தஜ்ஜாலின் பணிகள்
இன்றளவும் ஒரு இறைதூதருக்காக, மீட்பருக்காக காத்திருக்கும் இஸ்ராயில் மக்கள் ஒருவரை மீட்பராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கீழ்க்கண்ட பணிகளை நிச்சயம் செய்து முடித்தாக வேண்டும்
1.அடிமைபட்டு கிடக்கும் புனித நகரை விடுதலை செய்ய வேண்டும்
2.விரட்டப்பட்ட மக்களை மீண்டும் புனித பூமியில் குடி அமர்த்த வேண்டும்
3.தாவூத் நபி அமைத்த அரசை மீண்டும் நிறுவ வேண்டும்.
4.அந்த அரசை சுலைமான் நபி காலத்தில் இருந்தது போல உலக வல்லரசாக மாற்ற வேண்டும்.
இந்த பணிகளை செய்து முடிக்காமல் நான் தான் மஸீஹ்(மீட்பர்) என்று தஜ்ஜலால் சொல்ல முடியாது.சொன்னாலும் இஸ்ராயில் மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆகவே மேற்கண்ட நான்கு பணிகள் தான் தஜ்ஜால் செய்து முடிக்க வேண்டியவை..
இப்பணிகளை தஜ்ஜாலால்(False Messiah ) செய்ய முடியுமா?
கண்டிப்பாக செய்து முடிப்பான்.இப்பணிகளை முடித்து இது தான் நம்முடைய பொற்கால ஆட்சி. இது தான் (Kingdom of David and Solomon)என்று அறிவிப்பான்.இஸ்ராயில் மக்களும் அவனை ஏற்றுக் கொள்வார்கள்.
தஜ்ஜால் (false Messiah) இதை செய்துவிட்டால் நபி ஈஸா(அலை) (True Messiah) வின் தேவை என்ன? அவர் ஏன் மீண்டும் வர வேண்டும்?
உஜைர் நபியின் அறிவிப்பின் படி பொற்கால ஆட்சியை ஏற்படுத்தும் மீட்பர் ஒரு இறை தூதர்.அப்படியென்றால் அவர் நீதமான வழியிலே இறை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு தர்மமான முறையிலே பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவார்.ஆனால் தஜ்ஜால் உலகத்திலுள்ள அனைத்து பித்னாக்களையும் கேடான காரியங்களையும் செய்து உலகத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவான்.எப்படி யேனும் உலக ஆட்சியை பிடிக்க முயலும் இஸ்ராயில்களும் தஜ்ஜாலின் பித்னாக்களை ஏற்றுக் கொள்வார்கள்.
தஜ்ஜாலால் உலகத்தில் நிரப்பப்பட்ட பித்னாக்களை ஒழித்து உலகை மீண்டும் நீதியால் நிரப்பி சுலைமான் நபியின் உண்மையான அரசை மீண்டும் புனித நகரில் ஜெருசலத்தில் ஏற்படுத்தி உஜைர் நபியின் முன்னறிவிப்பை முழுமைபடுத்த நபி ஈஸா இரண்டாம் முறை வருவார்.
ஆக ஈஸா நபிக்கு முன்பாகவே தஜ்ஜால்(போலி மீட்பர்) தாவூத் நபியின் போலி அரசை ஏற்படுத்துவான்.
தஜ்ஜாலின் நாட்கள்
தஜ்ஜாலின் நாட்களை பற்றிய முக்கிய ஹதிஸ்
தஜ்ஜாலின் நாட்கள் -40.
முதல் நாள் ஒரு வருடம் போன்றது
அடுத்த நாள் ஒரு மாதம் போன்றது
அதற்கடுத்த நாள் ஒரு வாரம் போன்றது
மீதமுள்ள நாட்கள் உங்கள் நாட்களை போன்றது.
இந்த ஹதிஸை சரியாக புரியாமல் சிலர் வெறும் 40 நாட்கள் என்பார்கள்
சிலர்(365+30+7+37=439) நாட்கள் என்கிறார்கள்
40 நாளோ 439 நாளோ இந்த குறுகிய காலத்தில் தஜ்ஜாலால் நான்கு மிக முக்கிய பணிகளை செய்ய முடியுமா?
