தஜ்ஜால் தொடர்- பதிவு- 26
தஜ்ஜாலும் போர்களும்.
தஜ்ஜாலுடைய கடந்த கால மற்றும் எதிர்கால போர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் நாம், போர்களின் பொதுவான வகைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய தினம் போர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1.மரபு சார்ந்த போர்
2.மரபு சாரா போர்
1.மரபு சார்ந்த போர்களில் போர் புரியும் ராணுவங்கள் தங்கள் வசதிகேற்ப தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை கொண்டு (அந்தந்த காலத்தில் சிறந்து விளங்கிய ஆயுதங்கள் -பாபர் காலத்தில் கைத்துப்பாக்கிகள்,திப்பு காலத்தில் பீரங்கிகள்,முதல் உலகப்போரில் டேங்குகள்) கொண்டு எதிர் நாட்டு ராணுவத்தை சந்தித்து வீழ்த்தும் அதன் பின்பு எதிரி நாட்டு பெண்களையும் செல்வங்களையும் சூரையாடும்.இது முதல் வகையான போர்.
2.மரபு சாரா போர்வகைகளில் மிக அபாயகரமான ஆயுதங்களை கொண்டுஎதிரி நாட்டு மக்களின் மீதும் தொழிற்நிறுவனங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்.
இந்த மரபு சாரா போர் முறைகளில் இரண்டு அபாயகரான ஆயுதங்கள் உள்ளன.
1.அணு ஆயூதம்.
2.நுண்ணுயிர் ஆயுதம் (செயற்கையான வைரஸ்கள்- உதாரணமாக கொரொனா வைரஸ்)
இப்போது தஜ்ஜாலின் கடந்த கால போர்களை பற்றி மிகச்சுருக்கமாக காணலாம்.
தஜ்ஜாலின் ஒரு வருடம் போன்ற நாள் (முதற்கட்டம்) தூதரின் காலத்திலேயே தொடங்கிவிட்டது அன்று முதல் இன்று வரை பல போர்களை தஜ்ஜால் ஏற்படுத்தியிருத்தாலும் அதில் மூன்று போர்கள் மிக மிக முக்கியமானது.ஏனெனில் இந்த மூன்று போர்களும் தஜ்ஜாலின் லட்சியங்களுடன் பிண்ணிப்பிணைந்தது.
அந்த மூன்று போர்கள்
1.முதலாம் உலகப்போர்
2.இரண்டாம் உலகப்போர்
3.இஸ்ரேல்-அரபுகளின் ஆறு நாள் யுத்தம்.
1.முதல் உலகப்போர் என்பது மரபு சார்ந்த போர் முறையை சார்ந்தது.இப்போருக்கு தொழிற்போட்டி,காலணியாதிக்கம் போன்ற பல்வேறு வகையான காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தப்போரின் உண்மையான நோக்கம், உத்மானிய இஸ்லாமியப் பேரரசை (Ottoman empire) வீழ்த்துவம் புனித நகரான ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றுவதும் ஆகும்.இந்த போரின் முடிவில் ஜெருசலத்தை முஸ்லிம்கள் இழந்தனர்.இந்த தோல்விக்கு காரணமான சவூதி மற்றும் துருக்கிய துரோகிகளின் சதி பற்றி ஏற்கனவே இத்தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
2.இரண்டாம் உலகப்போர் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா ஆகிய இரண்டு போர்முறைகளை கொண்டும் போரிடப்பட்டது.இப்போரில் தான் அணு ஆயுதத்தின் கொடுமையை உலகம் கண்டது.
இப்போருக்கான உண்மையான நோக்கத்தை, சதி கோட்பாட்டாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.
முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டபோதிலும் அங்கு பெரும்பான்மையான ஐரோப்பிய யூதர்கள் குடியேற மறுத்துவிட்டனர் இதனால் ZIONIST இயக்கத்தின் மூத்தவர்கள் ஐரோப்பிய உலகம் முழுவதும் குறிப்பாக ஜெர்மனியில் யூத எதிர்ப்பு அமைப்புகளுக்கு உதவி, யூத வெறுப்பை பரப்பினார்கள்.இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தன் எதிரிகளை பழி வாங்கி கொண்டிருந்த அதே தருணத்தில் ஜெர்மனியிலும், தான் வெற்றி கொள்ளும் நாடுகளிலும், யூத இன அழிப்பை மிகக் கடுமையாக மேற்கொண்டார்.இந்நிலையில் ஜெர்மன் தான் செய்த ஒரே ஒரு வரலாற்று பிழையால் உலகப்போரில் தோல்வியடைந்தது.உயிர் பிழைத்தவர்கள் வேறு வழியின்றி புனித நகரில் குடியேறத் தொடங்கினர்.
