HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 27 February 2018

நடிகர் அஜித் தனக்கான ரசிகர் மன்றத்தை கலைத்தும் கூட பெரிய கூட்டம் அவருக்கென உருவாகிவிட்டது. ஆனாலும் அவரின் ரசிகர்கள் பல நல்ல விசயங்களை குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் செய்துவருகிறார்கள்.
படங்களை மட்டுமல்ல. பல சமூக நல சேவைகளை செய்து கொண்டாடிவருகிறார்கள். அண்மையில் சிரியா நாட்டில் நடந்த பயங்கர் வெடிகுண்டி வெடித்த சம்பவத்தில் பல குழந்தைகள் உயிரிழந்தனர்.
மிகவும் வேதனைக்குரிய விசயமாகிவிட்டது. தற்போது சமூகவலைதளமான ட்விட்டரில் இதற்கென #WeNeedPeacefulSyria என தனியே ஒரு டேக்கை உருவாக்கி தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கான முன்னறிவிப்பை அவர்கள் முன்பே வெளியிட்டார்கள். தற்போது இந்த டேக் 15 நிமிடத்தில் 2000 அதிகமான ட்வீட்ஸ் பெற்று ட்ரண்ட்டிங்கில் வந்துவிட்டது.

சிரியா தாக்குதலுக்காக விவேகமாய் ஒன்று கூடிய அஜித் ரசிகர்கள்! புதுமுயற்சி வெற்றி பெறட்டும் -


1) இஸ்லாத்தில் ஹராமான இசை நிகழ்ச்சி இனி சவுதி முழுவதும் நடத்த அனுமதி

2) மார்ச் மாதம் முதல் சவுதி முழுவதும் திரை அரங்கு திறப்பு

3) பெண்களை வழிகேட்டில் விடக்கூடிய செயலான கார் ஓட்ட அனுமதி

4) சவுதியில் பின்பற்றப்பட்ட ஷரியத் சட்டமான தலைவெட்டு , கைவெட்டு தற்போது தடை செய்யப்பட்டது

5) பெண்கள் ஹிஜாபை கொண்டு முகத்தையோ , உடலையோ மறைக்க அவசியம் இல்லை

6) சவுதி முழுவதும் இவ்வாண்டு இறுதிக்குள் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்

7) சுற்றுலா பயணிகள் கடற்கரைகளில் உள்ளாடை மட்டும் அணிந்து குளிக்கவும் அனுமதி

8) இஸ்லாத்தின் முதல் எதிரியான யூத நாடான இஸ்ரேலுக்கும் சவுதிக்கும் இடையே ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கபட உள்ளது

9) தற்போது நாங்கள் நவீன இஸ்லாத்தை (modern Islam) பின்பற்றுவதாக மன்னர் அறிவிப்பு

10) இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் முத்தவாக்கள் எனும் பதவி பொறுப்பு நீக்கப்பட்டது

11) இதையெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டிய 600 க்கும் மேற்பட்ட உலமாக்கள் ( கடந்த 4 மாதங்களில் மட்டும்) சிறை வைப்பு

முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆண்ட இம்மண்ணை பதவி,செல்வம்,புகழுக்காக ஆட்சி செய்யும் இது போன்ற கயவர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகட்டும் ஆமின் ஆமின் ஆமின்..
இது போன்ற போலி ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இஸ்லாமிய சட்டமான ஷரியத்தின்படி உலகெங்கும் ஆட்சி நடைபெற வல்ல ரஹ்மானிடம் பிராத்திப்போமாக !!

ஆமின் ஆமின் யா ரப்புல் ஆலமின் !!!


சவூதி அரேபியாவின் தற்போதைய நிலை 2018 🇸🇦

கொத்து கொத்தாகக் கொல்லப்படும்

சிரியா முஸ்லிம்களுக்காக  குனூத் நாஸிலா ஓதுவோம்

சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் மீது சிரியா அதிபரான ஷியா மதவெறியன் பஷார் அல் ஆஸாத் ராணுவமும், ஷியா மத நாடாகிய ஈரான் இராணுவமும், ரஷ்யாவின் கொடுங்கோலன் புதின் இராணுவத்தினரும் குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவி பொதுமக்களை சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகின்றன.

