தஜ்ஜால் தொடர்- பதிவு- 10
தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் விடுதலை.
நேற்றைய பதிவில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் இறுதி தூதர் அவர்களின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டார்கள் என்பதை பார்த்தோம்.
ஆனால் நபி ஈஸா(அலை) வருகை தந்து தஜ்ஜாலை கொன்ற பின்னர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும் என்ற பொதுவான மற்றும் தவறான நம்பிக்கை நமது சமூகத்தில் பரவியுள்ளது.இது தவறு என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
விளக்கம்:1
ஸஹிஹ் புகாரி ஹதிஸ் எண் : 663
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் திறந்து விடப்பட்ட பின்னரும் ஹஜ் செய்யப்படும்.ஆனால் ஹஜ் தடை செய்யப்படாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது.
இந்த ஹதிஸின் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், ஹஜ் தடை செய்யப்படுவதற்கு முன்பே வெளிப்படும் என்பதாகும்.
ஈஸா நபி தஜ்ஜாலை கொலை செய்ததற்கு பிறகு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் திறந்து விடப்படும் என்பதை சரியென்று ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கீழ்க்காணும் வினாக்கள் எழும்பும்.
ஹஜ்ஜை யார் தடை செய்வார்கள்?
ஹஜ் தடை செய்யும் அதிகாரம் இயற்கையாகவே யாரிடம் இருக்கும்?
யாரிடம் மக்கா நகரின் ஆட்சி இருக்கிறதோ அவர்களிடம் தான் இருக்கும்.
நபி ஈஸா (அலை) தஜ்ஜாலை வீழ்த்திய பிறகு மக்காவின் ஆட்சி யாரிடம் இருக்கும்?
இமாம்-அல்-மஹதி(அலை) அவர்களிடம் இருக்கும்.
ஜெருசலத்தை மையமாகக் கொண்டு உலக நல்லாட்சியாளராக நபி ஈஸா(அலை) அவர்களும் இறுதி தூதரின் உம்மத்துகளுக்கு இமாம் மஹதி ஆட்சியாளராகவும் உள்ள நிலையில் ஹஜ் தடை செய்யப்படுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படியென்றால் ஹஜ் தடை என்பது நபி ஈஸா(அலை) அவர்களின் வருகைக்கு முன்பே வர வேண்டும்.அந்த ஹஜ் தடைக்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும்.
நபி ஈஸா அவர்களின் வருகைக்கு முன்பு தான் தடை வர வேண்டுமா?அவருக்கு பின் தடை வரக்கூடாதா? என்ற எதிர் கேள்வி வருமல்லவா?
அதற்கான பதில் என்னவென்றால் நபி ஈஸா அவர்களின் மரணத்திற்கு பின் அபிசீனிய மன்னன் படையெடுத்து புனித தலமான காபாவை இடித்து விடுவான்.
நபியின் மரணத்திற்கும் காபா இடிக்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில்(மக்காவின் ஆட்சி உண்மையான முஸ்லீம்களின் கையில் இருக்கும் போது)வீசும் மெல்லிய காற்று அனைத்து முஃமின்களையும் கைப்பற்றும்.காபிர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.எனவே காபிர்கள் மட்டுமே வாழும் காலத்தில் ஹஜ் செய்ய ஆளில்லாத காலத்தில் காபாவே இடிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்படுதல் என்பதற்கு தேவை ஏதும் இல்லை.
ஹஜ் தடை என்பதற்கு, நபியின் வருகைக்கு பின்பும் அவரின் மரணத்திற்கு பின்பும் வாய்ப்பே இல்லை என்றால் அவரின் வருகைக்கு முன்பே ஹஜ் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும்.
விளக்கம்:2
மற்றுமொரு ஹதிஸில், தபர்ரியா ஏரி(Sea of Galilee) வற்றிய பிறகு தான் நபி ஈஸா அவர்கள் வருகை புரிவார்கள் என்றும் தஜ்ஜாலும் வெளிப்படுவான்(நமது நாள் போன்ற அவனது நாளில் அவனுடைய நான்காவது கால வட்டத்தில்) என்றும் உள்ளது.
