தஜ்ஜால் தொடர் - பதிவு - 9
தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் எங்கே சிறைப்பிடிக்கப்பட்டனர் என்பதற்கான பதில் குர்ஆனிலேயே உள்ளது.ஆனால் அதை அறிந்து கொள்வதற்கு சற்று புவியியல் சார்ந்த பொது அறிவு தேவை.
குர்ஆனில் சூரத்துல் கஹ்ப்-ல்(அத்தியாயம்-குகை) மன்னர் துல்கர்னைன் அவர்கள் மேற்கொண்ட பயணம் விளக்கப்பட்டிருக்கும்.
அதில் கீழ்க்காணும் நான்கு முக்கிய குறிப்புகள் உள்ளன.
1.துல்கர்னைன் ஒரு திசையில் பயணம் மேற்கொண்டார் அப்போது சேறு கலந்த கருமையான நீரில் சூரியன் மறைவதை கண்டார்.
2.மீண்டும் அவர் இன்னொரு திசையில் பயணித்தார் அங்கே அவர் சூரியனை உதிக்க கண்டார்.
3.மீண்டும் அவர் இன்னொரு திசையில் பயணித்து இரு மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியை அடைந்தார்.
4.அப்பகுதியிலிருந்த மக்களின் மொழியை துல்கர்னைன் அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
முதல் குறிப்பில் அவர் மேற்கு நோக்கி பயணித்ததையும் இறுதியில் கருமையான நீரை(கடலை) அடைந்ததையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
மேற்கு பகுதியிலுள்ள கருமையான நீரை கொண்டுள்ள கடல் - கருங்கடல் ஆகும்.
இரண்டாவது குறிப்பில்( பயணத்தில்)நேர் எதிராக கிழக்கு திசையில் பயணித்து சூரியன் உதிக்க கண்டதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டாவது பயணத்தில் மூலம் நாம் புரிய வேண்டியது அவர் பயணம் செய்த பகுதி என்பது கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
மூன்றாவது குறிப்பில்(பயணத்தில்) எந்த திசை என்ற குறிப்பு இல்லை ஆனால் இரண்டு மலைகளை அடைந்தார் என்று உள்ளது.
கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள இணையான மலை தொடர்-- காக்கஸஷ் மலை தொடர்.-இந்த மலை தொடரை அடைய கண்டிப்பாக வடக்கு நோக்கி தான் பயணிக்க வேண்டும்.
மூன்றாவது பயணத்தின் முடிவில் துல்கர்னைன் வந்து சேர்ந்த இடம் காக்கஸஷ் மலைகள்.
நான்காவது குறிப்பில் அப்பகுதி மக்களின் மொழி புரியாத மொழி.
பொதுவாக ஒரு மன்னர் நாடுகளின் மீது படையெடுத்து செல்லும் போது அவரிடம் மொழி பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள்.ஆனால் மொழிப்பெயர்ப்பாளர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையெனில் அந்த மொழியானது சுற்றுபுறத்திலுள்ள மொழிகளுடன் தொடர்பற்று இருக்க வேண்டும்.
தமிழ் மொழியென்றால் அது சுற்றுப்புற மொழிகளான மலையாளம்,கன்னடம், ஆகியவற்றுடன் ஒப்புமை கொண்டே இருக்கும்.மொழியியலாளர்கள் கருத்தின் படி இவை அனைத்தும் ஒரே குடும்ப மொழி.
ஆனால் துல்கர்னைன் சென்றடைந்த பகுதியிலுள்ள மொழி என்பது ஒரு தனித்த மொழி.சுற்றுப்புற மொழிகளுடன் தொடர்பற்றது.
இந்த தனித்த மொழி என்பது எது?
மொழியியல் அறிஞர்களின் கருத்துப்படி ஜார்ஜிய மொழி மட்டுமே இத்தகைய அம்சத்தை பெற்றுள்ளது.
ஆக மன்னர் துல்கர்னைன் சென்றடைந்த பகுதி ஜார்ஜியா நாட்டிலுள்ள காக்கஸஷ் மலை தொடர்.
இந்த மலைத்தொடருக்கு பின் பகுதி தான், இந்த ஜார்ஜிய இன மக்களை கொடுமைப்படுத்திய யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பகுதி.
இந்த காக்கஸஷ் மலைத்தொடரின் டேரியல் கார்ஜ் பகுதியில் தான் அதிக அளவிலான இரும்பு மற்றும் செம்பிலான சிதைவுற்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன.
