HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 13 May 2022

ரஜினியின் அண்ணாத்தே பாடலின் வாழ்நாள் சாதனையை 12 மணி நேரத்தில் முறியடித்த பத்தல பத்தல பாடல்:-

 


கமலின் விக்ரம் படம் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் கமலின் வரி மற்றும் குரலில் பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் 12 மணி நேரத்தில் ரஜினியின் முதல் பாடலின் லைக்ஸ்ஸை முறியடித்து இருக்கிற தகவல் வைரலாகி வருகிறது.

கமலின் விக்ரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி 12 மணி நேரத்திலேயே ரஜினியின் அண்ணாத்த படத்தின் மொத்த லைப் டைம் லைக்ஸை 12 மணி நேரத்தில் பெற்றிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலர் கமலின் புகைப்படத்தை பதிவிட்டு ரியல் அண்ணாத்த பேக் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், அந்த கமலின் பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி கமல் சார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com