HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 31 July 2021

 



தனது மாறுபட்ட கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கமல் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். எனவே இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும், வில்லனாக விஜய் சேதுபதியும், விஞ்ஞானியாக பகத் பாசிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு சில நாட்கள் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை வியாபாரம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கோல்ட்மேன் மைண்ட் என்ற நிறுவனம் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை 31 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மட்டும் மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் 31 கோடி லாபம் பார்த்த கமல்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த லோகேஷ்:-

Thursday 29 July 2021

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தானே சிவாவை அழைத்து இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்புகளுக்கு ஏகப்பட்ட இடையூறுகள் வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அண்ணாத்த படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பழையபடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவதால் இப்போதே அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விடலாம் என படக்குழுவினருக்கு தூது விட்டுள்ளார்.

இதைப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் உடனடியாக அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக ஒரு தனி ஸ்டூடியோ ஒன்றை ஏற்பாடு செய்து ரஜினிக்கு கொடுத்துள்ளது. விரைவில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட ஆர்வமாக இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே தேதியில் பல முன்னணி நடிகரின் படங்கள் வெளியாகவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

ரஜினி அண்ணாத்த படத்தில் டான் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர். ரஜினியின் சினிமா கேரியரில் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் எனவும் தெரிகிறது.

அண்ணாத்த படத்தில் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்.. அனல் பறக்கும் அப்டேட்:-

Tuesday 20 July 2021

 


 

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


         allah, allah names, ya allah           

     PLEASE WATCH VIDEO HERE


 

 

 

இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகத்தான தியாகம்:-

Saturday 17 July 2021

 



கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் ‘விக்ரம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது ஒரு உயர் நிலை பள்ளியில் மீண்டும் இணைந்தது போல உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் நான் திரைப்பட படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுதான். நான் மட்டுமின்றி பல திரைப்பட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்பையும் நடத்தவில்லை.

எங்கள் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் படப்பிடிப்பில் பணிபுரிய விக்ரம் படக்குழுவினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் என்று கமல் பதிவு செய்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் இதுவே முதன் முறை.. நடிகர் கமல் ஹாசன் பதிவு:-

Thursday 15 July 2021

 



தற்போது வெளிவர இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை விட ஒரு படி அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்திற்கு தான் என்றால் மிகையாகாது.

அதற்கு காரணம் விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற தரமான நடிகர்கள் இணைந்துள்ளது தான். திறமையான நடிகர்கள் 3 பேர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் விக்ரம் படம் எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கின்றன.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இதையெல்லாம் லோகேஷ் கனகராஜ் எப்படி சமாளித்து மூவருக்கும் இணையான கதாபாத்திரம் கொடுத்து படத்தை எடுக்கப் போகிறார்? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விக்ரம் படத்தில் முதலில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் போலீஸ் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது பார்வையற்றவராக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்

ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தான் தெரியவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே ராஜபார்வை என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட விஜய் கண் பார்வையற்றவராக நடிப்பதாக ஒரு தகவல் வைரலானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஒரு படம் வெளியாவதற்கு முன்னர் அது குறித்து ஆயிரம் வதந்திகள் வருவது சாதாரண ஒன்றுதான். ஆக மொத்தத்தில் தற்போது தமிழ் சினிமாவை அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது விக்ரம்.


விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்:-

Monday 12 July 2021

 



வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணிநேரத்தில் முறியடித்துள்ளது. இதுவரை வலிமை மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.

புதிய சாதனை படைத்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்,எல்லா சாதனைகளையும் முறியடித்தது :-

Saturday 10 July 2021

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று மீண்டும் சென்னைக்குத் திரும்பிவிட்டார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரஜினியின் அரசியல் சலசலப்புக்களுக்கு பிறகு அண்ணாத்த படம் வெளியாவதால் இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் ரஜினியின் கடைசி படம் எனவும் செய்திகள் வெளியானது.

அதற்கு காரணம் அவருக்கு சமீபத்தில் உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் இனி ரஜினி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் அமெரிக்காவுக்கு சென்று வந்த ரஜினி முன்னரை விட தற்போது மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.

இருந்தாலும் இன்னும் சில வருடங்கள் மட்டுமே படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். ரஜினியின் 168 வது படமாக உருவாகியிருக்கிறது அண்ணாத்த. அதனைத் தொடர்ந்து 169 மற்றும் 170 போன்ற படங்களை யார் இயக்கப் போகிறார்கள், யார் தயாரிக்கப் போகிறார்கள் என்ற செய்திகள் கிடைத்துள்ளன.

ரஜினியின் அடுத்த படமான 169 வது படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். மேலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்க உள்ளாராம்.

அதோடு கோலிவுட்டில் ரஜினியின் கடைசி படமாக அவருடைய 170வது படத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தை பெரும்பாலும் அவரது மருமகன் தனுஷ் இயக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறதாம். மேலும் அவருடைய இரண்டு மகள்களும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்களாம். ஆனால் ஒரு சிலரோ தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி அவ்வளவு சீக்கிரத்தில் சினிமாவை விட்டு போக மாட்டார் என்கிறார்கள். ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம், அண்ணாத்த ஆட்டத்தை!

ரஜினியின் கடைசி இரண்டு பட இயக்குனர்கள் இவர்கள்தான்.. அதோடு சினிமாவுக்கு முழுக்காமே!:-

Thursday 8 July 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE

 


 
Dajjal Series /Lesson 5 - MUST WATCH /நவீன டெக்னாலஜி தான் தஜ்ஜாலா :-

Dajjal Series/Lesson 6 தஜ்ஜால் உலகில் தங்கி இருக்கும் கால அளவு:-எவ்வாறு கணக்கிட வேண்டும்:-

Thursday 1 July 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


Dajjal Series /Lesson 4 - MUST WATCH / தஜ்ஜாலின் உருவ அமைப்பு /Dajjals Appearance:- https://e-funandjoyindia.blogspot.com/2021/06/dajjal-series-lesson-4-must-watch.html


Please watch this bayan without fail.

Dajjal Series /Lesson 5 - MUST WATCH /நவீன டெக்னாலஜி தான் தஜ்ஜாலா :-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com