தஜ்ஜால் தொடர் - பதிவு- 35
தஜ்ஜாலும் போர்களும்
மல்ஹமா யுத்தம் எப்போது ஏற்படும் என்பதையும் இறுதியில் எந்த நகரம் வெற்றிக்கொள்ளப்படும் என்பதையும் போரில் நமது நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்பதையும் இதுவரை கண்டோம்.
இனி மல்ஹமா யுத்தத்தின் போக்கை நாம் காண்பதற்கு முன் இஸ்லாமிய உலகத்தில் ஏற்பட உள்ள ஷியா-ஸன்னி யுத்தத்தை பற்றி முதலில் காணலாம்.ஏனெனில் மல்ஹமா யுத்தத்திற்கு முன்பு வரவுள்ள இப்போரால் இஸ்லாமிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு ஏற்பட உள்ளது.
இறைத்தூதர் அறிவித்தார்கள்:
முஸ்லிம்களில் இரு பிரிவினர் ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட்டு கொள்ளும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது.
தூதரின் முன்னறிவிப்பு ஒரு போதும் பொய்யாகாது.எனவே இரு பிரிவினரின் யுத்தம் தவிர்க்க முடியாதது. இருப்பினும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் யுத்தம் செய்யக்கூடாது அது நம்மை நரகத்திற்கு அழைத்து செல்லும் என்ற தூதரின் செய்தியை முஸ்லிம்கள் அனைவரிடமும் நினைவுபடுத்தினால் யுத்தத்தின் வீரியத்தை குறைக்கலாம்.
இறைத்தூதர் அறிவித்தார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டால், கொல்பவரும் சரி, கொல்லப்படுவோரும் சரி, இருவருமே நரகத்திற்கு செல்வார்கள்.கொலை செய்தவர் கொலை செய்த காரணத்திற்காகவும், கொல்லப்பட்டவர் எதிரியை கொலை செய்ய நாடி சண்டையிட்டதாலும் நரகத்திற்கு செல்வார்கள்.
எனவே ஷியா-ஸன்னி என்ற பேதத்தை முன் வைத்து சண்டையிடும் அனைவரும் நரகவாசிகள்.இந்த தரம் கெட்ட யுத்தத்திற்காக ஷியா-ஸன்னி வெறியை தூண்டுபவர்களும் நரகவாசிகள்.இந்த யுத்தத்தில் யாரேனும் யாருக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களும் நரகவாசிகள்.
நரகத்திற்கு அழைத்து செல்லும் யுத்தத்தில் இருந்து இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக....
எந்த வகையான பிரிவினைகளும் குர்ஆனில் இல்லாத போது எங்கிருந்து வந்தது ஷியா-ஸன்னி?
பதில்,வரலாற்று பக்கங்களில் அழகாக உள்ளது.
முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம் என்ற ஒன்றிற்காக நடைபெற்ற போட்டியும் போரும் தான் இந்த பிரிவினையின் அடிப்படைகள்.
இரண்டு பிரிவினருடைய இறைவன் அல்லாஹ் தான்.
இரண்டு பிரிவினருடைய இறுதித் தூதரும் நபி முகம்மது(ஸல்) அவர்கள் தான்.
இரண்டு பிரிவினரும் மறுமையையும், இறைத்தூதர்களையும்,வானவர்களையும் நம்புகின்றனர்.
கொள்கை ரீதியாக பெரிய அளவில் மாறுபாடுகள் இல்லை.சிறிய அளவில் தான் உள்ளன.
இருப்பினும் இரண்டு பிரிவுகளாக செயல்படக்காரணம் அதிகார ஆசை.
இறைத்தூதரின் மறைவிற்கு பின் ஏற்பட்ட அதிகார ஆசை போட்டிகளை சுருக்கமாக காணலாம்.
இறைத்தூதர் மறைந்ததை தொடர்ந்து, ஷபிஹா என்னுமிடத்தில் அன்சார்கள்(மதீனாவாசிகள்) ஒன்று கூடி அரசின் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தை நடத்தினர்.
அன்சார்களின் ஒரே நோக்கம் இஸ்லாமியர்களின் தலைவராக அன்சார்களில் ஒருவரை தேரந்தெடுப்பதும் மக்காவாசிகளான முஜாஹிரின்களை நிர்வாகத்திலிருந்து விலக்குவதும் தான்.
கூட்டம் நடைபெறும் செய்தியறிந்து மூத்த நபி தோழர்களான (முஜாஹிரின்களான) அபுபக்கரும் உமரும் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தனர்.
அபுபக்கரும் உமரும் கூட்டத்தில், இறைத்தூதரின் முன்னறிவிப்பின் படி தூதருக்கு பின் வரும் ஆட்சி தலைவர் என்பவர் தூதரின் குலமான குரைஷ் குலத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும் என்று வாதிட்டனர்.
கூட்டத்தில் மாபெரும் சலசலப்பிற்கு பின் முஜாஹிர்கள் அபுபக்கரை தேர்வு செய்தனர்.அன்சார்களும் ஒரு தோழரை(பெயர் என் நினைவில் இல்லை) தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இறுதியில் அத்தோழர் என்னை விட அபுபக்கரே பதவிற்கு தகுதியனவர் என்று கூறி போட்டியிலிருந்து விலகி அபுபக்கரை தலைவராக ஏற்றார்.
கூட்டத்தின் முடிவில் அபுபக்கர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் முஜாஹிர்களில் மிக முக்கியமானவராக விளங்கிய அலி இப்னு அபி தாலிப் அபுபக்கரை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
அபுபக்கரை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உமர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அலி அவர்களின் இல்லத்திற்கு சென்றது.பேச்சுவார்த.தை அடி தடி கலகத்தில் தான் முடிந்தது.
இறைத்தூதரின் தோழர் என்று இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட அபுபக்கர் அவர்களை, ஒட்டுமொத்த முஸ்லிம்களுடைய ஈமானின் எடையை விட இவருடைய ஈமானின் எடை அதிகமானது என்று இறைத்தூதரால் கௌரவிக்கப்பட்ட அபுபக்கரை,தொடக்கத்தில் அன்சார்களும் பிறகு அலி அவர்களும் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது.
இறுதியில் ஒரு வழியாக அலி அவர்கள், அபுபக்கரை தலைவராக ஏற்றுக்கொண்டார்.
அபுபக்கர் அவர்களுக்கு பின் உமர் அவர்களும் அவருக்கு பின் உத்மான் அவர்களும் ஆட்சி தலைவராக செயல்பட்டனர்.
உத்மான் அவர்களுக்கு பின் அலி இப்னு அபி தாலிப் ஆட்சித்தலைவராக செயல்பட்டார்.
இவருடைய காலத்தில் ஏற்பட்ட போர்களும் முஆவியா என்ற போட்டியாளரின் பேராசைத்தனமும் தான் இஸ்லாமிய உலகத்தில் ஏற்பட்ட மாபெரும் கலகங்களுக்கும் ஷியா என்ற பிரிவின் பிறப்பிற்கும் காரணம்.
அதிகார ஆசையின் வரலாற்றை நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்........
தஜ்ஜால் தொடர் பதிவு- 34; தஜ்ஜாலும் போர்களும் ரோமர்களும் முஸ்லிம்களும், ரோமர்கள்(ரஷ்ய கிழக்கு கிறித்தவர்கள்) தான் போரில் நமது நண்பர்கள் என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோம் ஆனால் ரோமர்களுடான நமது உறவு இன்றைய தினம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/34.html?spref=tw
Post a Comment