HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 29 July 2023

 விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் தற்போது இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட மிக பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் அவர் வயதான தோற்றத்தில் நடிக்கிறார், அதில் அவரது லுக் ஏற்கனவே போஸ்டர்கள் மூலமாக வெளியாகிவிட்டது.

25 வயது இளைஞராக மாறும் கமல்! இந்தியன் 2ல் ஹாலிவுட் தொழில்நுட்பம்.. ஷங்கரின் பிரம்மாண்ட பிளான் | Kamalhaasan 25 Age Look For Indian 2

25 வயது லுக்

கமல் 25 வயது லுக்கில் வரும் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம். கமலை வயது குறைந்தவராக காட்ட ஹாலிவுட்டில் பயன்படுத்தும் Digital de-aging technologyயை தான் ஷங்கர் பயன்படுத்துகிறாராம்.

இதற்காக ஷங்கர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

25 வயது இளைஞராக மாறும் கமல்! இந்தியன் 2ல் ஹாலிவுட் தொழில்நுட்பம்.. ஷங்கரின் பிரம்மாண்ட பிளான்:-

Friday 28 July 2023


 

AI ROBERT உலக இறுதி நாளின் அடையாளமா?

Monday 24 July 2023

 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மளிகை பொருட்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.

இன்னொருபுறம் சாமான்ய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது அரிசி விலையும் கடுமையாக கூடியுள்ளது. நமது அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது. காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம். பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர். தளர்வான அரிசி ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

இதனையடுத்து, சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவே அரிசி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் அரிசி விலை கிலோவுக்கு 8ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாட்டு பொன்னி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக பொன்னி விலை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் உயர்ந்து கிலோ 42 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக விற்கப்படுகிறது.

பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.



தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு! கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்த சாப்பாட்டு அரிசி:-

 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். படம் வெளியான அந்த சமயத்திலேயே சூப்பர் ஹிட் ஆன இப்படம் தற்போது 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் இயக்கி, கமல்ஹாசன் நடித்து வந்த வேளையில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கப்பட்டது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் கமல் சம்பந்தமான காட்சிகளை முடித்துவிட்ட ஷங்கர், இன்னும் ஓரிரு வாரங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விடுவார் என கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாகவும், சுமார் ரூ.220 கோடிக்கு படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படமே மொத்தமாக ரூ.250 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் தற்போதே ஓடிடி உரிமையை விற்பனை செய்ததன் மூலம் 90% பணம் வந்துவிட்டதாக தகவல் வெளியகையுள்ளது.

MURNAL THAKUR CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2023/07/murnal-thakur-cute-images.html



வெளியாவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்த ‘இந்தியன்-2' :-

Thursday 13 July 2023

























MURNAL THAKUR CUTE IMAGES

Thursday 6 July 2023

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில விஷயங்கள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்

இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து கெட்டப்பை மாற்றியுள்ளார் அஜித். இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முயற்சியும் நடந்து வருகிறதாம். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அசல் திரைப்படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் | Vidaamuyarchi Movie Latest Update

அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் #VidaaMuyarchi

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com