பலர் சொந்த வீட்டையிழந்து, குடும்பத்தை இழந்து அனாதைகளாகவும் அகதிகளாகவும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் இந்தக் கொடுமையைக் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன.

இஸ்லாமியச் சமுதாயம் இது போன்ற மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

சிரியா முஸ்லிம்களுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் வன்முறைகளைக் கண்டித்தும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களும் போரட்டத்தை நடத்தவுள்ளது.

மேலும் சிரியா முஸ்லிம்களின் அவலங்கள் நீங்குவதற்காக இறை உதவியை வேண்டி கடமையான ஐங்காலத் தொழுகைகளில் அவர்களுக்காக சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்யுமாறு  முஸ்லிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் இவ்வறிக்கை மூலம் கோரிக்கை வைக்கின்றது.

குனூத்துன் நாஸிலா தொடர்பான சட்டங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

குனூத் நாஸிலாவின் நோக்கம்

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும்  காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள்.

و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ



அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்' என்றும் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1201

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ…. إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

 நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.

நபியவர்கள் ஒருமாத காலம் குனூத் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.

எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.

கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்.

சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.

கடமையான தொழுகைகளில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.

இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004

و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1207, 1208



797 بَاب حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ  رواه البخاري

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள், கூறி விட்டு லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத் ஓதுவார்கள். அதில்  இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த) இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் சாபத்தை வேண்டுவார்கள்.

நூல் : புகாரி 797

சுருக்கமாக ஓத வேண்டும்.

صحيح البخاري

1001- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 1001

மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.

நபியவர்கள் இந்தச் சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் கால பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.

صحيح البخاري

6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத்' ஓதினார்கள். அதில்,



இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : புகாரி 6393

நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

யா அல்லாஹ் ! சிரியாவில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!

அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!



இறைவா சிரியாவில் அநியாயம் செய்யும் சிரியப் படைகள், ரஷ்யப்படைகள், ஈரான் படைகள் மீது உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக

என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.

கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

مسند أحمد بن حنبل

 12425 - حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك …. فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم ….تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தம்முடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராகப்பிரார்த்தனை செய்ததை நான் பார்த்தேன்.

நூல் : அஹ்மத் 12425

சோதனைக் கால குனூத்தில் நபியவர்கள் கைகளை உயர்த்தி பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

சப்தமாகப் பிரார்த்திக்கலாமா?

صحيح البخاري

6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத்' ஓதினார்கள். அதில்,



இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்

நூல் : புகாரி 6393

மேற்கண்ட செய்தியில் இமாமாக தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே இமாமாக தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தைத்தவிர்ந்து கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பற்றி தொழுபவர்கள் கைகளை உயர்த்தி பணிவாகவும், இரகசியமாகவும் பிராரத்தனை செய்ய வேண்டும்.

ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப்  பிரார்த்திக்கும் போது”அல்லாஹும் மஸ்கினா” (இறைவா எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபியர்கள் மக்களுக்கு கேட்கும் விதமாக செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர்

(பார்க்க புகாரி 1029, 1013, 1014)

இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆமீன் கூற வேண்டுமா?

சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய  அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்”என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.

நூல்கள் : அபூ தாவூத் (1231), அஹ்மத் ( 2610)

இன்னும் பல நூற்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப் படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

 (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் 69)



பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர் அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.

இந்த அறிவிப்பில் அதைத் தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச்செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.

எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.

இமாமும் பிராரத்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.

தமிழில் பிராரத்திக்கலாமா?

நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று நபியவர்களே அமைத்துத் தந்த பிரார்த்தனை வாசகங்கள்.

கழிப்பிடத்திற்கு செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும் பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஒத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் இது போன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்றுதான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.

இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் நபிகளார் கற்றுத்தந்த அரபி மொழியிலும் கூட அதே போன்ற அர்த்தமுடைய வேறு சொல்லை அந்த துஆக்களில் நாம் நமது விருப்பப்படி சேர்ப்பதற்கு மார்க்கம் தடை விதித்துள்ளது.

மற்றொரு வகைப் பிரார்த்தனை நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்தனைகள் ஆகும். அதாவது பிரார்த்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர் தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.

அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிராரத்திக்க முடியும்.

இது போன்று என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பது பிராரத்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளாக இருந்தால் அதனை நமக்குத் தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.

நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும்.

தற்போது ரஷ்ய நாட்டு இராணுவம் சிரியாவில் வாழும் முஸ்லிம்களைக் கொத்து கொத்தாகக் கொன்று வருகிறது.

எனவே நாம் அநியாயம் செய்யும் இவர்களைக் குறிப்பிட்டுத்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய் மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு , கன்னடம், மலையாளம்,  ஹிந்தி,  ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.



LET'S PRAY FOR SRIYA PEOPLE




சமீபத்தில் விகடன் விருதுகள் அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன், விஜய், இளையராஜா, நயன்தாரா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நேற்று தொலைக்காட்சியில் ஒளிபர்பபப்பட்டது

இந்த நிலையில் நேற்றைய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பின்போது ஒரு காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இந்த விழாவுக்கு விஜய் வருகை தந்தபோது கமல்ஹாசன், விஜய்சேதுபதி, உள்பட அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று விஜய்யை கைகுலுக்கி வரவேற்றனர்.

ஆனால் இயக்குனர் பாலா, விஜய்யை கண்டுகொள்ளவும் இல்லை, விஜய்யை எழுந்து நின்று வரவேற்கவும் இல்லை. ஆனால் அதே சமயம் விஜய்சேதுபதி அரங்கத்திற்குள் நுழைந்தபோது பாலா கைகுலுக்கி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அஜித் ரசிகர்கள் ஒருபுறம் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வரும் நிலையில் மறுபுறம் இயக்குனர் பாலா மீதான கோபத்தை விஜய் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்

விஜய் வருகையின்போது பாலா காட்டிய ரியாக்சன் ரசிகர்கள் அதிர்ச்சி

Monday 26 February 2018


#ஷாமிற்கு_நற்செய்தி_உண்டு..!

இந்த வார்த்தை அல்லாஹுவுடை தூதர் ஸல் அவர்களின் வார்த்தை
ஒரு காலும் இது பொய்யாகாது..!

ஷாமிற்க்கு நிச்சயமாக #துன்பத்திற்கு பிறகு ஓர் #இன்பம் உண்டு..!

இப்போது வேண்டுமானல் #ஷாம் #அலக்கழிக்கபடலாம்..!

ஆனால்..! #ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..!

இன்ஷா அல்லாஹ்..!

#ஷாம்_தேசம்_என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்

#ஷாமின்_சிறப்பை_அறிவோம்..!

முஹம்மது ஸல் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று #ஷாமும்_தான்..!

அல்லாஹுவின் #பர்க்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..!

நமது மூன்றாவது புனித ஸ்தலம் #மஸ்ஜிதுல்_அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..!

நமது மூன்றாவது #புனித_ஊரும் ஷாம் தான்..!

அதிகமான #நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..!

உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் #நெற்றி_சுஜூத் செய்ததும்  ஷாமில் தான்..!

#வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..!

#வானவர்கள் தங்கள் #இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..!

முஹம்மது ஸல் அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு #வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..!

பாரசீக கோட்டையில் #இஸ்லாமிய_கொடி பறக்கும் என்று #முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..!

எட்டாயிரத்திற்கும் அதிகமான #சஹாபாக்கள்_சஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..!

உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது #ஈமான்_தஞ்சம் அடைவது ஷாமில் தான்..!

கியாம நாள் வரையிலும் #ஈமானிற்காக மட்டுமே #போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..!

முஹம்மது ஸல் அவர்கள் ஒரு #போராட்டக்_குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்..!

