HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 30 August 2023

 


அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.

மேலும் திரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இப்படத்திற்காக தான் முதல் முறையாக ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கினார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா திரைப்படம் வெளிவந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

மொத்த வசூல்

இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் மங்காத்தா திரைப்படம் ரூ. 102.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 62 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என Sun Pictures அதிகாரபூர்வமாக தங்களது Twitter பக்கத்தில் தெரிவித்தனர். ரஜினி அல்லாத முதல் 100 கோடி படம் மற்றும் தல அஜித்குமார் கேரியர் மங்காத்தா முதல் 100 கோடி படம் ஆகும்..

Tamil Nadu - Rs 62.00 Cr

AP/TG - Rs 4.95 Cr

KA - Rs 4.00 Cr

Kerala - Rs 4.35 Cr

ROI - Rs 2.00  Cr

India Total - Rs 77.3Cr

Overseas-  Rs 25.00Cr 

World Wide Total - Rs 102.30 Cr



வெளிவந்து 12 வருடங்கள் ஆகும் மங்காத்தா படத்தின் மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா:-

Monday 21 August 2023





 

இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை:-

Wednesday 16 August 2023

 துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், தமன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்.. வெளிவந்த மாஸ் அப்டேட் | Vidaamuyarchi Movie Shooting Latest Update

கடந்த ஜூன் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், சில விஷயங்கள் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது

இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கண்டிப்பாக துவங்கும் என #சந்திரமுகி2  இசைவிழாவில் சுபாஷ்கரன் அறிவித்தார்.🔥❤

மொத்தம் மூன்று schedule பிளான் செய்து வைத்துள்ளார்களாம். இதில் ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டிப்பாக மகிழ் திருமேனி ஸ்டாலின் திரில்லர் கலந்த ஆக்ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம் வெளிவந்த மாஸ் அப்டேட்:-

Saturday 12 August 2023

 


ஜெயிலர்

தமிழ் சினிமாவில் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனங்கள் இந்த படத்தின் மூலம் காணாமல் போனது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வசூல் தானாம்.

மொத்த வசூல்

நாளுக்கு நாள் வசூலில் அதிகரிக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் 2 நாள் மொத்த வசூல் விவரத்தை காண்போம்.

  • தமிழ்நாடு- ரூ. 40+ கோடி
  • கேரளா- ரூ.10+ கோடி
  • கர்நாடகா- ரூ. 16+ கோடி
  • ஆந்திர மாநிலங்கள்- ரூ. 15+ கோடி
  • மற்ற இடங்கள்- ரூ. 5+ கோடி
  • ஓவர்சீஸ்- ரூ. 65+ கோடி

2 நாள் முடிவில் உலகம் முழுவதும் மொத்தம்- ரூ. 150+ கோடி  வசூலித்துள்ளது.

இந்த வார இறுதி நாட்களில் அனைவரும் வியக்கும் அளவிற்கு வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை- மொத்த கலெக்ஷன் விவரம்:-

Thursday 10 August 2023

 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ஜெயிலர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வந்துள்ளது. இப்படம் மூலம் நெல்சனும்  ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைத்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் படத்தொகுப்பாளராக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஒரு குழும நட்சத்திர நடிகர்களை ஜெயிலர் பெருமைப்படுத்துவார். இதுதவிர, இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜெயிலராக இருந்த டைகர் முத்துவேல் பாண்டியன் சென்னையில் தனது மனைவி, மகன், பேரன் மற்றும் மருமகளுடன் தனது ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் தனது ஓய்வு காலத்தை தனது பேரனுக்கு யூடியூப் சேனலை நடத்த உதவினார். முத்துவேலின் மகன் அர்ஜுன், யாருக்கும் பயப்படாத நேர்மையான காவலர். ஒரு உயர்மட்ட வழக்கைக் கண்காணிக்கும் போது, ​​அர்ஜுன் காணாமல் போகிறார், மேலும் அவர் ஒரு மோசமான கும்பலால் கொல்லப்பட்டதை முத்துவேல் கண்டுபிடித்தார். ஆனால், முத்துவேல் அவரை உயிருடன் பார்க்கிறார், முக்கிய வில்லன் தனது மகனை உயிருடன் மாற்ற முத்துவேல் பாண்டியனிடம் கோரிக்கை வைக்கிறார். என்ன கோரிக்கை இருந்தது? மகனைக் காப்பாற்ற முத்துவேல் என்ன செய்தார்? கதையில் இன்னும் நிறைய ஆச்சரியங்களும் திருப்பங்களும் உள்ளன.