முடியாது.அப்படியென்றால் ஹதிஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது
இந்த ஹதிஸை புரிய நமக்கு ஒரு அறிவியல் புரிதல் தேவை.ஐன்ஸ்டீனின் சார்பு கொள்கையின் படி (theory of relativity)ன் படி நேரம் என்பது அதன் அளவு என்பது இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்
பூமியின் 1000 ஆண்டுகள் என்பது விண்வெளியில் 10 நாளாகவும் விண்வெளியின் இன்னொரு புள்ளியில் ஒரு நாளை விடவும் குறைவாக இருக்கலாம்.இது தான் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.
குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நேர மாறுபாட்டு கொள்கையை கூறுகிறது.
மறுமையில் பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்கள் என்று கேட்கும் போது ஒரு நாளோ அரை நாளோ என்று கூறுவோம்.ஆனால் அதற்கும் குறைவு தான் என்று இறைவன் புறத்தில் பதில் வரும்.1000 ஆண்டுகள் வாழந்த நூஹ் நபி சமூகத்திற்கும் இது தான் பதில்.
இதன் மூலம் நாம் அறிய வேண்டியது தஜ்ஜாலின் காலம் மிக அதிகமானது.
முதல் நாள் மிக மிக நீண்ட காலமாகும்
இரண்டாவது நாள் மிக நீண்டது.
மூன்றாவது நாள் நீண்டது.
மற்ற நாட்கள் நம் நாட்கள்.இந்த சாதாரண நாட்கள் தொடங்கும் போது தான் தஜ்ஜால் தன்னை மீட்பராக அறிவிப்பான்.
தஜ்ஜாலின் பணிகளும் காலக்கட்டங்களும்
தஜ்ஜால் வெளியேறிவிட்டனா? அவன் வந்து விட்டான் என்றால் எப்போது வெளிப்பட்டான்?
தஜ்ஜால் தூதரின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டான் அவன் வெளிப்பட்டதை பற்றி விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் விவரிக்கிறேன்.
தஜ்ஜால் ஒரு வருடம் போன்ற நாள்(முதல் காலம்) மிக நீளமானது இந்த நாட்களில் தான் பிரிட்டிஷை உலக வல்லரசாக உருவெடுக்க செய்து இஸ்லாமிய கிலாபத் (உத்மானிய பேரரசு Ottoman empire) மீது முதல் உலகப் போரின் போது தாக்குதல் தொடுக்கச் செய்து புனித நகரை விடுவித்தான். அவனுடைய முதல் காலத்தில் முதல் பணியை வெற்றிகரமாக முடித்தான்.
ஏன் பிரிட்டிஷ் அவன் தேர்வானது?
அடுத்து வரும் நாட்களில் விரிவாக பதிவிடுகிறேன்.
அவனுடைய இரண்டாவது காலம் (ஒரு மாதம் போன்ற நாள்) இந்த நாட்களில் உலக அதிகாரத்தை பிரிட்டிஷ் கைகளிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றினான் மேலும் இரண்டாம் உலகப்போரை ஏற்படுத்தி அதன் விளைவாக ஐரோப்பிய யூதர்களை புனித நகரில் குடியேற்றினான் இதே காலக்கட்டத்தில் தான் அரபுகள் மீது இஸ்ரேலை போர் தொடுக்க செய்து இஸ்ரேலை தன்னை நாடாக அங்கிகரித்து கொள்ள செய்தான்.இந்த இரண்டாவது கால கட்டத்தில் தான் தன்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது பணிகளை முடித்தான்.இந்த இரண்டாவது காலகட்டம் தான் இன்றளவும் சென்று(11.08.2020) கொண்டிருக்கிறது.