அப்போதைய #வல்லரசான_பாரசீகத்தை இந்த உம்மத் #விரட்டிய இடமும் ஷாம் தான்..!

#மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..!

ரோமர்களுக்கு #இமாம்_மஹ்தி தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..!

#யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் #வெட்டுவதும் ஷாமில் தான்..!

#ஈஷா அலை இறங்குவதும் ஷாமில் தான்..!

தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..!

மஹ்சர் பூமி ஏற்ப்படுவதும் ஷாமில் தான்..!

கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது

ஷாம் அழிக்க படுகிறது என்று யாரு கவலை கொள்ளவேண்டாம்

இஸ்லாம் உள்ள வரையில்
ஷாமை அழிக்க முடியாது

இப்போதைய  நமது பணி ஷாமிற்கும் அம்மக்களுக்கும்   அதிகம் பிராத்திப்பதே ஆகும்..!


ஷாம் சிரியா சிறப்பு


"#சிரியா_மக்களின்_கதறல்"
 ஐக்கிய நாடுகளே.. ஏன் இந்த அமைதி..! அரபு நாடுகளே ஏன் இந்த அரக்கதனம்..! பிஞ்சு குழந்தைகளின் சப்தம் நெஞ்சை உருக்கவில்லையா..."?

குவிக்கிறார்கள்.. கொன்று குவிக்கிறார்களே... ஐயோ ஓலமாக காட்சி அளிக்கிறதே..! பாவம்.. பச்சிளம் பிஞ்சுக்கள் என்ன செய்தது..."?
இறைவா... எங்கள் இறையோனே.. பாதுகாத்திடு, பிஞ்சு குழந்தைகளையும் எம் சகோதர சகோதிரிகளையும்.

அழித்துவிடு, எங்கள் ரப்பே.. அநியாயக்காரர்களை அடியோடு அழித்துவிடு...

"நாங்கள் முறையிட உன்னைவிட எங்களுக்கு மேலோன் உண்டோ"



ஓ... உலக நாடுகளே உங்கள் காதில் ஒலிக்கவில்லையா..."?

Sunday 25 February 2018







இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஸ்ரீதேவி நடிகர் Mohit Marwah வின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார், அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 54 வயதாகும் அவர் நேற்று இரவு 11 - 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.
ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் ஜான்விக்கு ஆறுதல் கூறுவதற்காக தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம் - அதிர்ச்சி தகவல்

Saturday 24 February 2018

அஜித்-சிவா கூட்டணியில் தயாராகும் விசுவாசம் என்ற 4வது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சில நாட்களாக படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. தம்பி ராமைய்யா கமிட்டாகி இருப்பது நேற்று வந்த தகவல்.
இந்த நிலையில் படத்தில் அஜித் வேடம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, வட சென்னை தமிழ் பேசும் நபராக அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பின்னி மில்லில் ஒரு நிஜ கிராமம் போன்ற செட் போடப்பட்டு வருவதாகவும், இதனால் வீரம் போன்ற ஒரு கிராமிய பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதோடு பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விசுவாசம் படத்தில் வட சென்னை வேடத்தில் நடிக்கவில்லையா அஜித்?

Friday 23 February 2018

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பக்ரு. இவர் தமிழில் டிஷ்யூம், காவலன் ஆகிய படங்களில் நடித்தவர்.
இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நடுவராக இருக்கும் இவர், அஜித் குறித்து சமீபத்தி பேசியுள்ளார்.
இதில் ‘நான் அஜித் சாரை ஒரு விருது விழாவில் சந்தித்தேன், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டேன்.
அப்போது அவரே கீழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்தார், மேலும், என் குடும்பத்தை பற்றியெல்லாம் விசாரித்தார், மிகவும் நல்ல மனிதர்’ என்று கூறியுள்ளார்.


