தஜ்ஜால் தொடர் - பதிவு-17
தஜ்ஜாலின் பித்னாக்கள்
1.தஜ்ஜாலின் மழை.
2.தஜ்ஜாலின் நீரும் நெருப்பும்.
ஷஹிஹ் முஸ்லிம் ஹதிஸ் எண் -7372:
தஜ்ஜால் மக்களின் ஒரு கூட்டத்திடம் சென்று தன்னை மீட்பராக ஏற்றுக் கொள்ள அறிவிப்பு செய்வான்.அவன் அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டதும் அவன் வானங்களுக்கு கட்டளையிடுவான் அது மழை பொழியும்.
அடுத்து ஒரு கூட்டத்திடம் சென்று அறிவிப்பு செய்வான்.ஆனால் மக்கள் அவனை புறக்கணிப்பார்கள்.இதனால் தஜ்ஜால் மழையை தடுத்து மக்களுக்கு வறட்சியை ஏற்படுத்துவான்.
இந்த ஹதிஸின் மூலம் நமக்கு தெரிய வருவது தஜ்ஜால் வானிலையை தம் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் என்பது ஆகும்.
மேலோட்டமாக பார்க்கும் போது இது ஒரு அற்புதம் போல தோன்றும்.ஆனால் உண்மையில் இது ஒரு கேடான அறிவியலாகும்.
அற்புதங்கள் என்பது இறைத்தூதர்களுக்காக இறைவனிடம் இருந்து வரும் சான்றாகும்.
ஒவ்வொரு தூதருக்கும் ஒவ்வொரு விதமான அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தது. எனவே அற்புதம் என்பது இறைவனின் தூதர்களுக்குரியதே தவிர தஜ்ஜாலுக்குரியதல்ல.
தஜ்ஜால் ,வானிலையை அறிவியல் உபகரணங்களை கொண்டு கட்டுப்படுத்துவான் என்பது தான் உண்மை.
இன்றைய நவீன அறிவியல் HAARP என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வானிலையை கட்டுப்படுத்தும் யுக்தியில் வெற்றி அடைந்துள்ளது.
அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ கதிர்களை பயன்படுத்தி வான்வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம் மற்றும் அழுத்த அளவுகளில் மாறுதல்கள் செய்து செயற்கையான காற்றழுத்த தாழ்வுநிலையை உண்டாக்கி மழையை பெற இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.மேலும் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயற்கையாக ஏற்படும் புயல்களை அகற்றி மழையை தடுக்கவும் முடியும்.
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புவி தட்டுகளை அதிரச்செய்து செயற்கையான நிலநடுக்கங்களையும் ,ஆழிப்பேரலைகளையும் உருவாக்க முடியும்.
இந்த HAARP ஆயுதம் எதிர்கால போர்களில் மிகப்பெரிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம்.
தஜ்ஜாலின் மழை என்பது ஒரு கேடான அறிவியலே தவிர அற்புதம் இல்லை என்பதை நாம் அறிந்து உறுதி செய்துக் கொண்டால் அவனுடைய பித்னாவில் நாம் அகப்படாமல் இருக்கலாம்.
2.தஜ்ஜாலின் நீராறும் நெருப்பாறும்.
ஸஹிஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதிஸ்:
தஜ்ஜாலிடம் நீராறும் நெருப்பாறும் இருக்கும்.நீங்கள் எதை நெருப்பாக காண்கிறீர்களோ அதில் குதித்து விடவும் ஏனெனில் அவனிடம் உள்ள நீர் உண்மையில் நெருப்பாகும் அது போல அவனிடம் உள்ள நெருப்பு உண்மையில் நீராகும் என்று தூதர் அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த ஹதிஸ்- உண்மையான நீரையும் நெருப்பையும் கூறவில்லை இது ஒரு குறியீட்டு மொழி.
தஜ்ஜாலை ஏற்றுக் கொண்டு அவன் பித்னாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவனிடம் இருக்கும் நீராறு(சொர்க்கம்) அதாவது போதை,விபச்சாரம்,திருட்டு செல்வங்கள் என்ற அனைத்து சிற்றின்பங்களும் இவ்வுலகில் கிடைக்கும்.ஆனால் தஜ்ஜாலின் இந்த சொர்க்கம் மக்களை மறுமையில் நரகில் தள்ளும்.
தஜ்ஜாலை மக்கள் நிராகரிக்கும் போது அவனுடைய நெருப்பாறு (நரகம்)(அவனுடைய கேடுகெட்ட ராணுவத்தின் கொலை, கற்பழிப்பு, செல்வ அபகரிப்பு போன்ற சித்ரவதைகள்) மக்களுக்கு கிடைக்கும்.
இந்த கொடுமைகள் மக்களை ஷஹீதுகளாக்கி மறுமையில் சொர்க்கத்தை பெற்று தரும்.
தஜ்ஜாலின் பித்னாக்களை உறுதியோடு எதிர்கொள்ளும் ஆற்றலை இறைவன் நமக்கு வழங்கட்டுமாக.....
தஜ்ஜால் மகளிர் உலகில் ஏற்படுத்திய பித்னாக்களை நாளை காணலாம்.நாளைய பதிவு பெண்களுக்கு கசப்பை தரலாம்.ஆனால் அல்லாவின் மார்க்கம், அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
பதிவு நாளை தொடரும்.......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 16:- தஜ்ஜாலின் பித்னாக்கள், தஜ்ஜாலின் மிகக் கொடிய பித்னாக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முதலில் அந்த பித்னாக்கள் எவை என்பதை நாம் இனம் காண வேண்டும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/16.html?spref=tw
Post a Comment