HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 30 October 2020

 தஜ்ஜால் தொடர் -பதிவு-19

தஜ்ஜாலின் பித்னாக்கள்
தஜ்ஜாலும் நவீன மகளிரும்.
தஜ்ஜாலை மிக அதிக அளவில் யூதர்களும்,யூதர்களுக்கு அடுத்தப்படியாக பெண்களும் அதிக அளவில் பின் தொடர்வார்கள் என்பது ஹதிஸ்.
ஆகவே பெண்கள் தான் ஆண்களை விட தஜ்ஜால் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
தஜ்ஜால் பல யுக்திகளை பயன்படுத்தி பெண்கள் மத்தியில் பித்னாக்களை பரவச்செய்திருந்தாலும் தற்போது அவன் எடுத்திருக்கும் ஆயுதம் மிகவும் மோசமானது.
ஆம்,எந்த மார்க்கம் பெண்களின் உரிமைகளையும்,விடுதலையையும்,நீதியையும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்ததோ அந்த மார்க்கத்தை ,நேர்வழி காட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை, பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற பொய்யை , மாயையை Main stream media க்கள் மூலம் உருவாக்கி அதை பரப்புதல் என்ற அயோக்கியதனமான சிந்தனையை(ஆயுதத்தை) தஜ்ஜால் கையிலெடுத்திருக்கிறான்.
இந்த ஆயுதத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும், இஸ்லாம் வழங்கிய பெண்ணுரிமைகளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெண்ணுரிமை என்ற முழக்கத்தை நவீன உலகம் 20 ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாக முழங்கியது ஆனால் இஸ்லாம் இந்த முழக்கங்களை 1500 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாக்கியது என்பது இஸ்லாத்தின் எத்தனையோ பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.
உலகமே பெண் குழந்தைகளை ஏதோ பூச்சிகளை கொல்வது போல் கொலை செய்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை தடை செய்த மார்க்கம் இஸ்லாம்.மேலும் பெண் குழந்தைகளை உரிய முறையில் பராமரித்து அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பெற்றொர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
கணவன் இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றும் கொடிய நிகழ்ச்சிகள் அரங்கேறிய காலத்தில்,கணவன் இழந்த பெண்களுக்கு மறுமணத்தை தடை செய்து அவர்களை மிக தவறான பயன்படுத்தலுக்கு உட்படுத்திய காலத்தில் பெண்களுக்கான மறுமணத்தை மிகவும் எளிமையான ஒன்றாக மாற்றியது இஸ்லாம் தான்.
விவாகரத்து சட்டங்களிலும் பெண்களுக்கு தான் முழு சலுகை வழங்கியிருக்கிறது இஸ்லாம்.
கணவன் தலாக் கேட்டால் பலக்கட்ட விசரணைகள்,பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் தலாக்.
மனைவி கணவனிடமிருந்து பிரிவதற்கு குலா கேட்டால் எந்த விசாரணையும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை உடனே குலா வழங்கப்படும்.
உலகம் முழுவதும் வரதட்சணை பெறும் காலத்தில், பெண்களுக்கு மணக்கொடைகளை வழங்கி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையை விதித்த ஒரே மார்க்கம் இஸ்லாம்.
ஒரு மனிதன் மிக அதிகமாக கடமைப்பட்டுள்ள மற்ற நபர்கள் யார் என்ற கேள்விக்கு முதல் மூன்று இடங்களை தாய்க்கு வழங்கி நான்காவது இடத்தை தந்தைக்கு வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.
மகள்,சகோதரி,மனைவி,தாய் என்ற அனைத்து படிநிலைகளிலும் பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களுக்கு நீதி வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாம் எவ்வாறு பெண்களுக்கு உரிமைகளை வழங்கியிருக்கிறதோ அதே போல சில கடமைகளையும் வரையறைகளையும் வகுத்துள்ளது.
இந்த வரையரைகளில் தான் தஜ்ஜால் தன் விளையாட்டை புகுத்தி பெண்களை அவனுடைய பித்னாக்கள் பக்கம் இழுத்து செல்கிறான்.
இறைவனும்,இறைத்தூதரும் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதில் மாற்றுக்கருத்துக்கொள்ள எந்த முஃமினுக்கும் உரிமை இல்லை என்ற அடிப்படையை, நம்பிக்கையை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் மனதில் பதிந்துக் கொண்டால் தஜ்ஜாலின் பித்னாக்களிலிருந்து எளிதில் தப்பி விடலாம்.
தஜ்ஜாலின் பித்னாக்களும் மகளிர் உலகமும்.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற முழக்கம்
இறைவன் தன் திருமறையில் வசனம் 2:228 மற்றும் 4:34 ஆகியவற்றில் பெண்களை விட ஆண்கள் ஒரு படி உயர்வானவர்கள் என்று குறிப்பிடுவதுடன் பெண்களின் மீதான நிர்வாகத்தினை ஆண்களிடம் வழங்குகிறான்.
