இன்று இந்திய சினிமாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் திரைப்படமாக விளங்கும் பாகுபலி படங்களைவிட ரஜினியின் ஒரு படம் பேசப்பட்டிருக்கும் எனவும், எதிர்பாராமல் அந்தப் படம் கைவிடப்பட்டதை படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் 70 வயதில் 200 கோடி வசூல் கொடுக்கும் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் தமிழ் சினிமாவில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நமக்கும் பெருமை தானே. அப்படிப்பட்டவர் தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சினிமாவில் ஹீரோவாக தன்னுடைய கேரியரை தொடர்ந்ததில் இருந்து தற்போது வரை டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.
ரஜினியின் நிறைய படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் என்ற வெற்றிக் கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் ராணா.
பின்னர் இந்த திரைப்படம் கோச்சடையான் என்ற அனிமேஷன் படமாக வெளியானது. கோச்சடையான் படம் மட்டும் அனிமேஷனாக இல்லாமல் நேரடி படமாக அமைந்திருந்தால் கண்டிப்பாக பாகுபலியை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் கோச்சடையானை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
பாகுபலி படத்திற்கு முன்பே கோச்சடையான் படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது வந்த விமர்சனங்களும் அதுதான். படம் சூப்பராக இருந்தாலும் பொம்மை படம் பார்ப்பது போல் இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்தது. இப்போதும் அடிக்கடி கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து ராணா கதையை ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை கேஎஸ் ரவிக்குமாரே தெரிவித்துள்ளார்.
Post a Comment