இந்த இரண்டு போர்களின் மூலம் தஜ்ஜால் தன் நான்கு கட்ட லட்சியங்களில் இரண்டு கட்டங்களை மிக நேர்த்தியாக முடித்தான்.
3.இஸ்ரேல்-அரபு யுத்தம்.
புனித நகரில் பால்போர் உடன்படிக்கை வாயிலாக குடியேறிய ஐரோப்பிய யூதர்கள் தங்களின் குடியிருப்பு எல்லைகளை தாங்கள் விரும்பிய வண்ணம் விரிவுபடுத்தினர்.இவர்களின் செயலால் பாலஸ்தீன் கடுமையாக பாதிக்கப்பட்டது.லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன.
இஸ்ரேலின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து அரபு நாடுகளும் (சவூதி உட்பட) எகிப்து தலைமையில் ஒன்றிணைந்து போர் புரிந்தன.
எகிப்து மட்டும் தான் அரபு நாடுகளில் மிகச்சிறந்த விமான படையை வைத்திருந்தது.
ஆனால் போர் தொடங்கிய ஆறே நாளில் முடிவுற்றது.எகிப்தின் விமானப்படை தளங்கள் இஸ்ரேலினால் அழித்தொழிக்கப்பட்டது.லெபனான்,சிரியா,பாலஸ்தீன்,ஜோர்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தங்களின் நிலப்பரப்பில் சிலப்பகுதிகளை இஸ்ரேலிடம் இழந்தது.
ஜெருசலத்தில் ஐரோப்பிய யூதர்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) தங்களின் ஆட்சியை உறுதி செய்தனர்.
இந்த மூன்றாவது போரில் தஜ்ஜால் தன்னுடைய லட்சியத்தில் மூன்றாவது கட்டத்தை வெற்றிகரமாக முடித்தான்.
இனி தஜ்ஜால் தன்னுடைய லட்சியத்தின் இறுதிகட்டத்தை (ஜெருசலத்தை உலக வல்லரசாக மாற்றுதல்) அடைவதற்கு பல போர்களை ஏற்படுத்த உள்ளான்.
அவற்றில் மிக மிக முக்கியமானவைகள்.
1.ஷியா-ஸன்னி யுத்தம்
2.அல் மல்ஹமா.
1.ஷியா-ஸன்னி யுத்தம்(இஸ்லாமிய உலகத்தின் இரண்டு தரப்புகளும் இப்போரால் கடுமையாக பாதிக்கப்படும்).
ஒரு நல்ல முஸ்லிம் என்பவர் இஸ்லாத்தில் எந்த வகையான பிரிவுகளும் இல்லை என்பதை உணர்ந்து தான் ஷியாவும் இல்லை ஸன்னியும் இல்லை தான் ஒரு முஸ்லிம் என்று அறிவித்து இரு தரப்புக்கும் ஒற்றுமையை ஏற்படுத்த பணிப்புரிய வேண்டும் இல்லையென்றால் குறைந்தபட்சம் பகைமையையாவது வளர்க்காமல் இருக்க வேண்டும்.
இதைவிடுத்து, யார் ஒருவர், ஏதேனும் ஒரு பிரிவின் அரிப்பு கருவியாக மாறி இன்னொரு பிரிவின் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் தஜ்ஜாலின் அடிவருடிகள் ஆவர்.
2.அல் மல்ஹமத்துல் குப்ரா(பெரும்யுத்தம்)
இந்த யுத்தத்தை கிறித்தவர்கள் ஆர்மகேடான் என்று கூறுவார்கள்.
வரலாற்று மொழியில் கூறுவதாக இருந்தால் மூன்றாவது உலகப்போர்.
போர் வகையை வைத்து கூறுவதாக இருந்தால் முதலாம் மற்றும் இறுதி அணு ஆயுதப்போர்.
யுக முடிவு நாளின் பெரிய பத்து அடையாளங்களில் ஒன்றான புகையை(உலகளாவிய புகையை) ஏற்படுத்தும் போர்.
தஜ்ஜாலின் எதிர்கால போர்களையும், போரில் முஸ்லிம்களின் நண்பர்கள் மற்றும் பகைவர்கள் யார்? என்பதையும் வரும் தொடர்களில் காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 25, தஜ்ஜாலின் பித்னாக்கள்- எலக்ட்ரானிக் பணம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/25.html?spref=tw
Post a Comment