சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டாலும் அவரது மனதில் ஒரு கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருக்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் தொட்ட உயரத்தை பற்றி நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக ரஜினியும், 60 ஆண்டு காலமாக கமலும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் 70 வயதில் டாப் ஹீரோவாக வலம் வருவது ரஜினியும், கமலும் மட்டும்தான்.
எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு படங்கள் எவ்வளவு வெற்றிகள் கொடுத்தாலும் ரஜினிகாந்த் மனதிற்குள், எதனால் தனக்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்தது? அந்த அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்? என்ற சந்தேகம் இருப்பதாக நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால் கமலஹாசன் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாகும்போது அது என்னுடைய பொருள், அது தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எடுப்பாராம். அதனால் தனக்கு இந்த உயரத்திற்கு வந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை எனவும் தன்னம்பிக்கையை நிறைய உள்ள ஆளாக இருப்பார் எனவும் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கவிதாலயா கிருஷ்ணன் ரஜினியின் குரு சிஷ்யன், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களில் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கே பாலச்சந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் இவர் தலை காட்டாமல் இருந்ததில்லை
Post a Comment