ஆனால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தபர்ரியாவில் நீர் அருந்துவார்கள் என்று இன்னொரு ஹதிஸ் உள்ளது.
அப்படியென்றால் தபர்ரியாவில் நீர் வற்றுவதற்கு முன்பே அதாவது நபி ஈஸா(அலை) வருவதற்கு வருவதற்கு முன்பே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்படும் என்பது தெளிவாகிறது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பூர்விக நிலம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் மனிதர்கள் தான் என்பதையும் அவர்கள் காக்கஸஷ் மலையின் டேரியல் கார்ஜ் பகுதியில் மன்னர் துல்கர்னைன் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டதையும் இறுதி தூதர் நபி முகம்மது(ஸல்)அவர்களின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டதையும் தொடர்களில் கண்டோம்.
யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம்?இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை இப்போது காணலாம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் நிலையான இருப்பிடம் கொண்டவர்களா? அல்லது இருப்பிடமற்ற நாடோடி கூட்டமா?
மன்னர் துல்கர்னைன் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து 1100 ஆண்டுகள்(இறுதி தூதர் காலம் வரை) அதே பகுதியில் ஒரு கூட்டம் வாழ்ந்து தடுப்பு சுவரை உடைக்கிறது என்றால் கண்டிப்பாக அவர்கள் நாடோடிகளாக இருக்க முடியாது.எனவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் நிலையான வாழ்விடம் கொண்டவர்கள் தான் (They are not nomads. They are civilized but uncultured).
இவர்களின் பூர்விகம் எது?.
காக்கஸஷ் மலைத்தொரின் தெற்கு பகுதி (ஜார்ஜியா, அர்மேனியா,அஜர்பெய்ஜான்) மக்களின் கோரிக்கைக்கு இணங்க அப்பகுதி மக்களை காப்பாற்ற மலையின் தென்திசையில் தடுப்பு சுவர் மூலம் இக்கூட்டம் தடுக்கப்படுகிறது என்றால் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் கண்டிப்பாக காக்கஸஷ் மலையின் வடக்கு பகுதியை சார்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும்.
காக்கஸஷ் மலையின் வடபுறம் எது?
காக்கஸஷ் மலையின் வடக்கு பகுதியில் பெரும்பான்மையான பகுதி இன்றைய உக்ரைன் தேசமாகும்.மீதமுள்ள பகுதிகள் இன்றைய ரஷ்யாவின் தென் மேற்கு மூலையாகும்.
ஆகவே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் பூர்விகம் இன்றைய உக்ரைன் நாடு மற்றும தென் மேற்கு ரஷ்யா....(வரைப்படத்தில் தெளிவாக காணலாம்).இந்த கூட்டம் மற்றும் இவர்களின் நாடு வரலாற்றில் காஜார்(Khazariya) என்று அறியப்படுகிறது.
இந்த காஜாரியக்கூட்டத்தின்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின்) மதம் எது?.
இந்த கூட்டத்தினர் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரையில் மிகவும் கொடுரமான மற்றும் கேவலமான செயல்களை சடங்குகளாக செய்த சிலை வழிபாட்டு கூட்டமாகும்.(simply to say that they are immoral and unethical pagans).
எட்டாம் நூற்றாண்டுக்கு பின் அன்றைய உலகம் ஒரு வினோதமான மதமாற்றத்தை கண்டு ஆச்சரியத்தது.
பனு இஸ்ராயில்களுக்கு மட்டுமே உரித்தான யூத மதம் வரலாற்றில் முதல்முறையாக பனூ இஸ்ராயில்களுக்கு வெளியே இஸ்ரவேலர்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஐரோப்பிய காட்டுமிராண்டிகளான காஜாரியாக்களிடம்(யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திடம் பரவியது).
ஏன் காஜாரியாக்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) யூத மதத்தை தேர்ந்தெடுத்தனர்? என்பதை வரும் பதிவுகளில் காணலாம்.
பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் - பதிவு - 9, தஜ்ஜாலின் அடியாட்கள்- யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் பூமியில் எங்கே துல்கர்னை மன்னரால் சிறைப்பிடிக்கப்பட்டனர் ??? https://e-funandjoyindia.blogspot.com/2020/10/9.html?spref=tw
Post a Comment