தஜ்ஜால் தொடர் பதிவு-30
தஜ்ஜாலும் போர்களும்.
நேற்றைய பதிவில் அமெரிக்காவும் நேட்டோவும் இஸ்ரேலும் நமது எதிரிகள் என்பதை பார்த்தோம்.
இன்று நமது துரோகிகள் யார் என்பதை பார்ப்போம்.
முதல் உலகப்போரில் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் இன்று வரை அதே துரோகத்தில் நீடிக்கின்றனர்.
ZIONISTகளுடன் கூட்டணிக்கூடாது என்று குர்ஆன் தெரிவித்த பின்னரும் அவர்களுடன் கூட்டணியில் உள்ளனர் இந்த துரோகிகள்.
துருக்கி: இந்த நாடு காஷ்மீரிலும்,குடியுரிமை சட்டத்திலும் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துவிட்டதால் இதை நமது இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.ஆனால் உண்மையில் துருக்கி நல்ல எண்ணம் கொண்ட நாடு அல்ல.இஸ்லாமிய உலகில் சவூதிக்கு எதிராக அரசியல் செய்யும் துருக்கி, பாகிஸ்தானின் தேவையை உணர்ந்து செயல்படுகிறதே தவிர இஸ்லாமிய மக்கள் மீது இந்த நாட்டிற்கு எந்த நல்லெண்ணமும் கிடையாது.சிரியாவில் துருக்கி ராணுவத்தின் அராஜகமே இதற்கு போதுமான சான்று.
ZIONISTகளின் ராணுவ அமைப்பான NATO வில் 1951 முதல் அங்கம் வகிக்கிறது துருக்கி.குர்ஆனின் அறிவிப்பின் படி துருக்கிய அரசு ZIONIST அரசு தானே தவிர இஸ்லாமிய அரசு கிடையாது.
தற்போது கூட சிரியாவிற்கு எதிராக போரிட NATOவை அழைத்தது துருக்கி.ரஷ்யாவுடன் நேரடியான போரை விரும்பாத அமெரிக்கா துருக்கியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
மல்ஹமா யுத்தத்தின் முடிவில் முஸ்லிம்களால், காண்ஸ்டாண்டிநோபிள்(இஸ்தான்புல்) கைப்பற்றப்படும்.இந்த நகரம் இன்று துருக்கியில் தான் உள்ளது.அப்படியென்றால் முஸ்லிம்களின் படை துருக்கியை எதிர்த்து செல்லும் என்பது நன்றாக தெரிகிறது.
எனவே துருக்கிய அரசிடமிருந்து நாம் தூரமாக இருக்க வேண்டும்.
சவூதி அரேபியா: இந்த தொடரில் நாம் முன்னரே ஹிஜாஜ் பகுதியின் துரோகி ஷரிப் ஹுசைன் அலி பற்றியும் நஜ்த் பகுதியின் துரோகி அப்துல் அஜிஸ் இப்னு சவூத் பற்றியும் பார்த்துள்ளோம்.
இதில் ஷரிப் ஹுசைன் வாரிசுகள் இன்று கத்தார் பகுதியின் அரசர்களாக உள்ளனர்.
1930 களில் ஹிஜாஜ் பகுதியும் நஜ்த் பகுதியும் ஒன்று சேர்க்கப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.ஹிஜாஜ் மற்றும் நஜ்த் பகுதியின் மன்னராக அறியப்பட்ட இப்னு சவூத் தன்னை சவூதியின் அரசனாக அறிவித்துக்கொண்டான்.
சவூதி அரேபியா என்ற நாடு, என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரையும் அது அமெரிக்காவால் பாதுகாக்கப்படுகிறது. டிரம்ப் கூறுவது போல் அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சல்மான் என்பவனால் இரண்டு வாரம் கூட அரசராக இருக்க முடியாது.
அது போல சவூதியின் எண்ணெய் இல்லாவிட்டால் அமெரிக்க டாலர் அழிந்து அரை நாற்றாண்டுகள் ஆகியிருக்கும்.
அமெரிக்காவின் பணத்தை சவூதியும் சவூதியின் அரச குடும்பத்தை அமெரிக்காவும் பாதுகாக்கிறது.அப்படியென்றால் சவூதி ஒரு Zionist நாடு தான். அதனுடன் நாம் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது.
இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் சவூதி மீண்டும் ஹிஜாஜ் மற்றும் நஜ்த் என்று உடையும்.
புனித நகரங்களை உள்ளடக்கிய(மக்கா,மதீனா) ஹிஜாஜ் பகுதி இமாம் மஹதி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நஜ்த்(ரியாத்) பகுதியினர்,இமாம் மஹதி அவர்களுக்கு எதிராக போரிட தயாராவார்கள்.
இப்போது ஒரு மிக முக்கிய ஹதிஸை பார்ப்போம்.
தஜ்ஜாலால், மதீனா நகருக்குள் நுழைய முடியாது.அப்போது அவன் மதீனாவிற்கு அடுத்துள்ள உவர்நிலத்தில் தங்குவான்.அன்றைய தினம் அங்கு அவனுக்கு ஒரு கோட்டை இருக்கும்.அந்த கோட்டை மேல் அவன் நின்று பார்க்கும் போது அவன் கண்களுக்கு ஒரு வெள்ளை கட்டிடம் ஒன்று தெரியும்.அது என்ன என்று தஜ்ஜால் வினவுவான். அப்போது அவனுக்கு அது தூதரின் பள்ளிவாசல்(மஜ்ஜிதுல்நபவி) என்று அறிவிக்கப்படும்.
இந்த ஹதிஸ் அறிவிக்கப்படும் போது தூதரின் பள்ளி வெள்ளை (கற்கள்)கட்டிடம் கிடையாது.ஆனால் இப்போது அது வெள்ளை கட்டிடம்.
மதீனாவிற்கு அடுத்துள்ள உவர் நிலப்பகுதி என்பது ரியாத்தின் சுற்று வட்டாரப்பகுதி.இந்த பகுதியிலுள்ள மலை மீது, இன்று சவூதி அரசு கோட்டை ஒன்றை கட்டியுள்ளது.அந்த கோட்டைக்கு அரசு வைத்துள்ள பெயர் KINGDOM PALACE ஆனால் மக்கள் வைத்துள்ள பெயர் தஜ்ஜால் மாளிகை(DAJJAL PALACE).இந்த கோட்டையின் மேல் நின்று பார்க்கும் போது தூதரின் மதீனா பள்ளி தெரிவதாகவும் கூறுகின்றனர்.
இன்றைய சவூதி அரசு தஜ்ஜாலுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்கிறது.
இன்றைய தினம் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய துரோகிகளாக உள்ள அரசுகள் துருக்கியும் சவூதி அரேபியாவும் தான்.
ZIONISTகளின் கைத்தடி அரசுகளான துருக்கி மற்றும் சவூதியுடன் முஸ்லிம்கள் எந்த வகையான உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது.இவர்கள் அப்பட்டமான துரோகிகள்.
இன்ஷா அல்லா பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 29; தஜ்ஜாலும் போர்களும் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்று தெரிந்துக் கொண்டால் தான் தவறான கூட்டணியை மற்றும் செயல்பாடுகளை தவிர்க்க முடியும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/29.html?spref=tw
Post a Comment