இரண்டாவது காலம் முடிந்து மூன்றாவது காலம்(ஒரு வாரம் போன்ற நாள்) தொடங்கும் போது(வெகு விரைவில் தொடங்க உள்ளது) அதிகாரத்தை அமெரிக்காவின் கையிலிருந்து இஸ்ரேலின் கைக்கு மாற்றுவான் ஜெருசலத்தில் மூன்றாவது கோயிலை கட்டி (தன்னுடைய நான்காவது பணியை முடித்து)தன்னை மீட்பர் என்று அறிவிப்பான்.
பிரிட்டிஷ் மிக நீண்ட காலம் உலக வல்லரசாக இருந்தது(ஒரு வருடம் போன்ற நாள்)
அமெரிக்காவின் அதிகாரம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது(பிரிட்டனுடன் ஒப்பிடும் போது குறைந்த காலமே அதன் அதிகார நாட்கள் (தஜ்ஜாலின் ஒரு மாதம் போன்ற நாள்)
இஸ்ரேலும் மிக குறுகிய காலத்திற்கு (ஒரு வாரம் போன்ற நாள்) உலக வல்லரசாக இருக்கும்.
தஜ்ஜாலின் சாதாரண நாட்களில் தான்(நான்காவது கால கட்டத்தில்) தஜ்ஜாலுக்கும் இமாமுல் மஹதிக்கும் போர் நடக்கும்.இந்த காலத்தில் தான் நபி ஈஸா (அலை) தஜ்ஜாலை கொலை செய்வார்கள்.
இன்றைய பதிவு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல் இருக்கும்.ஆனால் தொடர் நிறைவு பெறும் போது இதனுடைய நிதர்சனம் நன்றாக விளங்கும்.
தஜ்ஜாலை பற்றி புரிந்து கொள்ள மார்க்கம் சார்ந்த குறியீட்டு மொழிகள் பற்றிய புரிதல் மிக அவசியம்.
நாளைய தொடரில் குறியீட்டு மொழிகளை(religious codings) பற்றி காணலாம்..
தஜ்ஜால் தொடர் பதிவு- 3 ஹதிஸின் குறியீட்டு சொற்களும் விளக்கமும்..
தஜ்ஜால் தொடர் பதிவு- 3
ஹதிஸின் குறியீட்டு சொற்களும் விளக்கமும்
தஜ்ஜால் ஒரு கண் ஊனமானவன் என்றும் அவன் நெற்றியில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும் என்றும் ஹதிஸ்கள் உள்ளன.இன்னும் அவனைப்பற்றி ஏராளமான ஹதிஸ்கள் உள்ளன.இவை அனைத்தும் நாம் அறிந்ததே.
நாம் அறியாத மிக முக்கிய ஹதிஸ் - இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்) கூறினார்கள்: தஜ்ஜாலை பற்றி நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன் ஆனால் என் கவலை எல்லாம் அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா? இல்லையா? என்பது தான்
மிக எளிமையான செய்திகளை(ஒற்றை கண், நெற்றியில் காபிர் எழுதப்பட்டிருத்தல், இன்னும் சில) போன்ற செய்திகளை புரிந்து கொள்வதில் மக்களுக்கு என்ன சிரமம்.ஏன் தூதருக்கு இதில் கவலை?
ஏனெனில் தூதர் கவலைபட்டது போல் இன்றைய தினம் நாம் யாருமே தஜ்ஜாலை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை.
உதாரணமாக இந்த ஹதிஸை பாருங்கள்
தஜ்ஜாலின் நெற்றியில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும் அதை படிக்க தெரிந்த மற்றும் படிக்க தெரியாத முஃமின்கள் அனைவரும் அதை படிப்பார்கள்.அதே போல படிக்க தெரியாத மற்றும் படிக்க தெரிந்த காபிர்கள் படிக்க முடியாது.இந்த ஹதிஸை படிக்கும் போது இரண்டு கேள்விகள் கண்டிப்பாக ஏற்படும்.
1.படிக்க தெரியாத முஃமின் எப்படி படிப்பார்?
2.படிக்க தெரிந்த காபிரால் ஏன் படிக்க முடியாது?
