தஜ்ஜால் தொடர் பதிவு- 34
தஜ்ஜாலும் போர்களும்
ரோமர்களும் முஸ்லிம்களும்
ரோமர்கள்(ரஷ்ய கிழக்கு கிறித்தவர்கள்) தான் போரில் நமது நண்பர்கள் என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோம்
ஆனால் ரோமர்களுடான நமது உறவு இன்றைய தினம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.
ரோமர்களுடான நமது உறவினை வரலாற்று ரீதியாக இன்று காணலாம்.
இஸ்லாம் மார்க்கம் தொடங்கிய காலத்தில் ரோம் உடன் நாம் மிக நெருக்கமான உறவில் இருந்தோம்.
மல்ஹமா யுத்தத்திலும் நட்புடன் தான் செயல்படுவோம்.
இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக ,கி.பி 1453 ஆம் ஆண்டுக்கு பின் இஸ்லாம் மற்றும் கிழக்கு கிறித்தவத்திற்கான உறவு சீர்கெட்டு, தீரா பகையை ஏற்படுத்தியது.
இன்றும் அந்த பகை சற்று குறைந்தாலும் முழுவதுமாக மறையவில்லை.
தூதர் மறைந்த உடனேயே,கிழக்கு கிறித்தவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போர் ஏற்பட்டாலும் தீரா பகை ஏற்படவில்லை.நடைபெற்ற போர்களும் போர்விதிகளை மதித்து நடைபெற்றன.
ஆனால் 1453 ஆம் ஆண்டு நடைபற்ற போர் பெரும்பகையை ஏற்படுத்தியது.
யார் மீது குற்றம்?.
இது உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம்.
போரில் வெற்றி பெற்ற முஸ்லிம்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் தான் பகைக்கு காரணம்.
உத்மானிய பேரரசர் சுல்தான் முகம்மது பாத்தின் என்பவர் செய்த அயோக்கியதனத்தை பாதிக்கப்பட்ட எந்த ஒரு கிறித்தவனும் மன்னிக்க மாட்டான்.
கலிபா உமரின் செயலையும் சுல்தான் முகம்மது பாத்தினின் செயலையும் இப்போது ஒப்பிடுவோம்.
ஜெருசலம் நகரை மீட்பதற்காக முதல் கலிபா அபுபக்கர் அவர்களால் அவருடைய இறுதி காலத்தில் தொடங்கப்பட்ட சிறிய யுத்தம் கலிபா உமர் காலத்தில் முடிவுப்பெற்றது.
இந்த வெற்றிக்கு பின் கலிபா - உமர் இப்னு ஹத்தாப் அவர்கள் நடந்துக்கொண்ட மெய்சிலிர்க்கும் நடத்தை கிறித்தவர்களை கவர்ந்து இழுத்தது.
கலிபா உமர் அவர்களின் நடத்தையையும் கி.பி. 1453ல் உத்மானிய பேரரசர் சுல்தான் முகம்மது பாத்தின் நடத்தையையும் ஒப்பிட்டு பார்த்தால் வரலாற்றில் உத்மானிய பேரரசு செய்த அயோக்கியதனத்தை நாம் எளிதில் அறியலாம்.
உமர் காலத்தில் நடைப்பெற்ற போரில் கிறித்தவர்களின் தோல்வி உறுதியானதையடுத்து, ஜெருசல நகர கிறித்தவ தலைமை, நகரத்தின் பொறுப்பை தாங்கள் ஒப்படைக்க வேண்டுமென்றால், கலிபா இந்நகருக்கு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
வெற்றி உறுதி என்ற நிலையிலும் நிபந்தனையை ஏற்று உடனே ஜெருசலம் சென்றார் கலிபா உமர்.தம் உதவியாளர் குதிரையில் வீற்றிருக்க உடன் நடந்தவறாக ஜெருசலத்திற்குள் நுழைந்தார் கலிபா.
ஆனால் சுல்தான் பாத்தின் காண்ஸ்டாண்டிநோபிளை முற்றுகையிட்ட போது, போரை விரும்பாத கிறித்தவ உலகம் அமைதி நடவடிக்கைக்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு முயற்சித்தது.ஆனால் அமைதியை விரும்பாத சுல்தான் பாத்தின் தன்னுடைய மாபெரும் படையைக் கொண்டு சிறிய அளவிலான கிறித்தவ படைகளில் ரத்தத்தை காண்ஸ்டாண்டிநோபிள் நகரில் ஆறாக ஓடச்செய்து தன் ஆட்சியை நிறுவினார்.
கலிபா உமர், ஜெருசலம் நகரில் நுழைந்த பின் தான் தொழுவதற்கான இடத்தை தேர்வு செய்ய விரும்பிய போது, தேவாலயத்திற்குள் வந்து தொழுமாறு அழைத்தார் கிறித்தவ தலைமை பாதிரி.ஆனால் உமரோ நான் இங்கு தொழுதால் அதையே காரணமாக காட்டி இந்த ஆலயத்தை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் கைப்பற்றக்கூடும். ஆகையால் நான் இங்கு தொழுவது சரியில்லை என்றார் உமர்.
சுல்தான் முகம்மது பாத்தினோ கிழக்கு கிறித்தவ உலகின் தலைமை தேவாலயமாக விளங்கிய ஹாஹியா ஷோபியாவை மசூதியாக மாற்றி உத்தரவிட்டார்.இந்த மட்டரகமான நடவடிக்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கரும்புள்ளி.