இந்த விமர்சனத்தைத் தொடங்கும் முன், இது மற்ற நடிகர்களின் கேமியோக்களால் நிரம்பிய ஒரு முழுமையான ரஜினி படம் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். அதனால் பல நட்சத்திர நடிகர்களுடன் பெரிய திரையை எதிர்பார்க்க வேண்டாம். ரஜினி திரும்பி வந்துவிட்டார் என்றுதான் சொல்ல முடியும். கடந்த சில திரைப்படங்களில் பல தவறுகள் நடந்துள்ளன, மேலும் ‘பீஸ்ட்’ மூலம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொண்ட நெல்சன் அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்துள்ளார். இரண்டாம் பாதியில் ஒருபோதும் மந்தமான தருணம் இல்லை, குறிப்பாக மோகன்லால் அனைத்து விசில்களையும் கைதட்டல்களையும் பெறுவார். மேத்யூவாக அவரது பாத்திரம் பெரும் கவனத்தைப் பெறும். நரசிம்மனாக சிவராஜ் குமார் தனது தோற்றத்தாலும், உடல் மொழியாலும் கொடியவர். நெல்சன் இந்த ஸ்டால்வார்ட்களை முழுமையாகப் பயன்படுத்தினார்.

யோகி பாபு தனது நகைச்சுவையான ஒன்-லைனர்களுடன் கூரையை கீழே கொண்டு வருகிறார் மற்றும் ரஜினியுடன் அவரது கூட்டு காட்சிகள் உண்மையான விருந்தாக உள்ளன. நெல்சனின் முத்திரையான இருண்ட நகைச்சுவை திரைப்படம் முழுவதும் பரவியுள்ளது. விநாயகன் இங்கே கொடிய வில்லன் மற்றும் அவர் தனது பன்முகத்தன்மையை நிரூபித்தார். அவர் சூப்பர் ஸ்டாரின் பரம எதிரி மற்றும் அவர் ஒரு மகத்தான வேலையைச் செய்துள்ளார். திரைப்படம் பல கூஸ்பம்ப்ஸ் தருணங்களைக் கொண்டுள்ளது, மேலும் நெல்சன் அதை முழுமையாக வடிவமைத்துள்ளார். டெக்னிக்கல் பக்கம் வரும்போது அனிருத்தின் இசை மிகப்பெரிய முதுகெலும்பு. ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறார். சாதாரணமாக நடக்கும் ஒரு காட்சி கூட அவரது BGM காரணமாக நிறைய விசில் மற்றும் அலறல்களைப் பெறுகிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் பிரேம்கள் கச்சிதம். ஒளியமைப்பும் வண்ணத் தொனியும் காட்சியின் மனநிலையை இயல்பாக அமைக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக நடனமாடப்பட்டுள்ளன. கலை இயக்குனர் கிரண் தனது யதார்த்தமான செட் வேலைக்காக மற்றொரு குறிப்பிடத்தக்க குறிப்பைப் பெறுகிறார்.

மொத்தத்தில், ஒரு ரிபீட் வொர்த்தி பிளாக்பஸ்டர்

மதிப்பீடுகள்: ⭐ ⭐ ⭐ ✰



JAILER MOVIE REVIEW ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் முழு விமர்சனம் இதோ:-

Sunday 6 August 2023

 


நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிரணா, மோகன்லால், விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை உச்சத்திற்கு எடுத்து சென்றுவிட்டது.

கண்டிப்பாக மாஸ் கமர்ஷியல் படமாக ஜெயிலர் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான ப்ரீ புக்கிங் துவங்கிவிட்டது.

ப்ரீ புக்கிங்

இந்நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர். இதுவே ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என கூறப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை ஜெயிலர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

ப்ரீ புக்கிங்கில் பல கோடிகளை குவித்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com