ஒவ்வொரு பொருளையும் நுட்பமாய் படைத்து அதனை முழுமையாய் அறிந்து அதன் மீது ஆற்றல் செலுத்தும் இறைவன் தன்னுடைய இரண்டு படைப்புகளில் (ஆண் மற்றும் பெண்) ஒன்றை விட ஒன்று ஒரு படி உயர்வானது என்று அறிவிக்கிறான் என்றால் அவனுடைய அறிவிப்பை இறை நம்பிக்கை கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் துளி அளவும் மாற்றுக்கருத்துக் கொள்ளாமல் ஏற்க வேண்டும்.ஏனெனில் படைத்தவன் பிழைகளுக்கோ,
நிர்பந்தங்களுக்கோ அப்பாற்பட்டவன்.
மேலும் நாம் ஹதிஸ்களை ஆராயும் போது ,பெண்கள் ஜமாத்களுக்கோ,கிலாபத்களுக்கோ,ஏனைய பொது அமைப்புகளுக்கோ தலைமை ஏற்கக் கூடாது என்ற இறை கட்டளையை நாம் அறியலாம்.
பெண்ணை விட ஆண்கள் ஒரு படி உயர்ந்தவர்கள் என்று நிர்ணயித்து, தலைமை மற்றும் நிர்வாக பொறுப்பினை ஆண்களிடம் இறைவன் ஒப்படைத்துவிட்டான்.
ஆனால் தஜ்ஜால் தன் அடியாட்கள் மூலம் ஏற்படுத்தியுள்ள அமைப்புகளைக்கொண்டு ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற கருத்தியலை பரப்பி பெண்களிடம் பொது அமைப்பின் தலைமையையும் நிர்வாகத்தினையும் ஒப்படைத்திருக்கிறான்.
இன்று பெண்கள் MLA,MPகளாகவும்,முதலமைச்சர்களாகவும்,பிரதமர்களாகவும் உலகில் வலம் வருவது என்பது தஜ்ஜாலின் ஏற்பாடாகும்.
இறைவன் ஆண் பெண் படைப்பை பற்றி பேசும் போது பகல் மற்றும் இரவின் படைப்புடன் ஒப்பிடுகிறான். அதாவது சமூகத்தில் ஆண்களுக்கு ஒரு பணியையும் பெண்களுக்கு ஒரு பணியையும் இறைவன் ஒப்படைத்திருக்கிறான்.
ஆனால் இன்றைய தினம் ஆணகளும் பெண்களும் தங்களின் பணியை அறியாமல் தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆண்கள் பெண்களை போலவும் பெண்கள் ஆண்களை போலவும் உடையணிவது யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்களில் ஒன்றாகும் என்பது ஹதிஸ்.
சில மார்க்க அறிஞர்கள் இந்த ஹதிஸை முகாமத் (நேரடி பொருள்) வடிவிலானது என்றும் சிலர் முத்தஸாபிகாத் வடிவிலானது (குறியீட்டு பொருள்) என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஹதிஸ் இரண்டு வடிவிலும் இன்றைய தினம் உலகில் நடைமுறைக்கு வந்துவிட்டது.
பெண்கள் ஆண்களைப் போல உடை அணிவது போல ஆண்களும் பெண்களை போல (தாடி மற்றும் மீசையை ஒரே நேரத்தில் மழித்து) பெண்களுக்கான உடையணிகின்றனர். தங்களின் இயற்கைக்கு மாறான ஒரு பால் இச்சையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு.
இது ஹதிஸின் நேரடி பொருளுக்கான இன்றைய உலகம்.
பெண்களின் நிர்வாகிகளாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருபவர்களாகவும் ஆண்களை இறைவன் நியமித்திருக்கிறான்.ஆனால் இன்றைய நவீன உலகின் ஆண்கள் (போதையும்,சோம்பலும்,சொகுசும் தலைக்கேறிய ஆண்கள்) தங்கள் பெண்களின் வருவாய் கொண்டு வாழ்பவர்களாக உள்ளனர்.இங்கு பெண்கள், ஆண்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கி நிர்வகிக்கிறாள்.
அது போல் சிலர் பொருள் ஈட்டும் ஆண்களாகவே இருந்தாலும் குடும்பத்தின் தலைமை பொறுப்பையும் நிர்வாகத்தினையும் பெண்களிடம் இழக்கின்றனர்.இங்கு பெண்கள் குடும்பத்தின் தலைமையை ஏற்கின்றனர்.
இன்றைய உலகின் இந்த அவலநிலை, மேற்குறிப்பிட்ட ஹதிஸின் குறியீட்டு பொருளுடன் தொடர்புடையது.
ஆண் பெண்ணை விட ஒரு படி உயர்ந்தவன் என்று கூறி பெண்கள்,குழந்தைகள், பொது அமைப்புகள்,அரசு நிர்வாகம் என்று அனைத்தையும் ஆண்களிடம் இறைவன் ஒப்படைத்திருக்கிறான்.
ஆனால் தஜ்ஜால் ஆணும் பெண்ணும் சரிசமம் என்று கூறி ஆண்களின் பொறுப்பை பெண்களிடமும் பெண்களின் பொறுப்பை ஆண்களிடமும் ஒப்படைத்துவிட்டான்.
ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் இறை அறிவிப்புகளுக்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய பெண்களாக தொடரப்போகின்றனரா? இல்லை தஜ்ஜாலின் போலியான புதுமை பெண்கள் கோஷத்தில் மதி மயங்கி தஜ்ஜாலுக்கு இரையாக போகின்றனரா?என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் உள்ளத்தில் இருக்கும் ஈமான் மட்டுமே.
இன்றைய பெண்களின் உள்ளத்தில் இறைவன் உறுதியான ஈமான் உண்டாக்கட்டுமாக....
தஜ்ஜாலின் பொருளியல் பித்னாக்களையும்,
தஜ்ஜால் பொருளியல் துறையில் ஏற்படுத்தியுள்ள சர்வ நாசங்களின் அடிப்படையான காகித பணத்தையும் பற்றி வரும் தொடர்களில் காணலாம்....
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......


தஜ்ஜால் தொடர் -பதிவு-18, தஜ்ஜாலின் பித்னாக்கள் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.:-https://e-funandjoyindia.blogspot.com/2020/10/18.html?spref=tw




தஜ்ஜால் தொடர் -பதிவு-19, தஜ்ஜாலின் பித்னாக்கள்; தஜ்ஜாலும் நவீன மகளிரும்; பெண்கள் தான் ஆண்களை விட தஜ்ஜால் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்:-

Wednesday 28 October 2020

 தஜ்ஜால் தொடர் -பதிவு-18

தஜ்ஜாலின் பித்னாக்கள்
தஜ்ஜால் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளில் மிக முக்கிய ஒன்று சொத்துரிமை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் 20ஆம் நூற்றாண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது.ஆனால் இஸ்லாம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது.
இருந்த போதிலும் தஜ்ஜாலின் படைகள் இஸ்லாத்தின் சட்டத்தில் குறைக்காணுகின்றன. ஆண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்களை வழங்கும் இஸ்லாம், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அனுமதித்து பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தஜ்ஜாலின் ஒற்றைக்கண் பார்வையில் (இறை நம்பிக்கையற்ற சிந்தையை கொண்டு மேலோட்டமாக )பார்க்கும் போது இது நியாயமான ஒன்றாக தெரியும்.
ஆனால் இந்த சமூகத்தை படைத்த இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவனுடைய சட்டங்களில் பிழை ஏதும் இருக்காது என்பதில் உறுதியாக நின்று இறைவன் முடிவு செய்து விட்ட விஷயத்தில் மாற்று கருத்துக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது
தஜ்ஜாலின் அடியாட்கள் ஏற்படுத்தும் வாதம் அர்த்தமற்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சமூக இயங்குவியலில் தந்தைக்கு தேவையான உதவிகளை வழங்கும் உதவியாளனாகவும், தந்தையின் தொழிலில் பங்கெடுத்து உழைத்து பொருள் ஈட்டுவதில் பெரும் பங்கெடுப்பவனாகவும்,பெற்றோர்களை வயது முதிர்ந்த காலத்தில் பராமரிப்பவனாகவும்,பெற்றோர்கள் விரைவில் முந்தி சென்றுவிட்டால் குடும்பத்தின் பொறுப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் விளங்குவது ஆண்மகன்கள் தான்.
பெண்களை விட ஆண்களுக்கு கூடுதலான குடும்ப பொறுப்புகள் ஒதுக்கப்படும் போது அந்த பொறுப்புகளை கையாள அவனுக்கு பொருள் வசதி தேவைப்படும் எனவே தான் இறைவன் ஆண்களுக்கு ஒரு பங்கு சொத்துக்களை அதிகமாக வழங்குகிறான்.
பெற்றோர்களை பேண பெண்கள் விரும்பினாலும் பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் வீட்டில் தஞ்சம் அடைவதில்லை.இறைசட்டத்தின் படியும் சரி இயற்கையான மன உளவியல்படியும் சரி பெற்றோர்களை பேணும் பொறுப்பு ஆண்களிடமே உள்ளது என்பதை உணர வேண்டும்.
ஆண்களுக்கு அதிக பங்குகளை ஒதுக்குவதில் உள்ள நியாயத்திற்கு இங்கு வழங்கப்பட்ட விளக்கம் தவறாக கூட இருக்கலாம்.
ஆனால் பிழைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சட்டங்களில் பிழை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து சிந்தித்தால் நாம் பல சரியான விளக்கங்களை பெறலாம்.
இறைவன் பெண்களுக்கு விவகாரத்து முன்னுரிமை,மறுமணம் உள்ளிட்ட பல சலுகையை வழங்கிய போதிலும் இஸ்லாத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
ஆண்களுக்கு, இறைவன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை அனுமதிக்கும் போது பெண்களுக்கு அது போல் ஏன் இல்லை என்ற முட்டாள்தனமான கேள்வியை முன் வைக்கின்றனர்.
