தஜ்ஜால் தொடர் - பதிவு- 32
தஜ்ஜாலும் போர்களும்.
நமது எதிரிகள் மற்றும் துரோகிகள் யார் என்பதை தெளிவாக முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். இன்று நமது நண்பர்கள் யார் என்று காண்போம்.
நமது நண்பர்கள் யார் என்று கண்டறிவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1.குர்ஆன்,ஹதீஸ் வழி தேடல்.
2.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறை.
குர்ஆன்,ஹதிஸ் முறை இருக்கும் போது எதற்கு இரண்டாவது முறை என்று தோன்றலாம். ஹதிஸ்களில் ஒன்றுக்கொன்று குழப்பமான தகவல்கள் வரும் போது நமக்கு இரண்டாவது முறை தேவைப்படுகிறது.
ஹதிஸில் நமக்கு கிடைக்கும் தகவல்கள்.
1.ரோமர்களுடன் முஸ்லிம்கள் கூட்டணி வைப்பார்கள்.
2.பிறகு அதே ரோமர்களுடன் நமக்கு பகை ஏற்படும்
3.இறுதிக்கட்ட போரில் ரோமர்களின் ஒரு பகுதியினர் நமக்கு எதிராகவும் ஒரு பகுதியினர் நமக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
இவ்வாறாக நமக்கு பல தகவல்கள் கிடைக்கின்றன.
சரி ரோமர்கள் என்பவர்கள் யார்?யாரை அக்கால அராபியர்கள் ரோமர்கள் என்றழைத்தனர்?
அராபியர்கள், சீன மக்களை சீனோ என்ற பெயரில் அறிந்திருந்தனர்.
சிந்து நதிக்கரைக்கு கிழக்கிலுள்ள பகுதியை (இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ்) ஆகிய நாட்டினை ஹிந்த் என்ற பெயரில் அழைத்தனர்.
ஆப்கானிஸ்தான பகுதியை, குரசான் என்ற பெயரில் அழைத்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளை அபிசீனீயா உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்தனர்.
அது போன்று துருக்கி் இன மக்களை துர்க்குகள் என்றும் அழைத்தனர்.
இன்றைய ஈரான் சுற்று வட்டார பகுதிகளை பார்சியா(பெர்சியா) என்று அழைத்தனர்.
அப்படியென்றால் அராபியர் யாரை ரோமர்கள் என்று அழைத்தனர்?.
ஐரோப்பியர்களை தான்.
அன்றைய ஐரோப்பா முழுவதும்(பிரான்ஸ்,ஜெர்மனி,ஸ்பெயின்,துருக்கி, கிரிஸ்,இத்தாலி,ரோமானியா,பெல்ஜியம் உள்ளிட்ட பகுதிகள்) ரோமானிய பேரரசின் கீழ் இருந்தது.
அன்றைய ரோமானிய பேரரசு,தங்களின் நிர்வாக காரணத்திற்காக ஆட்சி பகுதியை இரண்டு பகுதிகளாக பிரித்திருந்தனர்.
அதன்படி மேற்கு ரோமானிய பகுதி,கிழக்கு ரோமானிய பகுதி என்று இரு பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.
மேற்கு பகுதியில் இன்றைய பிரான்ஸ்,ஜெர்மன்,ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள்.
கிழக்கு பகுதியில் கிரிஸ், துருக்கி ,பெல்ஜியம்,ரோமானியா,லாட்வியா, போன்ற நாடுகள்.
பிற்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ரோமானிய பேரரசின் மேற்கு பகுதி உள்ளூர் நாடோடிகளால் வீழ்த்தப்பட்ட போது கிழக்கு பகுதியானது மட்டும் தப்பித்தது.
போரில் எஞ்சிய கிழக்கு பகுதி தான் கிழக்கு ரோமானிய பேரரசு என்றும் பைசாந்திய பேரரசு என்றும் அறியப்பட்டது.
இந்த பைசாந்திய பேரரசை(கிழக்கு ரோமானிய பேரரசு) தான், அரபுகள் ரோமர்கள்(ரூம்கள்) என்று அழைத்தனர்.
ரூம் (ரோம்) என்ற பெயரில் குர்ஆனில் ஒரு அத்தியாயமே உள்ளது.
கிழக்கு கிறித்தவ ரோமானிய பேரரசை(பைசாந்திய பேரரசை) நெருப்பு வணங்கிகளான பெர்சியர்கள் வீழ்த்திய சம்பவம் நமது இறைத்தூதர் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் கவலை அளித்தது.அதே சமயம் அரபு காபிர்களுக்கு அது மகிழ்ச்சியை அளித்தது. இந்த சூழலில் தான் ரூம்(ரோம்) மீண்டும் வெற்றி பெறும் என்ற வசனத்தை இறைவன் முன்னறிவிப்பாக வழங்கினான்.வசனத்தின் படியே ரூம்(ரோம்) வெற்றி பெற்றது.
மேற்கு ரோமனாகட்டும்,கிழக்கு ரோமனாகட்டும் இன்று இப்பகுதிகளிலுள்ள பெரும்பான்மை நாடுகள் - NATO நாடுகள் ஆகும்.அப்படியென்றால் அவர்கள் நமது எதிரிகள்.
மேலும் இன்று, பைசாந்திய பேரரசு(ரோம பேரரசு) என்ற ஒன்றும் இல்லை.
அப்படியென்றால் நாம் கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ளவுள்ள ரோமர்கள் யார் என்பதை நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்....
தஜ்ஜால் தொடர் - பதிவு- 31; தஜ்ஜாலும் போர்களும், கடந்த பதிவுகளில் மல்ஹமா யுத்தத்தில் முஸ்லிம்களின் எதிரி நாடுகள் யார்?துரோகி நாடுகள் யார்? என்பதை பற்றி பார்த்தோம் அது போல இன்று முஸ்லிம்களுக்கு எதிராக துரோகம் செய்யும் அமைப்புகள் பற்றி காண்போம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/11/31.html?spref=tw
Post a Comment