HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 3 August 2021

வெளியான ஒரே நாளில் தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை தகர்த்த, சாதனை படைத்த வலிமை படத்தின் பாடல்.. இணையதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்:-

 



அஜித் ரசிகர்கள் நடிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இரவு வலிமை படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடல் ஒரு சில மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இதுமட்டுமின்றி திரையுலகில் அஜித் நடிக்க வந்து 29 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இப்பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்பாடலில் விக்னேஷ் சிவன் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இப்பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இப்பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங் NO.1-ல் இருந்து வருகிறது










About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com