அனைத்தையும் படைத்த இறைவனுக்கு ஆண்களுடைய உடலமைப்பு மற்றும் பெண்களுடைய உடலமைப்பு,இரு சாராருடைய உடல் சார்ந்த மன இயக்கம் ,மனம் சார்ந்த உடல் இயக்கம் ஆகியன பற்றி நன்கு தெரியும்.மேலும் பால்வினை நோய்கள் பரவலுக்கான ஊடகம் என்பதை பற்றி தெரிந்தவனான இறைவன் வழங்கிய சட்டத்தில் பிழை இருக்க முடியுமா?
இன்றைய தினம் கூட உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் 80 கோடி பேர் அதிகம்.
போர்கள்,விபத்துகள்,குடி பழக்கங்கள் ஆகியவற்றால் இறப்பது ஆண்களே.
ஆண் குழந்தை பிறப்பு வீதம் பெண் குழந்தை பிறப்பு வீதத்தை விட குறைவு ஆனால் ஆண் குழந்தைகளின் இறப்பு வீதம் அதிகம்.
ஒரு நேரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தான் என்று வரையறுத்தால் உலகத்தில் அதிகமாக உள்ள 80 கோடி பெண்களின் நிலை என்ன?.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று கூறி வேடமிட்டு இரவு நேரங்களில் மறைமுக ஆட்டம் போடும் அயோக்கியர்களுக்கு இந்த 80 கோடி பேர் இரையாக வேண்டுமா?.
அயோக்கியர்களின் ஏமாற்று வாதங்களை கருத்தில் கொள்ளாமல் இறைவனின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கையே இஸ்லாமிய பெண்களை தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும்.
இங்கு வழங்கப்பட்ட விளக்கம் தவறானதாகவோ, போதுமானதாகவோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இறை சட்டத்தில் பிழை இருக்காது.
இறை நம்பிக்கையற்ற அறிவைக்கொண்டு சிந்திக்காமல் தஜ்ஜாலின் ஒற்றை கண் வழியே பாராமல் இறை நம்பிக்கை மற்றும் பரந்த அறிவு என்ற இரு கண்களை கொண்டு பார்க்கும் போது இறைச்சட்டம் மிகச்சரியானது என்பதற்கு பல விளக்கங்கள் உதயமாகலாம்.
மகளிரின் ஆடை சுதந்திரமும்,சமூக சீரழிவுகளும், குற்றங்களும்.
தஜ்ஜால் இறுதியாக சந்திக்க உள்ளது பெண்ணை தான் என்பது ஹதிஸ்.
இந்த ஹதிஸை நேரடி பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
நம் அனைவருக்கும் தெரியும் தஜ்ஜாலின் இறுதி நொடிகள் நபி ஈஸா(அலை) அவர்கள் உடன் தான்.
பின் எப்படி அவன் பெண்களை சந்திக்க முடியும்?.
ஹதிஸின் விளக்கம் என்னவென்றால் தஜ்ஜால் ஏற்படுத்தும் சீரழிவின் இறுதி இரைகள் பெண்கள் என்பதாகும்.
பெண்கள் உலகில் அவன் ஏற்படுத்தியுள்ள பித்னாக்கள் யுக முடிவு நாளின் சிறிய அடையாளங்களில் சிலவற்றை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தளர்வான, உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய, ஆடைகளை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மேலும் பெண்கள் எவ்வாறு முக்காடுகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வசனம் 24:31 விவரிக்கிறது.
இஸ்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆடைக்கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.
தஜ்ஜாலின் அடியாட்களால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அமைப்புகள் பெண் விடுதலை என்ற பெயரில் ஆடை விடுதலையை தூக்கி பிடிக்கிறது.
மனிதனின் ஆடை என்பது கண்ணியத்துடன் தொடர்புடையது.பெண்களுக்கு இன்னும் ஒரு படி மேலாக பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆனால் அதை பெண்கள் அமைப்புகள் அடிமைதனத்துடன் தொடர்புபடுத்தி என் ஆடை என் உரிமை என்ற மோசமான முழக்கங்களை முழங்குகின்றன.
நவீன தஜ்ஜால் பெண்கள் என்றைய தினம் தங்களது தலையிலிருந்து துணியை அகற்றினார்களோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக ஆடைகளை குறைத்து அல்லது மிக மிக இறுக்கமாக அணிந்து இன்று ஆடை அணிந்தும் நிர்வாணமாக உள்ளனர்.
