சினிமாவில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே படத்தை வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மற்றும் கதையை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
அவ்வாறு அந்த படத்தில் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே அடுத்த படத்தை நிதி நெருக்கடி இல்லாமல் அவர்களால் தயாரிக்க முடிகிறது. அந்த வகையில் பிளாக்பஸ்டர ஹிட்டடித்த படங்களில் அதிகம் அஜித், ரஜினிகாந்த், விஜய், படங்கள் தான் இடம் பெற்றுள்ளது.
ஆனால் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தான். அவ்வாறு கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, அஜித் நடிப்பில் வெளியான வலிமை, விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால் வசூலை பொருத்தவரை படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் பார்த்தது. இந்நிலையில் ரசிகர்கள் வசூலில் முதலிடத்தில் இருப்பது விஜய் நடித்த மாஸ்டர் படம் என நினைத்திருந்தனர். ஆனால் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் தான் தற்போது வரை நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
இந்தச் செய்தியை வலிமை படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற அன்புச்செழியன் ஒரு விழாவில் கூறினார். படத்தின் டிஸ்ட்ரிபியூட்டரே இப்படி சொல்லியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பீஸ்ட் படத்துக்கு நெகடிவ் விமர்சனம் வந்ததால் வலிமை படத்தின் வசூலை முறடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment