தஜ்ஜால் தொடர் -பதிவு- 39
தஜ்ஜாலும் போர்களும்
மல்ஹமா யுத்தம் பற்றி ஹதிஸ்களில் கீழ்கண்ட செய்திகள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன
1.எப்போது தொடங்கும் என்பது பற்றி உள்ளது.(ஜெருசலம் உச்சம் தொடும் போதும் மதீனா வீழ்ச்சியடையும் போது).இதைப்பற்றி ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது.
2.போரானது ஏழு ஆண்டுகள் நடைபெறும்.
3.போர் மிகக் கடுமையாக நடைபெறும்(வானில் பறக்கும் பறவைகள் கூட மடிந்து விழும் அளவிற்கு)
4.போரின் முதற்பாதியில் முஸ்லிம்களுக்கு கடுமையான இழப்பும் பின்னடைவும் ஏற்படும்.
5.போரின் முடிவில் முஸ்லிம்கள் வெல்வார்கள்.காண்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படும்.தஜ்ஜால் (நமது நாள் போன்ற அவனது நாளில்)வெளிப்படுவான்.
மல்ஹமா பற்றி கிடைக்கும் செய்திகள் இவைகள் மட்டுமே.
ஹதிஸி்ல் நமக்கு கிடைக்கும் செய்தியை ஆராய்ந்தால் நமக்கு இரண்டு செய்திகள் புரியவரும்.
இந்த போரானது ஏழு ஆண்டுகள் நடைபெற உள்ள கடுமையான போர்.
இது ஒரு உலகளாவிய போர்.வரலாற்று மொழியில் சொன்னால் மூன்றாம் உலகப்போர்.
ஏழு ஆண்டுகள் போர் நடைபெறுகிறது என்றால்,பல்வேறு இடங்களில் பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் யுத்தம் என்பது தான் சரியான புரிதல்.
ஹதிஸ்களில் பல யுத்தங்களை பற்றிய செய்தி உள்ளது.அந்த யுத்தங்கள் அனைத்தும் மல்ஹமாவுடன் தொடர்புடையதா?இல்லையா?என்பதை நாம் அந்த போரின் வீரியத்தை வைத்தும் அந்த போரில் பங்கு கொண்டுள்ள வீரர்களுக்கு இறைவனிடம் கிடைக்கும் சிறப்புகளை வைத்து அறியலாம்.
அந்த வகையில் யூப்ரடிஸ் நதிக்கரையில் நடைபெறும் போரானது மல்ஹமாவுடன் தொடர்புடையது தான்.
தூதர் அறிவித்தார்கள்:
யூப்ரடிஸ் நதியானது தங்கமலையை வெளிப்படுத்தும்.அதை நீங்கள்(முஸ்லிம்கள்) கண்டால் அதிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.அந்த தங்கத்திற்காக போரிடுபவர்களில் 100ல் 99 பேர் பலியாவார்கள்.போரில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எனக்கே அந்த தங்கம் உரியது என்பார்கள்.
இந்த ஹதிஸின் படி பலி எண்ணிக்கை வீதம் என்பது 99%.
இந்த பலி வீதம் நமக்கு இரண்டு செய்திகளை தருகிறது.
1.இது மல்ஹமா யுத்தத்தின் ஒரு பகுதி.
2.இது மரபு சார்ந்த போர் முறை அல்ல.மரபு சாரா போர் முறை.99% பலி ஏற்படுத்துகிறது என்றால் அது அணு ஆயுத போராக தான் இருக்க முடியும்.
இந்த ஹதிஸில் தங்க மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் இருந்து திடீரென தங்க மலை தோன்றும் என்று கருதினால் நாம் இன்னும் கனவுலகில் இருக்கிறோம் என்று தான் பொருள்.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை குறியீட்டு நடை.
ஆக யூப்ரடிஸ் நதியில் வெளிப்படவுள்ளது தங்க மலை கிடையாது. வெளிப்படவுள்ளது பெட்ரோலிய கடல் ஆகும்.