ஆடை அணிந்தும் நிர்வாணம் என்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று.
இந்த குறைவான ஆடைகளால் இன்று அவர்கள் பல விதமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.கற்பழிப்புகளுக்கு காரணம் கேவலமான ஆடைகள் ஏற்படுத்தும் ஆபாசம் தான் என்று எடுத்து கூறினாலும் , மிகச் சிறிய குழந்தைகள் கூட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் அவர்களிடம் என்ன ஆபாசம் கண்டீர் என்று முட்டாள்தனமான, சினிமா பாணி எதிர் கேள்விகளையே தஜ்ஜால் பெண்கள் கேட்கின்றனர்.
சிறிய அளவில் கூட உளவியல் அறிவு இல்லாதவர்கள் தான் இந்த கேள்வியை கேட்கவோ ரசிக்கவோ முடியும்.
உந்தப்பட்ட மனதின் உடனடியான செயல்களாலும் அந்நேரத்தி்ல் உந்தப்பட்ட மனதை சூழ்ந்துள்ள சூழல்களும் அந்த மனதின் பிற காரணிகளும் (ஆக்ரோசம், பயம், விருப்பு ) தான் பலி இளம்பெண்ணா? அல்லது குழந்தையா? என்பதை தீர்மானிக்கிறது.
உந்துதலுக்கு காரணமான பெண் சில நேரங்களில் நேரடியாக தாக்கப்படலாம்.அவள் பாதுகாப்பான சூழலில் இருந்தால் அவளுக்கு பதிலாக வேறொரு பெண்ணோ, குழந்தையோ ஏன் நாய் மாடு போன்ற மிருகங்கள் கூட தாக்குதலுக்கு ஆளாகலாம்.
குற்றத்திற்கு இரையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் குற்றத்தின் அடிப்படை கேடுகெட்ட ஆடைகளால் தூண்டப்பட்ட மனம்.
பல நவீன மூளை நரம்பியல் மற்றும் மன உளவியல் வல்லுநர்கள் குறை ஆடைகளின் கேடுகளை கீழ்க்கண்டவாறு படிப்படியாக விவரிக்கிறார்கள்.
ஒருவன் மனது தூண்டப்படும் போது அவன் மூளையில் ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரித்து அது அவனை அடுத்த நிலைக்கு ஆபாச படங்களை நோக்கி அழைத்து செல்லும்.
நாளடைவில் ஆக்ஸிடோசின் சுரப்பு மேலும் அதிகரிக்கும் போது அது அவனுக்கு ஆபாச காட்சிகளில் சலிப்பை ஏற்படுத்தி பெண்களை நோக்கி விபச்சாரத்தின் பக்கம் இழுத்து செல்லும்.
ஆனாலும் ஆக்ஸிடோசின் அளவு மேலும் அதிகரித்து பெண்களின் மீது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.இப்போது அவன் தனக்கு மாற்று வழியாக இரண்டு விஷயங்களை எடுப்பான்
1)இயற்கைக்கு மாறான ஓரின சேர்க்கை
2)குழந்தைகள் மீது வன்கொடுமை
கேடுகெட்ட ஆடைகளால் குழந்தைகள் பலியாகும் படிநிலை இது தான்.
ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ளும் காலம் வராமல் யுக முடிவு நாள் ஏற்படாது என்பது ஹதிஸ்.அதை ஏற்படுத்தியதில் பெண்களின் ஆடைக்கு ஒரு பங்கு உண்டு.இது தஜ்ஜாலால் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு சிறிய அடையாளம்.
ஆக்ஸிடோசின் சுரப்பு இத்துடன் குறைந்து விடாமல் மேலும் அதிகரித்து அவனை மிருகங்கள் பக்கம் அழைத்து செல்லும்.
குடி போதை எவ்வாறு தொடர்ந்து அதிகரித்து ஒருவனை கொல்லுமோ அது போல் ஆக்சிடோசின் சுரப்பு தொடர்ந்து அதிகரித்து திடீரென்று ஒரு நாள் ஒரே அடியாக குறைந்து ஆண் தன்மையை முழுமையாக போக்கும்.அப்போது பாதிக்கப்பட்டவனின் மனைவி வேறொருவனை தேடலாம்.
இவ்வாறு தான் அரைகுறை ஆடைகள் சமூகத்தை சீரழித்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சீரழிவின் தொடக்கத்தில் இவன் வேறு பெண்களை நோக்கி செல்வதாலும் முடிவில் இவனுடைய பெண்கள் வேறு ஆணிடம் செல்வதாலும் இன்று விபச்சாரம் அதிகரித்துள்ளது.
இதுவும் தஜ்ஜால் ஏற்படுத்தியுள்ள சிறிய அடையாளத்தில் ஒன்று.
தஜ்ஜால் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் மகளிர் உலகில் கேட்டை விதைத்து பல சமூக சீரழிவுகளை ஏற்படுத்திவிட்டான்.
பதிவு நாளை தொடரும்......