தல எப்படிப்பட்டவர் தெரியுமாங்க! நெகிழும் பக்ரு





விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கம் இந்த படம் வடசென்னை-யை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பல உண்மை சம்பவங்கள் இந்த கதையில் இடம் பெறவுள்ளன.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது தான் அஜித் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க நான்கு இயக்குனர்கள் போட்டா போட்டி போட்டு வருகிறார்கள். இயக்குனர் விஷ்ணு வரதன், பிரபு தேவா, விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு ஆகியோர் கதையுடன் தயாராக உள்ள நிலையில் நடிகர் அஜித்குமார் இயக்குனர் விஷ்ணு வரதனை டிக் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் – விஷ்ணுவரதன் கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும். தல59 படம் பக்கா கலர்ஃபுல் படமாக இருக்கும் எனவும் துப்பாக்கி ஏந்தாத அஜித்தை இந்த படத்தில் பார்கலாம் எனவும் கூறுகிறார்கள்.


தல59 போட்டி போடும் நான்கு இயக்குனர்கள் ஆனால் வாய்ப்பு இவருக்கு தான்

Thursday 22 February 2018

தளபதி விஜய், இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த மெர்சல் மெகா ஹிட் ஆனது.
இப்படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே, இப்படத்திற்காக விஜய் ஒரு பிரபல பத்திரிகையில் சிறந்த நடிகர் விருது வாங்கினார்.
அந்த விருதை பெற்றுக்கொண்ட விஜய் ‘நமக்கு விருது கொடுத்து தாங்க பழக்கம், முதன் முறையா வாங்குவது சந்தோஷமாக உள்ளது’ என கூறியுள்ளார்.



நமக்கு கொடுத்து மட்டும் தாங்க பழக்கம்- தளபதியின் கலக்கல் பேச்சு



அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறா இந்த படத்தின் ஷூட்டிங் ஆரபிக்கும் பொன்னான நாளை எண்ணி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Ajith-Kumar
விசுவாசம் படத்தில் அஜித்திக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார், இசையமைப்பாளர் இமான் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் முடிந்ததும் அஜித் எந்த இயக்குனருடன் இணைவார் என்ற கேள்வி அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
charlie chaplin
பலர் விஷ்ணுவரதனுடன் தான் அடுத்த படத்தில் நடிக்க போகிறார் அஜித் என கூறுகிறார்கள், ஆனால் பிரவு தேவாவோ அஜித்தை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவனும் அஜித்துடன் இணைய ரெடியாக இருக்க, இப்பொழுது அஜித் யாரை தான் தேர்வு செய்யபோகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும், உங்களின் கருத்தை கமென்ட் செய்யவும்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் இரண்டு இயக்குனர்கள் யார் யார் தெரியுமா

மோகன்ராஜா தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர். இவர் இயக்கிய வேலைக்காரன், தனி ஒருவன் ஆகிய படங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ஏன் அஜித்தை வைத்து இன்னும் படம் இயக்கவில்லை என்று ஒரு பேட்டியில் இவரிடம் கேட்டனர்.
அதற்கு ‘நான் எப்போதும் ஒரு முறை கதை சொல்ல போனால் கண்டிப்பாக அவர் ஓகே சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.
அந்த அளவிற்கு அவர்களை இம்ப்ரஸ் செய்ய வேண்டும், அஜித் சாருக்காக இதுவரை யாரும் யோசிக்காத கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்துள்ளேன்.
கண்டிப்பாக அவரிடம் ஒரு நாள் கதை சொல்லி ஓகே வாங்குவேன்’ என கூறியுள்ளார்.


தமிழகத்தில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் விஜய். இவருக்கு திரையுலகிலும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, சமீபத்தில் நாச்சியார் படம் பார்த்துவிட்டு விஜய் ஜிவியை பாராட்டியுள்ளார்.
மேலும், இந்த படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தால், அதை கண்டிப்பாக தளபதிக்கு தான் சமர்ப்பணம் செய்வேன் என்று ஜிவி கூறியுள்ளார்.
நாச்சியார் படத்திற்காக ஜிவிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்


