ரஜினி-கமல் தொடர்ந்து அடுத்து இடத்தில் பேசப்படுபவர்கள் அஜித்-விஜய். இவர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதற்கு சான்று அவர்கள் படங்களின் ரிலீஸ் அன்று பார்க்க வேண்டும்.
அண்மையில் நடிகர் மனோபாலா சினிமா குறித்து பேட்டி கொடுக்கையில், ரஜினி-கமல் அடுத்து கண்டிப்பாக அஜித்-விஜய் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், அவர்களுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித்-விஜய் இருக்கிறார்கள். ஆனால் யார் ரஜினி-கமல் என்று கூற முடியாது. அஜித்துக்கு இருக்கும் ஒரு ஓபனிங் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.
அதேபோல் விஜய்யையும் அப்படி பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். எனக்கு தெரிந்து இப்போது உள்ள நடிகர்களில் சிவகார்த்திகேயன் இவர்களது அடுத்த இடத்தில் வந்திருக்கிறார் என்றார்.
Post a Comment