நமது இத்தொடரில் பதிவிடப்பட்ட தஜ்ஜாலின் காகிதப்பண பித்னாவை நீங்கள் ஆய்வு செய்தால் ஒன்றை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
தங்கத்தை அளவுகோலாக வைத்து அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர் பிற்பாதியில் பெட்ரோலை அடிப்படையாக கொண்டு பெட்ரோ டாலராக மாறியது.எனவே அன்றைய தங்கம் என்பது இன்றைய பெட்ரோல் ஆகும்.
மேலும் அறிவியலின் படி திடிரென்று ஒரு இடத்தில் மலை தோன்றிவிடாது.ஒரு இடத்தில் ஒரு மலை தோன்ற வேண்டுமானால் அதன் நிலப்பரப்பு பல லட்சம் வருடங்களுக்கு சிறிய அளவில் மாற்றம் அடைந்தால் தான் மலை தோன்றும்.
எனவே தங்க மலை தோன்றும் என்று நம்புவது சரியல்ல மாறாக மிகப்பெரிய அளவிலான பெட்ரோலிய கிணறுகள் அங்கு வெளிப்படும் என்பதே சரியான நம்பிக்கை.
மேலும் ஹதிஸில்,தங்கத்திற்கான அரபு வார்த்தை பயன்படுத்தப்படவில்லையென்றும், தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை குறிக்கும் பொதுவான அரபு வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது என்றும் அரபு மொழி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே யூப்ரடிஸ் நதியில் வெளிப்படவுள்ளது பெட்ரோலிய கடல் என்பது நிருபணமாகிறது.
இன்று டாலர் உலகப்பணமாக இருப்பதற்கு, காரணமாக இருப்பதே பெட்ரோலியம் தான்.எனவே உலகப்பணத்தை(உலக அதிகாரத்தை) தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் பெட்ரோலியம் கடலளவிற்கு(மிக மிக அதிகமாக) வெளிப்பட்டால் நடைபெறும் போர் எந்த அளவிற்கு கடுமையாக இருக்கும் என்பதை நீங்களே சற்று கற்பனை செய்து பாருங்கள்.
எங்கெல்லாம் ஓடுகிறது யூப்ரடிஸ் நதி?
மூன்று நாடுகளில் ஓடுகிறது.
1.துருக்கி
2.சிரியா
3.ஈராக்.
ஆக இந்த மூன்று நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் தான் பெட்ரோலிய கடல் உள்ளது.
இன்றைய உலக அரசியல் நிலவரத்தின் படி துருக்கியும் சிரியாவும் நேர் எதிரிகள்.
இன்றைய நிலவரப்படி ஈராக் நாடு, ஈரான் நாட்டின் நட்பு நாடு.சிரியாவுடன், ஈரான் நட்புடன் உள்ளது.
இப்போது சற்று உலக அரசியலை நன்றாக கவனியுங்கள்.
துருக்கி(ஸன்னி) vs சிரியா(ஷியா)
துருக்கியின் நண்பன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.
சிரியாவின் நண்பர் ரஷ்யா மற்றும் ஈராக்.
மூன்று யூப்ரடிஸ் நாடுகளில் பெட்ரோலிய கடல் எங்கு வெளிப்பட்டாலும் அது அமெரிக்க தலைமையிலான அணிக்கும் ரஷ்ய தலைமையிலான அணிக்கும் நடைபெறும் யுத்தமாகவே இருக்கும்.
மல்ஹமா யுத்தத்தின் மற்ற சண்டைகளை பற்றி நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் பதிவு- 38; ஷியா-ஸன்னி பிரிவினையே தஜ்ஜாலின் தந்திரமாக தான் இருக்கும் என்று,எனக்கு தோன்றுகிறது. சரி.ஏன் தஜ்ஜால் ஷியா-ஸன்னி யுத்தத்தை விரும்புகிறான்? என்பதை இப்போது காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/38.html?spref=tw
Post a Comment