பதில்: சவூதி அரேபிய வஹாபி ஆலிம்கள் மொழியில் சொன்னால்(முட்டாள்கள் மொழியில் சொன்னால்) அல்லாவின் அதிசயம்.இது முட்டாள் தனமான பதில்
சரியான பதில்:நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தை எவ்வளவு தெளிவாக அடையாளம் காண முடியுமோ அது போன்று தஜ்ஜாலின் செயல்களை(பித்னாக்களை) அனைத்து முஃமின்களும் ( படிக்க தெரிந்த தெரியாத அனைவரும்)இது காபிர்தனமானது என்று அறிவார்கள்.ஆனால் காபிர்களால் படிக்க தெரிந்தாலும் இது கேடானது என்று அறிய முடியாது.
உதாரணம்1. இறைவன் தான் பெரியவன் அவனுடைய சட்டம் தான் உயர்வானது என்று இருக்கையில் பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதில் இயற்றப்படும் சட்டமே(இறை சட்டத்துக்கு எதிராக) சிறந்தது என்று கூறுவது இணைவைத்தல்(இறைவனுடைய இடத்தில் ஒரு மன்றத்தை வைத்தல்)
உதாரணம்.2.பருவம் அடைந்த ஆண் பெண் திருமணத்திற்கு தகுதியானவர்கள் என்று இறைவன அனுமதிக்கும் போது குறைந்த பட்ச வயது 18 மற்றும் 21என்று நிர்ணயித்து தடை விதிப்பது ஷிர்க்(இறைவன் அனுமதித்ததை தடை செய்வதும் தடை செய்ததை அனுமதிப்பதும் இணை வைத்தல் ஆகும் -காபிர்தனம்)
3.இறைவன் பழிக்கு பழி சட்டத்தில் நன்மை உண்டு என்று கூறிய பிறகு மரண தண்டனைக்கு எதிராக போராடுவது(ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட) காபிர்தனம்.
மேற்கண்ட மூன்று செயல்களும் காபிர்தனமானது என்பதை ஒரு முஃமினால் எளிதாக(நெற்றியில் உள்ள எழுத்தை படிப்பது போல்) புரிந்து கொள்ள முடியும் ஆனால் உள்ளத்தில் இறை நம்பிக்கை இல்லாத காபிரால் இது காபிர்தனமானது என்பதை அறிந்து கொள்ள முடியாது அவன் மெத்த படித்த மேதாவியாக இருந்தாலும்
இது தான் ஹதிஸின் சரியான பதிலும் விளக்கமுமாமும்.
தஜ்ஜால் தொடர்பான அதிகமான ஹதிஸ்களை நேரடியான அர்த்தத்தால் விளங்கி கொள்ள முடியாது.அவைகளை குறியீட்டு மொழிகளை விளக்குவதால் மட்டுமே விளங்க முடியும்.
4.தஜ்ஜாலின் வாகனம் குறித்த ஹதிஸ் -தஜ்ஜால் ,காதுகள் நீண்ட , வயிற்றின் நடுப்பகுதியில் நெருப்பு எரியக்கூடிய, பறக்கும் கழுதையில் பயணிப்பான்.
விளக்கம்:உண்மையான பறக்கும் கழுதையை நாம் எதிர்நோக்கினால் நாம் கனவுலகில் இருக்கிறோம் என்று தான் பொருள். இங்கு பறக்கும் கழுதை என்று குறிப்பிடப்படுவது - மிக நீண்ட இறக்கைகள் கொண்ட அதன் நடுப்பகுதியில் என்ஜின்களை கொண்டுள்ள கழுதையின் ஒலியை போல விரும்பத்தகாத ஓசையை பெற்றுள்ள அதிவேக விமானத்தை (super sonic fighter jet ஐ குறிக்கும்).
5.தஜ்ஜாலின் உயரம் தொடர்பான ஹதிஸ்- தஜ்ஜாலின் தோள்கள் வானத்திலும் கால்கள் கடலின் அடி ஆழத்திலும் இருக்கும்.
