில் எடுத்தது.

முதல் பாகத்தில்... கமலோடு கவுண்டமணி, செந்தில் நடித்த காமெடிக் காட்சிகள் பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது. இதில், காமெடிக்கு முதல்முறையாக கமல்ஹாசனோடு இணைந்து நடித்திருக்கிறார் விவேக். முதலில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா பெயரை அறிவித்தனர். நயன்தாராவும் தேதிகளை ஒதுக்கினார். ஆனால், நயன்தாரா ஒதுக்கிய தேதிகளில் இந்தியன் -2 ஷூட்டிங் நடக்கவில்லை. அதனால், நயன்தாரா அந்தப் படத்துக்குக் கொடுத்த தேதிகளை அப்படியே விஜய் நடித்த 'பிகில்' படத்துக்கு மாற்றினார். இந்தியன்-2-வில் இருந்து நயன்தாரா விலகியதால், காஜல் அகர்வால் ஹீரோயினானார். இவரும் கமலும் நடிக்கும் காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட இருக்கின்றன.

முன்னதாக டைரக்‌டர் ஷங்கர், தனது படக்குழுவோடு ஹாலந்து, போலந்து, உக்ரைன், சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று 'இந்தியன் -2' படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்துவிட்டு வந்தார். சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. ஒரு பக்கம் ' இந்தியன் -2' ஷூட்டிங், இன்னொரு பக்கம் மக்கள் நீதி மையத்தின் மீட்டிங் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார் கமல். இதற்கிடையில், ராஜஸ்தான் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து, மீண்டும் சென்னையில் ஷூட்டிங் நடந்தது. ஒருநாள், கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கமல்ஹாசனின் காலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியாக, உடனடியாக அறுவைசிகிச்சைக்கான முடிவு எடுக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்து, மீண்டும் பழைய உற்சாகத்துடன் 'இந்தியன் -2' படப்பிடிப்பில் நடித்துவருகிறார் கமல். இதில், 300 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்குபெறும் பிரமாண்ட சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் அமைக்கிறார். தமிழ், மலையாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றிய தியாகராஜன், இதில் இணைந்து பணியாற்றுகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் சண்டைக் காட்சிக்கான ரிகர்சல் 300 கலைஞர்களுடன் நடந்தது. இப்போது இதன் படப்பிடிப்பு, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் உள்ள பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் முதல்பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், இந்தியன் தாத்தா வெளிநாட்டில் இருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து போனில் பேசுவார். இந்தக் காட்சி சீனாவில் படமாக்கப்பட்டது. இப்போது, அதன் தொடர்ச்சிக்காக கடந்த 24 ஆண்டுகளாக இந்தியன் தாத்தா சீனாவில் என்ன செய்துகொண்டிருந்தார் என்கிற காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஏற்கெனவே ஷங்கர் சீனா சென்று, அங்கு ஷூட்டிங் நடத்தவேண்டிய பகுதிகளைப் பார்வையிட்டு, அனுமதியும் வாங்கிவைத்திருந்தார். ஆனால், சீனா இப்போது, கொரோனா வைரஸ் நோயால் நிலைகுலைந்து நிற்பதால், இந்தியன் 2-வின் திட்டங்களும் மாறிப்போயிருக்கிறது. சீனா, மலேசியா, தாய்லாந்து என கிழக்காசிய நாடுகள் அனைத்திலுமே இந்த வைரஸ் பிரச்னை இருப்பதால், இப்போது இத்தாலிக்கு பறக்க இருக்கிறது.

இந்தியன்-2 படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படம் ரிலீஸாகிவிட வேண்டும் என்பது கமல் கணக்கு. ஆனால், படப்பிடிப்பு நீண்டுகொண்டுபோவதோடு, கிராபிக்ஸ் வேலைகளும் அதிகம் இருப்பதால், படம் எப்போது ரிலீஸ் என்பதில் தொடர்ந்து சர்ப்ரைஸ் நீடிக்கிறது... 

சீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும் கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்!

Tuesday 18 February 2020

Image result for thala 60 fan made images


KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw

வலிமை ஷூட்டிங்கில் அஜித் சரியாக பங்கேற்பதில்லை என கடந்த சில நாட்களாக சில வலிமை படம் பற்றி சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
அஜித படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறாராம். ஒரு ஸ்டண்ட் காட்சி எடுக்கும்போது அஜித்துக்கு அடிபட்ட நிலையில் இயக்குனர் வினோத் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அஜித்தை ரெஸ்ட் எடுக்க சொல்லி கூறினாராம்.
ஆனால் அஜித் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிக்கிறேன் என கூறி அன்று நள்ளிரவு வரை நடித்தாராம்.
அதுமட்டுமின்றி மற்றொரு நாள் ஒரு சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என கூறி டூப் பயன்படுத்தலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் தெரிவித்தாராம். ஆனால் அஜித் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். "நான் தான் சம்பளம் வாங்கினேன். நான் தான் நடிப்பேன்" என கூறி அந்த ரிஸ்கான காட்சியில் நடித்தாராம்.

அஜித் 'வலிமை' பற்றி பரவிய தவறான செய்தி! உண்மை இதுதான்...

Sunday 16 February 2020

               allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO BELOW




நபி ஸல் நஜ்ரான் பாதிரிகளின் முபாஹலா| நபி ஸல் விட்டு சென்ற குர்ஆனும் அலியும் | கர்பலா-27,28:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/2728.html?spref=tw

நபி ஸல் அவர்களின் இறுதி உபதேசங்கள், கர்பலா-29:-



























PRIYANKA PANDITT CUTE IMAGES...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com