HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 31 May 2022

 



நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 2, 3 வருடங்கள் ஆனது அவர் படங்கள் நடித்தே, இடையில் அரசியல், பிக்பாஸ் என ஓய்வு இல்லாமல் பிஸியாக தான் இருந்து வந்தார்.

இப்போது அவர் நடிப்பில் வரும் ஜுன் 3ம் தேதி வெளியாகப்போகும் படம் தான் விக்ரம்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனை தாண்டி பகத் பாசில், விஜய் சேதுபதி என நடிப்புக்கு பெயர் போன நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள். 

கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார், தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

இப்படம் வெளிநாடுகளில் ப்ரீமியர் புக்கிங்கில் மட்டும் இதுவரை $150k டாலர வசூலித்துள்ளதாம்.

USAவில் கமல்ஹாசன் விக்ரம் அதற்குள் இவ்வளவு வசூலித்ததா?- வெளிவந்த விவரம்:-

Monday 23 May 2022

 



சினிமாவில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே படத்தை வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மற்றும் கதையை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

அவ்வாறு அந்த படத்தில் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே அடுத்த படத்தை நிதி நெருக்கடி இல்லாமல் அவர்களால் தயாரிக்க முடிகிறது. அந்த வகையில் பிளாக்பஸ்டர ஹிட்டடித்த படங்களில் அதிகம் அஜித், ரஜினிகாந்த், விஜய்,  படங்கள் தான் இடம் பெற்றுள்ளது.

ஆனால் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தான். அவ்வாறு கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, அஜித் நடிப்பில் வெளியான வலிமை, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் வசூலை பொருத்தவரை படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் பார்த்தது. இந்நிலையில் ரசிகர்கள் வசூலில் முதலிடத்தில் இருப்பது விஜய் நடித்த மாஸ்டர்  படம் என நினைத்திருந்தனர். ஆனால் H.வினோத் இயக்கத்தில் அஜித்  நடிப்பில் வெளியான வலிமை படம் தான் தற்போது வரை நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

இந்தச் செய்தியை வலிமை படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற அன்புச்செழியன் ஒரு விழாவில் கூறினார்.  படத்தின் டிஸ்ட்ரிபியூட்டரே இப்படி சொல்லியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பீஸ்ட் படத்துக்கு நெகடிவ் விமர்சனம் வந்ததால் வலிமை படத்தின் வசூலை முறடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அஜித்தின் வலிமை.. அப்ப விஜயின் மாஸ்டர் இல்லையா:-

Wednesday 18 May 2022

 


உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

அதுமட்டுமின்றி யாரும் எதிர்பார்த்திராத வகையில் இதில் நடிகர் சூர்யாவும் நடித்திருப்பதை உறுதி செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் ஒன்றாக நடித்திருப்பதால் திரையில் அவர்களை காண ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில் ஆக்ஷன் என்டேர்டைன்ர் திரைப்படமான விக்ரம் படத்தின் கதைச்சுருக்கம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் "அதிவேக ஆக்ஷன் படமான விக்ரமில், தொடர்ந்து நடந்து வரும் தொடர் கொலைகளை விசாரிக்க நியமிக்க படுகிறார் அமர். அவரின் விசாரணையில் இது சாதாரண விஷயமில்லை என்பது மேலும் அதுவே பெரிய கேங் வார்-க்கு காரணமாகவும் அமைகிறது" என கதைச்சுருக்கத்தில் உள்ளது

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்:-

Friday 13 May 2022

 


கமலின் விக்ரம் படம் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் கமலின் வரி மற்றும் குரலில் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் 12 மணி நேரத்தில் ரஜினியின் முதல் பாடலின் லைக்ஸ்ஸை முறியடித்து இருக்கிற தகவல் வைரலாகி வருகிறது.

கமலின் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி 12 மணி நேரத்திலேயே ரஜினியின் அண்ணாத்த படத்தின் மொத்த லைப் டைம் லைக்ஸை 12 மணி நேரத்தில் பெற்றிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலர் கமலின் புகைப்படத்தை பதிவிட்டு ரியல் அண்ணாத்த பேக் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், அந்த கமலின் பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி கமல் சார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அண்ணாத்தே பாடலின் வாழ்நாள் சாதனையை 12 மணி நேரத்தில் முறியடித்த பத்தல பத்தல பாடல்:-

Tuesday 10 May 2022

 Save the Date 📆 #VikramAudioLaunch & #VikramTrailer on May 15th at 6PM! 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் ககனராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர், சிறந்த நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளது. அதன்படி இப்படத்தின் சிங்கிள், ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வரிசையாக May 15'th வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் கேரளாவில் மட்டும் ரூ. 7 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடைசியாக வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் OTT ரிலீஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 112 கோடி ரூபாய்க்கு  வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட உலகநாயகன் கமலின் விக்ரம் திரைப்படம்:-

Wednesday 4 May 2022



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் இந்த படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை காண காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் படம் குறித்து சமீப காலமாக வெளியாகி வரும் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதில் ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைசாக கமல் இந்த படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பழைய விக்ரம் திரைப்படத்தில் வருவது போன்று மிகவும் இளமையாக வர இருக்கிறாராம்.

இதற்காக ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற சில புதிய தொழில்நுட்பங்களை இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். கமல் அப்படி இளமையாக வரும் அந்த சில நிமிட காட்சிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இளம் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது என்றே நினைத்திருந்தனர். இயக்குனர் இந்த விஷயத்தை சஸ்பென்சாக வைத்து  மெயின்டெயின் செய்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது இளம் கமலுக்கு ஜோடியாக கன்னட நடிகையும், மாடலுமான ஷாவ்னி ஸ்ரீவஸ்தாவா நடித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி.  கமல் சார் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.Shanvi-Srivastava



விக்ரம் படத்தில் இளம் கமலுக்கு ஜோடியான 27 வயது இளம் நடிகை.. சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ் கனகராஜ்:-

Sunday 1 May 2022

 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக வெளியான இவரின் வலிமை திரைப்படம்உலகமுழுவதும் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையே தற்போது அஜித்தின் புதிய கூட்டணி குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி தற்போது அஜித்தின் அடுத்த படங்களில் ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அப்படி இந்த கூட்டணி அமைந்தால் முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ்.


KEERTHY SURESH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2022/04/keerthy-suresh-cute-images.html


#AK63 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்; இயக்குனர் சிறுத்தை சிவா இல்ல! 21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com