தஜ்ஜால் தொடர் - பதிவு- 29
தஜ்ஜாலும் போர்களும்
மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்று தெரிந்துக் கொண்டால் தான் தவறான கூட்டணியை மற்றும் செயல்பாடுகளை தவிர்க்க முடியும்.
இது தொடர்பாக ஹதிஸில் தேடும் போது ஒன்றுக்கொன்று முரணான தகவல்களே கிடைத்தன.
எப்போதுமே குர்ஆனை தான் முதலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பொது விதியை இது நினைவுப்படுத்துகிறது.
குர்ஆன், நாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை தெளிவாக கூறுகிறது.
குர்ஆன் வசனம் 5:90-, யூதர்களும் கிறித்தவர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்களாக இருக்கும் போது அவர்களுடன் நட்புடன் இருக்கக்கூடாது மீறினால் நீங்களும் அவர்களை போன்றவர்களே.. முஸ்லிம்கள் கிடையாது என்று கூறுகிறது.
அனைத்து யூதர் மற்றும் கிறித்தவர்களுடனும் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாதா? என்று கேள்வி ஆச்சர்யமாக எழும்பும்.
பதில்:
அனைத்து யூத மற்றும் கிறித்தவர்களையும் குர்ஆன் குறிப்பிடவில்லை.
குர்ஆன் வசனம் 5:5ல் வேதமுடையோர்களை(யூத மற்றும் கிறித்தவர்களை) மணமுடித்துக் கொள்ள அனுமதிக்கிறது இஸ்லாம்.
அப்படியென்றால் வசனம் 5:90, அனைத்து யூத மற்றும் கிறித்தவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறவில்லை என்பது தெளிவாகிறது. அவர்களில் ஒரு பிரிவினருடன் தான் நட்புக்கூடாது என்பதும் புரிகிறது.
யார் அந்த பிரிவினர்?
வசனம் 5:90 ஐ கூர்மையாக படித்தால் ஒன்று தெளிவாகும்.அது- ---எந்த யூதர்களும் எந்த கிறித்தவர்களும் தங்களுக்குள் நட்பு வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பாதுகாவலாராக உள்ளனரோ அந்த யூத கிறித்தவர்களுடன் நட்பு கூடாது என்கிறது இஸ்லாம்.
ஏன் அவர்களுடன் நட்புக்கூடாது?
யூத மதத்தினர் நபி ஈஸா(அலை) அவர்களையும் அவர்களுடைய தாயார் அன்னை மர்யம்(அலை) அவர்களையும் மிக மிக இழிவாக பேசக்கூடியவர்கள்.
கிறித்தவர்களோ நபி ஈஸா(அலை) அவர்களை இறைவனின் மகன் என்று நம்புபவர்கள்.
இவர்களுக்கிடையே கூட்டணி என்பது இயல்பற்றது.
இந்த இயல்பற்ற செயற்கையான கூட்டணி எப்படி உருவாகும்?.
நாம் இந்த தொடரில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம்(துருக்கிய காஜார்கள்) யூத மதத்தை தழுவியதையும் பின்பு அவர்களில் சிலர் கிறித்தவத்தை தழுவியதையும் கண்டோம்.
பிறகு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், பல்வேறு வகையான அமைப்புகளை ஏற்படுத்தி பல புரட்சிகளுக்கு வித்திட்டு மத சார்பற்ற நாடுகளை ஏற்படுத்திய வரலாற்றையும் இத்தொடரில் கண்டோம்.
இப்போது நன்றாக ஆய்வு செய்தால் நமக்கு ஒன்று புரிய வரும்.
ஐரோப்பிய யூதர்களும் யஃஜூஜ் மஃஜூஜ் தான்.
கிறித்தவர்களில் ஒரு பகுதியினரும்(Evangelical christian) யஃஜூஜ் மஃஜூஜ் தான்.
இவர்களுடைய கையில் மதச்சார்பின்மை என்ற கோஷமும் இப்போது இருக்கிறது.
இப்போது இந்த இரு கூட்டமும் இணைந்து குரல் கொடுக்கும் விஷயம் என்னவென்றால், புனித நகரில்(ஜெருசலத்தில்) பனூ இஸ்ராயில்களின் தாய் நிலத்தில் யூதர்களுக்கான தனி நாடு என்பதாகும்.
இந்த கொள்கைக்காக இயங்கும் அமைப்பு தான் ZIONIST ORGANIZATION.
இந்த ZIONIST அமைப்பு உருவாகும் என்பதை தான் குர்ஆன் வசனம் 5:90 முன்னறிவித்து அந்த அமைப்புடன் எந்த முஸ்லிமும்(எந்த முஸ்லிம் நாடுகளும்) கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டளையிடுகிறது.
இதை மீறி கூட்டணி வைப்பவர்களும் ZIONIST கள் தான் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
ZIONISTகள் தான் முஸ்லிம்களின் எதிரி.
இந்த அமைப்புடன் நெருங்கி உறவாடும் பிரிட்டன், அமெரிக்கா,அதனுடைய NATO நாடுகள்,இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் எந்த வகையான கூட்டணியையையும் முஸ்லிம் நாடுகள்(முஸ்லிம்கள்) ஏற்படுத்தக்கூடாது என்பது தான் இறைக்கட்டளை.
எதிரி யார்? என்று தெரிந்துவிட்டது.
துரோகிகள் யார்? என்பதை நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்........
தஜ்ஜால் தொடர்-பதிவு- 28; இன்றைய தொடர் கொரொனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவலை கொண்டுள்ளது:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/28.html?spref=tw
Post a Comment