
கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தில் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் கீழே விழுந்து கொடூரமான மரண சம்பவம் நடந்தது.
இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் தங்களது அழுந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கிரேன் வாகனத்தை ஆபரேட் செய்த ராஜன் என்பவரின் மீது தவறான முறையில் வாகனத்தை கையாண்டதற்காக, அஜாக்கிரதையாக இருந்ததற்காக போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அந்த கிரேன் ஆபரேட்டர் தலைமறைவு அழகியுள்ளதாவும், அவரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
Post a Comment