HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 4 May 2022

விக்ரம் படத்தில் இளம் கமலுக்கு ஜோடியான 27 வயது இளம் நடிகை.. சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ் கனகராஜ்:-



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் இந்த படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை காண காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் படம் குறித்து சமீப காலமாக வெளியாகி வரும் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதில் ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைசாக கமல் இந்த படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பழைய விக்ரம் திரைப்படத்தில் வருவது போன்று மிகவும் இளமையாக வர இருக்கிறாராம்.

இதற்காக ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற சில புதிய தொழில்நுட்பங்களை இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். கமல் அப்படி இளமையாக வரும் அந்த சில நிமிட காட்சிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இளம் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது என்றே நினைத்திருந்தனர். இயக்குனர் இந்த விஷயத்தை சஸ்பென்சாக வைத்து  மெயின்டெயின் செய்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது இளம் கமலுக்கு ஜோடியாக கன்னட நடிகையும், மாடலுமான ஷாவ்னி ஸ்ரீவஸ்தாவா நடித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி.  கமல் சார் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.Shanvi-Srivastava



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com