தஜ்ஜால் தொடர் - பதிவு-17,தஜ்ஜாலின் பித்னாக்கள் 1.தஜ்ஜாலின் மழை. 2.தஜ்ஜாலின் நீரும் நெருப்பும்:-https://e-funandjoyindia.blogspot.com/2020/10/17-1-2.html?spref=tw




தஜ்ஜால் தொடர் -பதிவு-18, தஜ்ஜாலின் பித்னாக்கள் மகளிர் உலகில் பரப்பும் குழப்பவாதங்கள்.

Tuesday 27 October 2020

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் நடிக்கும் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு நடித்திருப்பார். இருவருக்குமிடையேயான காமெடி காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இதனையடுத்து தற்போது மீண்டும் இதே கூட்டணி வலிமை படத்திலும் அமைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது முழுவீச்சாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் வலிமை படத்திலும் யோகி பாபுவின் அசத்தலான காமெடியை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



வலிமை படத்தில் அஜித்துடன் மீண்டும் கைகோர்க்கும் முன்னணி பிரபலம்.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.!!




Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



அப்துல்லாஹ் இப்னு சபா மீது பழிபோடுவது சரியா ? | கர்பலா-43:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/43_13.html?spref=tw

உமர்(ரலி) அமைத்த பதவி ஆசையில்லாத 6 பேர் கமிட்டி| கர்பலா-44

Monday 26 October 2020

 தஜ்ஜால் தொடர் - பதிவு-17

தஜ்ஜாலின் பித்னாக்கள்
1.தஜ்ஜாலின் மழை.
2.தஜ்ஜாலின் நீரும் நெருப்பும்.
ஷஹிஹ் முஸ்லிம் ஹதிஸ் எண் -7372:
தஜ்ஜால் மக்களின் ஒரு கூட்டத்திடம் சென்று தன்னை மீட்பராக ஏற்றுக் கொள்ள அறிவிப்பு செய்வான்.அவன் அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டதும் அவன் வானங்களுக்கு கட்டளையிடுவான் அது மழை பொழியும்.
அடுத்து ஒரு கூட்டத்திடம் சென்று அறிவிப்பு செய்வான்.ஆனால் மக்கள் அவனை புறக்கணிப்பார்கள்.இதனால் தஜ்ஜால் மழையை தடுத்து மக்களுக்கு வறட்சியை ஏற்படுத்துவான்.
இந்த ஹதிஸின் மூலம் நமக்கு தெரிய வருவது தஜ்ஜால் வானிலையை தம் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் என்பது ஆகும்.
மேலோட்டமாக பார்க்கும் போது இது ஒரு அற்புதம் போல தோன்றும்.ஆனால் உண்மையில் இது ஒரு கேடான அறிவியலாகும்.
அற்புதங்கள் என்பது இறைத்தூதர்களுக்காக இறைவனிடம் இருந்து வரும் சான்றாகும்.
ஒவ்வொரு தூதருக்கும் ஒவ்வொரு விதமான அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தது. எனவே அற்புதம் என்பது இறைவனின் தூதர்களுக்குரியதே தவிர தஜ்ஜாலுக்குரியதல்ல.
தஜ்ஜால் ,வானிலையை அறிவியல் உபகரணங்களை கொண்டு கட்டுப்படுத்துவான் என்பது தான் உண்மை.
இன்றைய நவீன அறிவியல் HAARP என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வானிலையை கட்டுப்படுத்தும் யுக்தியில் வெற்றி அடைந்துள்ளது.
அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ கதிர்களை பயன்படுத்தி வான்வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம் மற்றும் அழுத்த அளவுகளில் மாறுதல்கள் செய்து செயற்கையான காற்றழுத்த தாழ்வுநிலையை உண்டாக்கி மழையை பெற இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.மேலும் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயற்கையாக ஏற்படும் புயல்களை அகற்றி மழையை தடுக்கவும் முடியும்.
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புவி தட்டுகளை அதிரச்செய்து செயற்கையான நிலநடுக்கங்களையும் ,ஆழிப்பேரலைகளையும் உருவாக்க முடியும்.
இந்த HAARP ஆயுதம் எதிர்கால போர்களில் மிகப்பெரிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம்.
தஜ்ஜாலின் மழை என்பது ஒரு கேடான அறிவியலே தவிர அற்புதம் இல்லை என்பதை நாம் அறிந்து உறுதி செய்துக் கொண்டால் அவனுடைய பித்னாவில் நாம் அகப்படாமல் இருக்கலாம்.
2.தஜ்ஜாலின் நீராறும் நெருப்பாறும்.
ஸஹிஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதிஸ்:
தஜ்ஜாலிடம் நீராறும் நெருப்பாறும் இருக்கும்.நீங்கள் எதை நெருப்பாக காண்கிறீர்களோ அதில் குதித்து விடவும் ஏனெனில் அவனிடம் உள்ள நீர் உண்மையில் நெருப்பாகும் அது போல அவனிடம் உள்ள நெருப்பு உண்மையில் நீராகும் என்று தூதர் அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த ஹதிஸ்- உண்மையான நீரையும் நெருப்பையும் கூறவில்லை இது ஒரு குறியீட்டு மொழி.
தஜ்ஜாலை ஏற்றுக் கொண்டு அவன் பித்னாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவனிடம் இருக்கும் நீராறு(சொர்க்கம்) அதாவது போதை,விபச்சாரம்,திருட்டு செல்வங்கள் என்ற அனைத்து சிற்றின்பங்களும் இவ்வுலகில் கிடைக்கும்.ஆனால் தஜ்ஜாலின் இந்த சொர்க்கம் மக்களை மறுமையில் நரகில் தள்ளும்.
தஜ்ஜாலை மக்கள் நிராகரிக்கும் போது அவனுடைய நெருப்பாறு (நரகம்)(அவனுடைய கேடுகெட்ட ராணுவத்தின் கொலை, கற்பழிப்பு, செல்வ அபகரிப்பு போன்ற சித்ரவதைகள்) மக்களுக்கு கிடைக்கும்.
இந்த கொடுமைகள் மக்களை ஷஹீதுகளாக்கி மறுமையில் சொர்க்கத்தை பெற்று தரும்.
தஜ்ஜாலின் பித்னாக்களை உறுதியோடு எதிர்கொள்ளும் ஆற்றலை இறைவன் நமக்கு வழங்கட்டுமாக.....
தஜ்ஜால் மகளிர் உலகில் ஏற்படுத்திய பித்னாக்களை நாளை காணலாம்.நாளைய பதிவு பெண்களுக்கு கசப்பை தரலாம்.ஆனால் அல்லாவின் மார்க்கம், அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
பதிவு நாளை தொடரும்.......