விளக்கம்:தஜ்ஜால் வானத்திற்கும் பூமிக்குமான அளவில் இருக்கக்கூடிய அசுரன் இல்லை.அவன் அதிகாரம் கடலிலும் வானத்திலும் பரந்து இருக்கும் என்பது தான் விளக்கம்.தஜ்ஜாலின் ஒரு மாதம் போன்ற நாளில் அமெரிக்கா தான் அவன் தலைமையிடம்.அந்த அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் நேட்டோ கூட்டுப்படையின், நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் அவன் அதிகாரத்தையும,கண்டம் பாயும் ஏவுகணைகள் வானத்தில் அவன் அதிகாரத்தை நிலை நிறத்தியுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தஜ்ஜாலை பற்றிய மிக முக்கிய ஹதிஸ் -தஜ்ஜால் ஒற்றை கண் கொண்டவன்(symbol of illuminati-all seeing eye).அவன் வலது கண்ணில் ஊனம் கொண்டவன்.
விளக்கம்:இறைவன் குர்ஆனில் பல இடங்களில் இறை மறுப்பாளர்களை கண்ணிருந்தும் அவர்கள் குருடர்கள் என்று கூறுகிறான்.அவன் கூறும் குருடு பார்வை சார்ந்தது அல்ல அறிவு சார்ந்தது
அது போல் வலது கண் ஊனம் என்பது அகம் சார்ந்த அறிவை சார்ந்தது.இறைவனையோ அவனுடய வானவர்களையோ நாம் கண்டதில்லை என்றாலும் அவர்களின் இருப்பை நாம் உறுதியாக நம்புகிறோம்.இந்த நம்பிக்கை தான் அகம் சார்ந்த அறிவு.ஆனால் தஜ்ஜாலுக்கோ அவனை பின்பற்றுவர்களுக்கோ அகம் சார்ந்த அறிவு இல்லை.(வலது கண் ஊனமானவன்)
அவனது இடது கண் நன்றான நிலையில் இருக்கும் அதாவது புறம் சார்ந்த அறிவு (கண்ணுக்கு தெரிந்த்தை மட்டும் நம்ப வேண்டும்,கண்ணுக்கு தெரிந்த இவ்வுலகத்தோடு வாழ்க்கை முடிந்துவிடும் போன்ற materialistic சிந்தனை மட்டுமே அவனிடமும் அவனுடய தோழர்களிடமும் இருக்கும்.
தஜ்ஜாலின் செயல்கள் அனைத்தையும் நாம் தஜ்ஜாலின் பார்வையில் பார்க்கும் போது (புறம் சார்ந்த materialistic சிந்தனையை மட்டும் வைத்து பார்க்கும் போது)அதனுள் உள்ள கேட்டை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.
உதாரணமாக பெண் விடுதலை என்ற பெயரில் நடக்கும் காரியம் 200% சரியானது தான் என்று சிந்திப்போம் நாம் குர்ஆனின் அறிவை பெறும் வரை.
பெண்ணியக்கங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு?
தஜ்ஜாலின் பித்னா என்ற உட்தலைப்பில் பின்வரும் நாட்களில் விளக்கப்படும்.
ஆக அகம் சார்ந்த அறிவு என்பதே இல்லாதவன் மற்றவர்களின் அகத்தையும் அழிப்பவன் தான் வலது கண் ஊனமான தஜ்ஜால்.
நமது இந்த தொடரின் மிக முக்கியமான பதிவாக நாளைய தினம் தமிமுத் தாரி என்ற நபி தோழர் தஜ்ஜாலை சந்தித்தது தொடர்பாக பதிவிடப்படும்.இந்த ஹதிஷை யார் சிந்திக்கவில்லையா அவர்களால் தஜ்ஜாலையோ,உலகையோ(உலக அரசியலையோ) புரிந்து கொள்ள முடியாது....
தஜ்ஜால் தொடர்.பதிவு- 1:- இஸ்ராயில் மக்களும் (யூதர்கள்) ஜெருசலமும்... https://e-funandjoyindia.blogspot.com/2020/09/1.html?spref=tw
Post a Comment