தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியும் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..
விரைவில் 300 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Post a Comment