HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 14 November 2020

தஜ்ஜால் தொடர் - பதிவு- 25, தஜ்ஜாலின் பித்னாக்கள்- எலக்ட்ரானிக் பணம்:-

தஜ்ஜால் தொடர் - பதிவு- 25
தஜ்ஜாலின் பித்னாக்கள்- எலக்ட்ரானிக் பணம்.
கடந்த தொடர்களில் காகிதப்பணத்தின் மோசடிகள்,பெட்ரோ டாலரின் சுரண்டல்கள் ஆகியவற்றை கண்டோம்.
இந்த மோசடிகளின் அடுத்த கட்டமாக வரவிருப்பது தான் உலக மக்கள் அனைவருக்குமான பொதுப்பணம்- எலக்ட்ரானிக் பணம்.
தஜ்ஜால்,தன் ஒரு வருடம் போன்ற நாளில் பிரிட்டன் நாட்டை தலைமையிடமாகவும், பிரிட்டன் பணமான ஸ்டெர்லிங் பவுண்டை உலகத்தின் ஆதிக்கப்பணமாகவும் பயன்படுத்தினான்.
தஜ்ஜால் தன், ஒரு மாதம் போன்ற நாளில் அமெரிக்காவை தலைமையிடமாக தேர்ந்தெடுத்து,அமெரிக்க டாலரை ஆதிக்கப்பணமாக பயன்படுத்துகிறான்.
தஜ்ஜால், தன் ஒரு வாரம் போன்ற நாளை விரைவில் தொடங்கும் போது இஸ்ரேலை தலைமையிடமாக தேர்ந்தெடுத்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் பணத்தை உலக பணமாக பயன்படுத்துவான்.
இன்று உலகின் ஆதிக்கப்பணமாக உள்ள டாலர் மிக விரைவில் வீழ்ச்சியடையும்.
போர்கள் மற்றும் தொற்று நோய்கள் மூலமாக பொருளாதார பெருமந்தம், பங்கு சந்தை வீழ்ச்சி,வங்கி திவால்,போன்ற பல யுக்திகளை(அச்சுறுத்தல்களை) பயன்படுத்தி அமெரிக்க டாலரை அழித்து, உலகத்திற்கே பொதுவான புதிய பணத்தை எலக்ட்ரானிக் வடிவில் நடைமுறைக்கு கொண்டு வரலாம்.
வரவுள்ள இந்த எலக்ட்ரானிக் பணம் ஏறக்குறைய காகிதப்பணம் போன்றே மக்களை சுரண்டும்.இன்னும் சொல்லப்போனால் இது காகிதப்பணத்தை விட மோசமானதாக இருக்கும்.
பொருளாதார அடிமைதனத்தை இது ஏற்படுத்தும்.
எலக்ட்ரானிக் பணத்தை கையாள மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு கட்டாயம் என்ற சூழல் ஏற்படும்.மக்களின் ஒவ்வொரு வரவும், செலவும் அரசால் கண்காணிக்கப்படும்.அரசிற்கு எதிராக மூச்சுவிட்டால் கூட, கணக்குகள் முடக்கப்பட்டு வீதிகளில் மக்கள் பிச்சைக்காரர்களாக்கப்படுவார்கள்.
ரஷ்யா,சீனா,பாகிஸ்தான்,ஈரான் போன்ற ஒரு சில நாடுகளை தவிர்த்து அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் எலக்ட்ரானிக் பணத்தை ஏற்கும்.இஸ்ரேலுக்கு உலகம் துதிபாடும்.
தஜ்ஜாலின் பித்னாக்களில் மிகவும் அபாயமானது காகிதபணம் மற்றும் எலக்ட்ரானிக் பணம் தான்.
இந்த மோசமான பித்னாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்வது என்பது இன்றைய தினம் இயலாத காரியம்.காகிதப்பணம் இல்லாமல் நாம் ஒரு நாள் கூட வாழ முடியாத சூழல்.
இந்த சூழலில் நாம் எவ்வாறு காகிதப்பணத்தில் இருந்து விலகுவது?
உடனே காகிதப்பணமுறையை அழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் அதற்கான முதல் முயற்சியை நாம் எடுக்கலாம்.
காகிதப்பணம் என்பது மோசடியானது என்பதை சாதி மத பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.இது தான் நம் முதல் முயற்சியாக வேண்டும்.
இரண்டாவது முயற்சி என்ன என்று பார்ப்பதற்கு முன் முக்கிய ஹதிஸ் ஒன்றை நாம் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.
ஹதிஸ்:இறைத்தூதர் கூறினார்கள் ஒரு காலம் வரும்.அக்காலத்தில் முஸ்லிம்களின் சிறந்த செல்வம் ஆடுகள் ஆகும்.அவன் தன் மார்க்கத்தை(இஸ்லாத்தை) காப்பாற்றி கொள்ள அவனுடைய ஆடுகளை அழைத்துக் கொண்டு மழை பெய்யும் இடங்களுக்கு சென்று வாழ்வான்.
விளக்கம்:தஜ்ஜாலின் பித்னாக்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் சமூகத்தில் ஒன்றிணைந்து வாழும் ஒரு முஸ்லிமால் அவனுடைய மார்க்கத்தை காப்பாற்ற முடியாது.மார்க்கத்திற்காக வாழ்பவன் சமூகத்தை விட்டு விலகிச்சென்று தன் செல்வங்களான ஆடுகளுடன் நாடோடி வாழ்க்கை வாழ்வான்.
முதல் முயற்சியான பிரச்சாரத்தில், காகிதப்பணத்திற்கு எதிரான ஒத்த கருத்துக்கொண்ட , குறைந்தது100 பேர் கொண்ட அணி அமைந்தால், அந்த நூறு பேரும் மேலே சொல்லப்பட்டுள்ள ஹதிஸின் படி மாநகர,நகர வாழ்க்கையிலிருந்து தங்களை தூரப்படுத்தி குக்கிராம பகுதிகளில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தாமே தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு காகிதப்பணத்தின் புழக்கத்தை,தேவையை குறைக்க வேண்டும்.
இந்த இரண்டாவது முயற்சி சாத்தியமா? பயனளிக்குமா? என்று ஆயிரம் கேள்விகள் எழும்.பலவித நடைமுறை மற்றும் அரசியல் சிக்கல் ஏற்படும் என்ற எண்ணம் தோன்றும்.
கேள்விகளும் வாதங்களும் நியாயமானவைகளாகவே இருப்பினும் நம்மால் செய்ய முடிந்த இந்த முயற்சியை நாம் எடுத்தே தீர வேண்டும்.
தங்களுக்குள் சண்டையிட்டு கொண்ட அராபிய நாடோடிக்கூட்டம் இஸ்லாத்தை ஏற்றப்பின் ,ஒரு நூற்றாண்டுக்கள் தன் ஆட்சியை மேற்கே ஸ்பெயின் வரையிலும் கிழக்கே இந்தியா வரையிலும் பரவச்செய்தது.
இந்த வரலாற்று ஆச்சரியத்தை எந்த ஒரு வரலாற்று ஆய்வாளராலும் விளக்க முடியாது.ஆனால் இறை நம்பிக்கை உள்ள சாமனியனால் விளக்க முடியும்.ஆம்!இந்த பரந்த ஆட்சி என்பது இறைவன் முஸ்லிம்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை.
நாமும் இறைவனின் அருட்கொடையை எதிர்பார்த்து காகிதப்பணத்தை ஒழிப்பதற்கான நம்மால் இயன்ற முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும்.இறைவன் நாடினால் வெற்றி பெறும்.
குர்ஆனில் குகை என்ற அத்தியாயம் உள்ளது.இதன் முதல் பத்து வசனங்களை தொடர்ந்து ஓதுபவர்கள் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு பெறுவார்கள் என்று தூதர் கூறியுள்ளார்.
இந்த குகை அத்தியாயத்தில், இன்றைய தினம் நமக்கு தேவைப்படும் சிறந்த வரலாற்று வழிகாட்டுதல் இருக்கும்.
அந்த வழிகாட்டுதல் :
கேடுகளும்,கொடுமைகளும் நிறைந்த ஆட்சியை எதிர்க்கவும் முடியாமல் ,ஏற்கவும் முடியாமல் ,இருந்த சில இளைஞர்கள் தங்களின் மார்க்கத்திற்காக நாட்டை விட்டு வெளியேறி குகை ஒன்றில் குடியேறுவார்கள்.குடியேறும் இளைஞர்களை இறைவன் 309 ஆண்டுகள் உறங்கச்செய்து பின்பு முழிக்கச் செய்து,சில நிகழ்வுக்கு பின் அவர்களை அந்த பாக்கியமிக்க இளைஞர்களை அந்த குகையிலேயே நிரந்தரமாக மரணிக்கச்செய்வான்.
இந்த இளைஞர்களின் வழியை நாம் தேர்ந்தெடுத்து, மிகச்சிறந்த செல்வமான ஆடுகளுடன் கிராமப்புறமாக ஒதுங்கி வாழ்க்கையை நாம் மேற்கொண்டால் தஜ்ஜாலின் அனைத்து வகையான பித்னாக்களிலிருந்தும் நாம் தப்பிக்கலாம்.
இறைவன் இவ்வுலகில் வெற்றி அளிக்கவில்லை என்றாலும் நம் முயற்சிக்கு மறுமையில் கூலி உண்டு.
தஜ்ஜாலின் எதிர்கால போர்களை பற்றி நாம் இன்ஷா அல்லாஹ் நாளை முதல் காணலாம்.

பதிவு நாளை தொடரும்.....


தஜ்ஜால் தொடர் - பதிவு- 24; தஜ்ஜாலின் பித்னாக்கள் - காகிதப்பணம்- அமெரிக்க டாலர் ,பெட்ரோ டாலராக மறு உருவம் எடுத்தல்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/24.html?spref=tw








 



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com