மன்னர் துல்கர்னைன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை சிறை பிடித்த பகுதி -காக்கஸஷ் மலையின் டேரியல் கார்ஜ் பகுதி தான்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் விடுதலை.
காக்கஸஷ் மலைத்தொடரின் டேரியல் கார்ஜ் பகுதியில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்தோம்.
ஆனால் டேரியல் கார்ஜ் பகுதியில் தற்போது எந்த தடுப்பு சுவரும் இல்லை.இரும்பிலான கட்டுமானத்தின் எச்சங்கள் மட்டுமே உள்ளன.
அப்படியென்றால் தடுப்பு சுவர் உடைக்கப்பட்டுவிட்டதா?ஆம் எனில் எப்பொழுது என்ற கேள்வி இயற்கையானதே.
இதற்கான பதில், குர்ஆனையும் ஹதிசையும் ஒப்பிட்டு பார்த்தால் கிடைக்கும்.
குர்ஆன் வசனம் 18:97-98 ல் கீழ்க்கண்ட செய்திகள் உள்ளன.
1.இந்த தடுப்பு சுவர் என் இறைவனின் அருட்கொடை என்று துல்கர்னைன் அறிவித்தது.
2.இந்த தடுப்பு சுவரில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் ஏறவும் முடியாது.. துளையிடவும் முடியாது....
3.இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் நாளில் இந்த சுவர் தூள் தூளாகிவிடும்.
இவைகள் குர்ஆனின் செய்திகள் (நமது தூதருக்கு வந்த வஹீ)
ஸஹிஹ் புகாரி ஹதிஸ் எண் 3346,3598,7136 மற்றும்
ஸஹிஹ் முஸ்லிம் ஹதிஸ் எண் 5520
ஆகிய ஹதிஸ்களில் கீழ்க்கண்ட மிக முக்கிய செய்தி உள்ளது.
இறுதி தூதர் அவர்கள் தூக்கத்தில் (கெட்ட கனவினால்) முகம் சிவந்தவராக எழுந்து நெருங்கி விட்ட தீமையினால் அராபியருக்கு கேடு தான் என்று கூறிவிட்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கான தடுப்புசுவரில் இந்த அளவிலான(90 அல்லது 100 என்பதை குறிக்கும் வகையில் விரல்களை மடக்கி) துளையிடப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.தூதருக்கு வரக்கூடிய கனவு என்பதும் வஹீ(இறைச் செய்தி).
ஹதிஸில் கிடைக்கப்பெற்ற இறைச்செய்தியின் படி 90 துளைகள் இடப்பட்டது.
குர்ஆனின் செய்தி படி சுவரில் ஏறவும் முடியாது துளையிடவும் முடியாது.
எந்த இரண்டு செய்திகளில் எது சரி?
இரண்டுமே சரி தான்.
எப்படி?
குர்ஆன் துளையிட முடியாது என்று கூறுவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான்.அதன் பின்பு தவணை முடியும் நாளில் சுவர் உடைக்கப்படும் என்று குர்ஆன் கூறுகிறது.
ஆகவே தடுப்பு சுவரில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் துளையிட்டுள்ளது என்ற செய்தியை கனவின் வாயிலாக, எப்போது இறைதூதர் அவர்கள் பெற்றோர்களோ அந்த நாள் தான் இறைவன் அளித்த கெடு நாள்.அந்த நாள் தான் சுவர் உடைக்கப்பட்ட நாள்.அந்த நாள் தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளியேறிய நாள்.அந்த நாள் தான் அவர்களின் விடுதலை தினம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார், தூதரின் வாழ்நாளிலேயே வெளியேறிவிட்டார்கள் என்பது தான் உண்மை.
கி.மு.600 களில் துல்கர்னைன் மன்னரால் சிறைப்பட்ட கூட்டம் ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்கு பின் கி.பி.600 களில் தூதரின் ஆயுட்காலத்தில் சுவரை இடித்து வெளியேறினார்கள்.
பதிவு நாளை தொடரும்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் அடைக்கப்பட்ட Caucasus மலை தொடரின் Darial Gorge பகுதி.
தஜ்ஜால் தொடர்- பதிவு 8 தஜ்ஜாலின் அடியாட்கள் - யஃஜூஜ் மஃஜூஜ்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/8.html?spref=tw
Post a Comment