HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 22 February 2020

"நீங்க யாருன்னு" ரஜினியை கிண்டல் செய்தாரே.. ஞாபகம் இருக்கா.. அவர் இப்போது திருட்டு கேஸில் கைது!

the youth who asked rajinikanth in the thoothukudi incident arrested in theft case


ரஜினியை பார்த்து பயம் இல்ல - வெளுத்து வாங்கிய டி.ஆர்:https://youtu.be/pVgv_1oEixI

தூத்துக்குடி: "நீங்க யாருன்னு" தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து ஒருத்தர் கேட்டாரே ஞாபகம் இருக்கா? அந்த இளைஞரை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து உள்ளே வைத்துவிட்டார்கள்! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு பார்க்க சென்றிருந்தார்... ஆஸ்பத்திரியில் குண்டடி பட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியபடி வந்தார்... அப்போது அங்கு இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்... அவர் டக்கென ரஜினியை பார்த்து, "யார் நீங்கள், இங்கே எதுக்கு வந்தீங்க" என்று கேட்டார். இதை ரஜினிகாந்த் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. இது அப்போது சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது. அந்த இளைஞர் பெயர் சந்தோஷ்... இது ரஜினிக்கே பெரும் அவமானமாகவும், கோபத்தையும் தூண்டியதாககூட சொல்லப்பட்டது.

அந்த கோபத்தில்தான் நேராக ஏர்போர்ட்டுக்கு வந்தவர், செய்தியாளர்களிடம் காட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்றும் செய்திகள் வந்தன.. ஆனால் தூத்துக்குடி சம்பவம், ரஜினி ஏர்போர்ட்டில் பேசியது இன்றுவரை நினைவில் உள்ள அளவுக்கு, அந்த இளைஞரை அதற்கு பிறகு எல்லாருமே மறந்து போய்விட்டனர்.. இப்போது அந்த இளைஞர் மீதுதான் திருட்ட கேஸ் ஒன்று பதிவாகி உள்ளது. தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவர் தன் வீட்டு வாசல் முன்பு பைக்கை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.. 2 நாளைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றிருக்கிறார்.. விடிந்து வந்து பார்த்தால் பைக்கை காணோமாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வடபாகம் போலீஸில் இதை பற்றி புகார் அளித்துள்ளர்.

போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மணி 23, சரவணன் 22, ஆகியோரை இந்த பைக் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இவர்கள் அனைவரும் கைதாகி உள்ளனர்.. பைக் திருடியதில் சந்தோஷும் ஒருவர் என்பதால்தான் இந்த செய்தி பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது.

தூத்துக்குடி சம்பவ வழக்கின் விசாரணைக்காக ரஜினிகாந்திடம் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த நிலையில், தூத்துக்குடி இளைஞர் கைதாகி உள்ளதும் பரபரப்பை தந்து வருகிறது.




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com