தஜ்ஜால் தொடர் - பதிவு- 16:- தஜ்ஜாலின் பித்னாக்கள், தஜ்ஜாலின் மிகக் கொடிய பித்னாக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முதலில் அந்த பித்னாக்கள் எவை என்பதை நாம் இனம் காண வேண்டும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/16.html?spref=tw




தஜ்ஜால் தொடர் - பதிவு-17,தஜ்ஜாலின் பித்னாக்கள் 1.தஜ்ஜாலின் மழை. 2.தஜ்ஜாலின் நீரும் நெருப்பும்:-

Saturday 24 October 2020

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 16

தஜ்ஜாலின் பித்னாக்கள்
நாம் ஒவ்வொரு தொழுகையின் இறுதி அமர்விலும் ஸலாவத் ஓதிய பின் ஒரு துஆ ஓதுகிறோம்.
அந்த துஆ வில் நாம் இறைவனிடம் கோருவது - கப்ர் வேதனை,நரக வேதனை,வாழ்வியல் சோதனை ஆகியவைகளிலிருந்துபாதுகாப்பாகும்.இந்த துஆ வில் இறுதியாக தஜ்ஜாலின் பித்னாக்களிலிருந்து பாதுகாப்பாயாக என்று இறைஞ்சுகிறோம்.
எனவே தஜ்ஜாலின் மிகக் கொடிய பித்னாக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முதலில் அந்த பித்னாக்கள் எவை என்பதை நாம் இனம் காண வேண்டும்.
தஜ்ஜாலின் பித்னாக்கள் வானிலை,உயிரமைப்பு,பொருளாதாரம்,அரசியல்,சமூக அமைப்பு என அனைத்து துறைகளையும் இன்று ஆக்கிரமித்துள்ளது.
தஜ்ஜாலின் பித்னாக்கள் எதுவும் சாதாரணமானவை இல்லை.அனைத்தும் ஷிர்க்(இணைவைப்பு) ஆகும்.
தஜ்ஜால் தன் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் மூலம் , அவனுடைய பித்னாக்களை உலகம் முழுவதும் பரவச் செய்துள்ளான்.அந்த பித்னாக்களை உலகிலுள்ள பெரும்பாலானோரையும் ஏற்றுக் கொள்ளும் படி செய்திருக்கிறான்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், உலகிலுள்ள மற்ற மக்களையும் தங்களுடைய நகலாக(Duplicate GOG &Magog) மாற்றியிருப்பதன் மூலம் மக்கள் அனைவரையும் தஜ்ஜாலின் பித்னாக்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள செய்துள்ளது.
இந்நேரத்தில் நாம் நினைவு படுத்த வேண்டிய முக்கிய ஹதிஸ்.-
நியாய தீர்ப்பு நாளில் இறைவன் தந்தை நபி ஆதம்(அலை) அவர்களை அழைத்து சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு உரியவர்களை பிரிக்க சொல்வான்.தந்தை ஆதம் அவர்கள் எண்ணிக்கை என்ன என்று கேட்கும் போது 1000 பேரில் 999 பேர் நரகத்திற்கு என்று கூறுவான்.அதாவது மக்களில் 99.99% பேர் நரகவாசிகள்.நரகம் செல்லும் 1000 பேரில் 999 பேர் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர்(பிறப்பால்யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும்+தஜ்ஜாலின் பித்னாக்களை ஏற்றுக் கொண்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் நகலாகி போன மக்களும்).இவ்வாறாக ஹதிஸ் முடிவடைகிறது.
மிகப்பெரிய மன்னிப்பவனான, அருளாளனான இறைவன் 99.99% மக்களை ஏன் தண்டிக்க வேண்டும்?
பதில்:ஷிர்க்.
தஜ்ஜாலின் பித்னாக்கள் (ஷிர்க்) பல துறைகளில் இன்று பரவியுள்ளது.
வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் நிர்பந்தத்திற்குள்ளாகி அவனுடைய பித்னாக்களுக்கு கட்டுப்படும் மக்களின் மேல் குற்றம் இல்லை(உதாரணம்- ஹராமான காகித பண பயன்பாடு) . இதை விரும்பி ஏற்றுக் கொண்டு ஆதரிப்பது தான் மாபெரும் குற்றம் மற்றும் ஷிர்க்.
தஜ்ஜால் ஏற்படுத்திய சில ஷிர்க் பற்றி காணலாம்.
வானிலை தொடர்பான ஷிர்க் - செயற்கை மழை
