விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர்.
இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக ‘Nomination Topple Card’ என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர்.
இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த ‘Nomination Topple Card’ கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் ஆரிக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.த வாரம் ஆரி மற்றும் பாலாஜியை தவிற மற்ற 5 பேருக்கும் குறைவான வாக்குகள் தான் வந்தது. அதிலும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் ஆரம்பத்தில் சம்யுக்தா மற்றும் நிஷாவிற்கு குறைவான வாக்குகள் கிடைத்தது. எனவே, இவர்கள் இருவரில் யாரவாது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Post a Comment