நமது மக்கா நகரை எதிரிகள் கைப்பற்றி காபா புனித ஆலயத்தை வேறொரு ஆயலமாக மாற்றினால், நம் மனதில் எந்த அளவிற்கு கோபம் ஏற்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
கிறித்தவ ஆட்சியில் இருந்த உரிமைகளை விட அதிகமான உரிமையை, உமர் அவர்களின் ஆட்சியில் அனுபவித்தார்கள் கிறித்தவர்கள்.
ஆனால் சுல்தான் பாத்தின் காலத்தில் கிறித்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது மிகக் கொடுரமானது.
கிறித்தவ குழந்தைகள் சிறு வயதிலேயே பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அவர்கள் இஸ்லாமாக்கப்பட்டு இஸ்லாமிய படையி்ல் சேரத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்தியாவிலும் ஸ்பெயினிலும் 1000 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் இங்கு யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படவில்லை.
வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது இந்தியாவில் எந்த அளவிற்கு பொய்யோ அந்த அளவிற்கு உண்மை அனடோலியாவில்(இன்றைய துருக்கி)
பைசாந்திய பேரரசை கைப்பற்றி, கிறித்தவர்களுக்கு, சுல்தான் பாத்தின் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதது.
கிறித்தவர்கள் மனதில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது இஸ்லாமிய மதகுருக்களின் ஒரு. பிரச்சாரம்.
என்ன பிராச்சரம்?
தூதர் அறிவித்தார்கள்:
காண்ஸ்டாண்டிநோபிளை முஸ்லிம்கள் கைப்பற்றுவார்கள். அந்த படையிடன் தளபதியும் வீரர்களும் இறைவனின் அருள் பெற்றவர்கள்.
இங்கு சொல்லப்படும் காண்ஸ்டாண்டிநோபிள் வெற்றி என்பது மல்ஹமா யுத்தத்திற்கு பின் வருவதாகும் என்பதே அடிப்படை உண்மை.
ஆனால் இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாத முட்டாள் மதக்குருக்களின் பிரச்சாரம்,சுல்தான் பாத்தினின் புகழ்பாடும் பிரச்சாரம், முஸ்லிம்களை முட்டாளாக்கியதுடன் கிறித்தவர்களின் மனதில் பகைவெறியை தூண்டியது.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமல்லவா!.
முதல் உலகப்போரில் உத்மானிய பேரரசு வீழ்ந்த பின் ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் இருந்த முஸ்லிம்கள்,கிழக்கு கிறித்தவர்களால் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர்.இன்று வரையிலும் ஐரோப்பாவின் சில கிழக்கு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு தங்களின் பகையை கிழக்கு கிறித்தவர்கள் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வரலாற்றில் நடந்த தவறுக்கு நிகழ்காலத்தில் பழி எடுக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கையும் தவறானது தான்.
கிழக்கு கிறித்தவர்கள் தற்போது தவறு செய்தாலும் வரலாற்றில் மாபெரும் குற்றம் செய்த முஸ்லிம்கள் தான் பகையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பணியை தொடங்க வேண்டும்.
தங்கள் மூதாதையர்கள் செய்த தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோரி நல்லுறவிற்கான தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
நம் இருவருடைய பொது எதிரியான மேற்கு ஐரோப்பாவின்(NATO) அட்டூழியத்தை அழிக்க இஸ்லாமுடன் நல்லுறவு வேண்டுமென்பதை கிழக்கு கிறித்தவத்தின் தலைமையான ரஷ்யாவும் இன்று உணரந்துள்ளது.
இருந்த போதிலும் இன்றைய உலக அரசியல் நடவடிக்கைகளில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதால் ரஷ்யா இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலில்(காஷ்மிர்,CAA) விளகியே நிற்கிறது.
ஆனால் உலக சூழல் மாறத்தொடங்கியுள்ளதை நாம் அனைவரும் காண்கிறோம்.
ஆகையால் ரஷ்யாவுடன் நமக்கு ஒரு நல்ல உறவு ஏற்படவிருக்கிறது.
ஆனால் முஸ்லிம்களுடன் ரஷ்யா நெருங்குவதை,சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களான மானங்கெட்ட நாய்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
தங்களின் கீழுள்ள ,மத போதகர்கள் என்ற போர்வையில் சுற்றும் காமுகர்களை, வைத்து உலகம் முழுவதும் ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளும்.
இது போன்ற முட்டாள் தனமான பிரச்சாரத்திற்கு ஆளாகாமல் இஸ்லாமிய உலகம் ரஷ்யாவுடன் நெருங்க வேண்டும்.அவர்கள் தான் போரில் நமது நண்பர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.....
தஜ்ஜால் தொடர்-பதிவு- 33 தஜ்ஜாலும் போர்களும், ரோமானிய பேரரசு என்ற ஒன்று முழுமையாக வீழ்ந்த பின் முஸ்லிம்கள் இன்றைய தினம் யாரை ரோமர்கள் என்று இனங்கண்டு கூட்டணி வைப்பது?:-https://e-funandjoyindia.blogspot.com/2020/12/33.html?spref=tw
Post a Comment