மழையை சுமக்கும் மேகங்கள் என்பது இறைவன் அளிக்கும் நற்செய்திகளில் ஒன்றாகும்.இதை எப்போது எங்கு அனுப்ப வேண்டும் என்பது அவனுடைய அதிகாரமாகும்.ஆனால் இன்றைய தஜ்ஜாலின் அறிவியல் HAARP என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழையை தூண்டுகிறது. இந்த கேட்டை ஆதரிப்பதும் பயன்படுத்துவதும் ஷிர்க்.
பொருளாதார ஷிர்க் -காகிதப்பணம்.
இறைவன் அனுமதித்ததை தடுப்பதும் தடுப்பதை அனுமதிப்பதும் ஷிர்க்.இதை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இறைதூதர் தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை அங்கீகரித்து பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் இன்று INTERNATIONAL MONETARY FUND என்ற அமைப்பு அதன் அமைப்பு விதியாக அதன் முதல் ஷரத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியை பணமாக பயன்படுத்த தடை செய்கிறது.இந்த IMF அமைப்பில் பாகிஸ்தான்,சிரியா,துருக்கி,சவூதி,என்று தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துள்ள எல்லா நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
தங்கம் மற்றும் வெள்ளியை தடை செய்து ஹராமான காகிதப்பணத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் ஷிர்க் நாடுகளே தவிர இஸ்லாமிய நாடுகள் அல்ல.
காகிதப்பணம் எவ்வாறு ஹராமாகும் என்பது பின்வரும் நாளில் விளக்கப்படும்.
சட்டம் சார்ந்த ஷிர்க் - பாராளுமன்ற சட்டங்கள்
எவ்வாறு வாழ வேண்டும் என்று இறைவன் (அல் ஹக்கம்) கூறிய பின்பு அதற்கு மாறாக பாராளுமன்ற சட்டங்களை ஏற்றுக் கொள்வது ஷிர்க்.
உதாரணமாக தன் பாலின ஈர்ப்பை இறைவன் தடை செய்யும் போது, நீதிமன்றமும் பாராளுமன்றமும் அந்த குற்றத்தை சட்டமாக அங்கீகரிக்கும் போது அந்த கேடான சட்டத்தை தனி மனித உரிமை என்ற பெயரில் ஆதரிப்பதும் ஷிர்க்.
சமூக அமைப்பு சார்ந்த ஷிர்க்.
பெண்களை விட ஆண்கள் ஒரு படி உயர்ந்தவர்கள் என்று இறைவன் உறுதிப்படுத்திய பின்பு ஆணும் பெண்ணும் சரிசமம் என்று கருதுவதும் ஷிர்க்.
அரசியல் ஷிர்க் - அல்லாஹ் தான் அல் மலிக் அவன் தான் உண்மையான அரசன் அவனுடைய கீழ்படிதலில் தான் ஒரு அரசு இயங்க வேண்டும்.ஆனால் இன்றைய அரசுகளோ ஐ.நா.பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இந்த ஷிர்க்கான செயலுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
இவைகள் தான் தஜ்ஜால் தன் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினை கொண்டு ஏற்படுத்திய பித்னாக்கள்(ஷிர்க்).
இது போல் அவன் பல ஷிர்க்குகளை ஏற்படுத்தியுள்ளான்.இன்றைய நவீன மனிதர்களாகிய நாமும் ஏதோரு ஷிர்க்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இறைவன் , நம்மை இந்த கொடியவன் ஏற்படுத்திய ஷிர்க்-ல் இருந்து நம்மை பாதுகாத்து முஸ்லிம்களாக நம்மை கைப்பற்றுவானாக.....
பதிவு நாளை தொடரும்..........


தஜ்ஜால் தொடர் - பதிவு-15, தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் அமைப்புகள் - ZIONIST ORGANIZATION:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/15-zionist-organization.html?spref=tw



தஜ்ஜால் தொடர் - பதிவு- 16:- தஜ்ஜாலின் பித்னாக்கள், தஜ்ஜாலின் மிகக் கொடிய பித்னாக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முதலில் அந்த பித்னாக்கள் எவை என்பதை நாம் இனம் காண வேண்டும்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com