CANADA PRIME MINISTER/HONORABLE JUSTIN TRUDEAU

Wednesday 21 February 2018

மல்ஹாசன் இன்று பிரமாண்டமாக தன் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். காலை இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து அப்படியே மதுரை வந்து அரசியல் அறிமுக விழாவிற்கு வருகை தந்தார்.
இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கலந்துகொண்டார். நம்மவர் என்ற பெயர் இசையுடன் விழா தொடங்கியது. நாளை நமதே என இப்பயணம் தொடங்கியுள்ளது.
சினேகனின் எழுச்சியரை நிகழ்ந்தது. மக்கள் பலரும் ஆரவாரத்துடன் கைதட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் பிரதிநிதியாக கமல் வழியில் நாம் செல்லவேண்டும் என கூறினார்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவர் மக்கள் நீதி மய்யம் என தன் கட்சி பெயரை அறிவித்தார். கமலில் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வந்தனர், மதுரையே கூட்டத்தில் ஸ்தம்பித்தது.



ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பார்த்த கமலின் கட்சி பெயர் இது தான்!

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு அழகிய குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள்.
தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது. மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி. இமான் தான் இசையமைக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்து, படத்தில் ரௌடியாக அஜித் நடிப்பார் என்று முன்பே சில செய்திகள் வெளியானது, அது தற்போது உறுதியாகியுள்ளது, ஏன்னெனில் படத்திற்காக அஜித் தற்போது துப்பாக்கி சூடு பயிற்சி எடுத்து வருகிறாராம். மேலும், படத்தில் அர்ஜுன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் இந்த படத்தில் அர்ஜுன் காவல் அதிகாரியாக நடிக்க அஜித் ரௌடியாக நடிப்பாரோ..? எல்லாம் சிறிது மாதங்களுக்கு தான். படம் வெளியாகித்தானே ஆகவேண்டும் அப்போது தெரிந்துவிடும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.


விசுவாசம் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா என்ன நடக்க போகிறதோ

Tuesday 20 February 2018

'ஷவர்மா' வாங்கித் தராத கணவனுக்கு... 'டைவர்ஸ் நோட்டீஸ்' அனுப்பிய மனைவி!
எகிப்து நாட்டில் புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியினர் வெளியே சென்றுள்ளனர். அப்போது  ஷமீகா தனது கணவரிடம் ஷவர்மா வாங்கித்தரும்படி ஆசையாகக் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது கணவர், ஷவர்மாவை வாங்கித்தர மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குத் திரும்பிய ஷமீகா , தனது கணவனுக்கு உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இருவருக்கும் திருமணமாகி 40 நாட்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷவர்மா' வாங்கித் தராத கணவனுக்கு... 'டைவர்ஸ் நோட்டீஸ்' அனுப்பிய மனைவி!



Vannakam Chennai, Legend of Grilling Barbeque Nation along with The Social Media Doode presents
"Biggest Foodie Contest"
Love Barbeque Starters?? You think you have the talent to eat unlimited Yummy Starters?
Don't wait any further, Register for Biggest Foodie Contest right away.Date : 27th Feb 2018 (Tuesday)
Time : 4.30 PM
Venue : Barbeque Nation, Tnagar
Steps for registration
1 - Click the link below, Tag your friends in our contest post, Share the post.
https://goo.gl/ztYA9N
2 - Fill in the form below.
3 - Like and Follow The Social Media Doode official page for further updates about the contest.
* REGISTRATION IS FREE. NO COST INVOLVED.
* Registration Link Closes on Feb 25th 2018 , 4.30pm.
* 20 People from the registered list will be selected on a computerised basis and will be called for the final challenge happening on 27th Feb 2018.
Best of luck guys, Start Registering and Tagging.
Strategic Branding & Creative Digital Promotion by The Social Media Doode.



Name *
Your answer
Age *
Your answer
Email ID *
Your answer
Mobile Number *
Your answer
Gender *
Area in Chennai? *
Your answer
Have you been to barbeque nation before? *
Have you tagged your friends on FB Post and Shared it? *
Preference of Food *
SUBMIT
Never submit passwords through Google Forms.
This form was created inside The Social Media Doode. Report Abuse - Terms of Service - Additional Terms

Barbeque Nation's Biggest Foodie Contest.

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com