HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 23 April 2021

 



விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மட்டும்தான் சன் டிவியில் இதுவரை அதிகம்பேர் பார்க்கப்பட்ட டிஆர்பி சாதனையை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 18.1 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.

அதன் பிறகு பல திரைப்படங்கள் சன் டிவியில் முதல்முறை ஒளிபரப்பப்பட்டாலும் தற்போது வரை தவிர்க்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது விஸ்வாசம் திரைப்படம். விஜய் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகத் அமைந்து வருகிறது.

எப்போதுமே டிஆர்பி யில் விஜய் படங்கள் ஏகப்பட்ட வரவேற்பு பெறும். ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு சன் டிவியில் மட்டமான டிஆர்பியை பெற்றுள்ளது.

வெறும் 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே தொட்டுள்ளது மாஸ்டர் திரைப்படம். இதற்கு முன்னர் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்ட தெறி, பைரவா, பிகில் போன்ற படங்களை விட குறைவான பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சும்மாவே தல ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள், இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டார்கள். இனி சமூக வலைதளத்தை என்ன பாடு படுத்தப்போகிறார்களோ.



சன் டிவியில் மட்டமான TRP பெற்ற மாஸ்டர்.. விஸ்வாசம் 3வது ஒளிபரப்பை கூட தொட முடியாத சோகம்; தல அஜித் என்றும் நம்பர் 1:-

Monday 19 April 2021



இன்று இந்திய சினிமாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் திரைப்படமாக விளங்கும் பாகுபலி படங்களைவிட ரஜினியின் ஒரு படம் பேசப்பட்டிருக்கும் எனவும், எதிர்பாராமல் அந்தப் படம் கைவிடப்பட்டதை படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் 70 வயதில் 200 கோடி வசூல் கொடுக்கும் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் தமிழ் சினிமாவில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நமக்கும் பெருமை தானே. அப்படிப்பட்டவர் தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சினிமாவில் ஹீரோவாக தன்னுடைய கேரியரை தொடர்ந்ததில் இருந்து தற்போது வரை டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

ரஜினியின் நிறைய படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் என்ற வெற்றிக் கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் ராணா.

பின்னர் இந்த திரைப்படம் கோச்சடையான் என்ற அனிமேஷன் படமாக வெளியானது. கோச்சடையான் படம் மட்டும் அனிமேஷனாக இல்லாமல் நேரடி படமாக அமைந்திருந்தால் கண்டிப்பாக பாகுபலியை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் கோச்சடையானை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

பாகுபலி படத்திற்கு முன்பே கோச்சடையான் படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது வந்த விமர்சனங்களும் அதுதான். படம் சூப்பராக இருந்தாலும் பொம்மை படம் பார்ப்பது போல் இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்தது. இப்போதும் அடிக்கடி கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து ராணா கதையை ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை கேஎஸ் ரவிக்குமாரே தெரிவித்துள்ளார்.

rana-rajinikanth-cinemapettai

ரஜினி மட்டும் அந்த படத்துக்கு ஓகே சொல்லிருந்தா பாகுபலி இருந்திருக்காது.. சொல்லி வருத்தப்பட்ட இயக்குனர்:-

Saturday 17 April 2021

 


நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் விவேக் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.

நடிகர் விவேக் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக்.

மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- கமல்ஹாசன் இரங்கல்:-

Monday 12 April 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 
Biology of Allah & Dr. Dajjal's Biotechnology/Halal Money Part-1:-

Biology of Allah Part 2/Good Foods/Halal Money/Biology vs Biotechnology Part 2:-

Wednesday 7 April 2021

 


உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக விரும்பும் ஒவ்வொரு நடிகரும் கமல்ஹாசனால் அல்லது ரஜினிகாந்தால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டினர். மேலும், இந்த இரண்டு மாபெரும் நடிகர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் கூட மகத்தான ஒன்றாக இருந்து வருகிறது.

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதால், இருவரும் ஒன்றாக திரை இடத்தைப் பகிரத் தொடங்கிய நாளிலிருந்து சிறந்த நண்பர்களாக அடையாளம் காணப்பட்டனர். ரஜினி மற்றும் கமல் இருவருமே பல்வேறு விதமான விருதுகளை பெற்று இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு மன்னர் மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

தாதா சாகேப் பால்கே விருதை பெரும் ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் . இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தமிழ் நடிகர்களில் ரஜினி இந்த விருதை பெற்றுள்ளார். இதனால் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் ரஜினியின் திரைத்துறை நண்பரும் நடிகரும் மக்கள் நீதி மைய்ம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று கூறியிருந்தார்.

கமலின் இந்த பதிவில் ‘திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினி’ என்ற வார்த்தைக்கு பலரும் கேள்வி எழுப்பினர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலிடம் கேட்ட போது, அதில் என்ன என்ன விமர்சனம் இருக்கு. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பது அவரின் பர்சனாலிடிய தான குறிக்குது. நான் இவ்ளோ கஷ்டப்பட்டு செய்றத அவர் சும்மா அப்படி வந்தாலே நடக்குது. தாதா சாகேப் விருது வாங்கினால் தான் திறமையானவர்கள் என்பது இல்லை. ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவே இல்லை என்றால், அவரது பெருமை எந்த விதத்தில் குறைந்துவிடும்? பத்மஸ்ரீ விருது எனக்கு கொடுக்கும் போது என்னை விட தகுதியானவர்கள் இருந்தார்கள். ஆனால், அந்த ஆண்டு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதே மாதிரி தான் ரஜினி மட்டும் தான் இந்த விருதுக்கு தகுதியானவரா, அவரை தவிர எத்தனை பேர் இருகாங்க என்று கூறியுள்ளார் கமல்.

வீடியோவில் 17 : 40 நிமிடத்தில் பார்க்கவும்




'திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும்' - ரஜினிக்கு கமல் சொன்னது வாழ்த்தா ? கேலியா ? அவரே அளித்த விளக்கம். #Rajinikanth #DadaSahebAward #Kamal

Sunday 4 April 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 

விழித்தெழுங்கள் சாத்தான் சொன்னதை செய்துகொண்டுஇருக்கின்றான்:-

Saturday 3 April 2021

 


கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஒன்றரை வருடம் ஆச்சு. அஜித் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், வினோத் இயக்குகிறார் என்பதும் அந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது மட்டுமே தெரியும்.

ஒரு வருடத்திற்கு மேலாக தல ரசிகர்களை சமூகவலைதளத்தில் கதறவிட்ட போனிகபூர் ஒரு வழியாக அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

வலிமை படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஆக்சன் காட்சிகளை தான். ஏனென்றால் வலிமை படம் ஒரு பக்கா ஆக்ஷன் படம் என்று ஆரம்பத்திலிருந்தே பரபரப்பை பற்ற வைத்து விட்டனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் திலிப் சுப்புராயன் ஏற்கனவே வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றியிருந்தார். அந்த படத்தில் திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து திலிப் சுப்புராயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தீரன் அதிகாரம்ஒன்று படத்தை விட வலிமை படத்தில் நான்கு மடங்கு அட்டகாசமான சண்டை காட்சிகள் இருக்கும் என கூறி தல ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

அதுலாம் என்னங்க படம், அஜித்தின் வலிமை அதைவிட 4 மடங்கு இருக்கும்.. ரசிகர்களை வெறியேற்றிய முக்கிய பிரபலம்:-

Friday 2 April 2021

 



பக்கா கமர்ஷியல் இயக்குனராக தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் ஹரி. ஒரு காலத்தில் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பல முன்னணி நடிகர்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் கூட்டணி போட்டு வெளியான ஹரி படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் அன்றைய காலகட்டத்தில் வெளியான சாமி, ஐயா, வேல், சிங்கம் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களாக உள்ளன.

ஹரி படங்களில் நடிக்க அப்போதே பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்ததாம்.

ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல் என்பவர் ஹரியை அழைத்துக்கொண்டு கமலஹாசனிடம் பேசி ஒரு படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டார்களாம்.

தேவர்மகன் ரேஞ்சுக்கு அந்த படம் உருவாக இருந்த நிலையில் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கைவிடப்பட்ட அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் படம் டிராப் என்பதை மட்டும் மேலோட்டமாக தெரிவித்துவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல்.

ஹரி மற்றும் கமலஹாசன் கூட்டணியில் ஒரு படம் வெளியாகி இருந்தால் அந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே புல்லரிக்கிறது. ஹரியிடம் தற்போது வேண்டுமானால் சரக்கு இல்லாமல் இருக்கலாம். அந்த கால கட்டங்களில் இயக்குனர் ஹரி தான் உச்சத்தில் இருந்தார் என்பதை மறுக்க முடியாது.

கமல் ஹரி கூட்டணியில் உருவாக இருந்த பிரம்மாண்ட படம்.. அது இன்னொரு தேவர் மகன் என சிலாகிக்கும் தயாரிப்பாளர்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com