
TAMANNA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/tamanna-cute-images.html?spref=tw
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பதை தவிர வேறு யார் யார் நடிக்கிறார்கள் என இதுவரை படக்குழு ஒரு அப்டேட்டை கூட கொடுக்கவில்லை.
நடிகர்களை பற்றிய அப்டேட் தான் வரவில்லை என்றால் படக்குழு எங்கே நடக்கிறது? என்ன ஷூட்டிங் நடக்கிறது? என்பதை கூட தெரியப்படுத்துவதில்லை. இதனால் வலிமையில் நிலை தெரியாமல் ரசிகர்கள் குழம்பி கிடக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது செம அப்டேட் ஒன்று கசிந்துள்ளது, அதாவது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸ்-ல் தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறதாம்.
இதனை முடித்து விட்டு பிப்ரவரி இறுதியில் படக்குழு சுஸர்லாந்த் பறக்க உள்ளனர், அங்கு தான் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment