HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 13 July 2024

 



கமல்ஹாசன் 10 நிமிடங்களே நடித்த கல்கி 2898ஏடி படம் வெளியானதை தொடர்ந்து நேற்று (ஜுலை 12) வெளியான படம் இந்தியன் 2.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

நீண்ட காலமாக பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 படம் இந்தியா முழுவதும் சுமார் 7801 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

படத்திற்கான முன்பதிவுகள் கூட தாறுமாறாக நடந்தது, முனபதிவின் மூலம் முதல் நாளில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

வசூல் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாக மக்களிடம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. இதனால் முதல்நாள் வசூல் அமோகமாக நடக்கும் என எதிர்ப்பார்க்கையில் அதேபோல் தான் நடந்துள்ளது.

அதாவது கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

செம மாஸ் காட்டிய கமல்ஹாசனின் இந்தியன் 2.. முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Tuesday, 30 April 2024

 



தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தலஅஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார், முக்கியமான ரோலில் சிம்ரன் மற்றும் மீனா நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஆமாம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டதட்ட 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..




ஷூட்டிங்கே தொடங்கல.. பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி உரிமை – அஜித் ரசிகர்களைக் கொண்டாட வைத்த தகவல்:-

Saturday, 27 April 2024

 


நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.

அதில் இந்தியன் 2 விரைவில் வெளியாகியுள்ள நிலையில் தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கல்கி படத்தில் ஆண்டவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் கமலும் இணைந்துள்ளார். அவர் இதில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது.

கமலின் சம்பளம்

ஆனால் பின்னர் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 15 நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சிகள் வரும் என்று கூறப்படுகிறது.

இதற்காக கமல் அவர்கள் வாங்கிய சம்பளத்தை கேட்டால் தலை சுற்றிவிடும். அதன் படி வெறும் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படி பார்த்தால் ஆண்டவர் காட்டில் பண மழை தான். ஏற்கனவே இந்தியன் 2 படத்துக்காக இவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் கல்கியும் தன் பங்குக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் ஆண்டவர் அடுத்தடுத்த படங்களின் மூலம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை கல்கி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 




ஆண்டவர் காட்டுல மழை தான்.. கல்கி படத்திற்காக கமல் அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Monday, 22 April 2024



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

 இதைத்தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற குண்டூர் காரம் படத்தின் நாயகியான ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


அஜித்துக்கு ஜோடியாக போவது யார் தெரியுமா? குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான செம அப்டேட்;-

Monday, 1 April 2024

 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

குட் பேட் அக்லி என்ற பெயரில் உருவாக உள்ள அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். 

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் மூன்று விதமான தோற்றத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு இந்த மேஜிக் நடைபெற இருப்பது அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடக்கும் மேஜிக்.. அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – இதோ விவரம்.!!:-

Tuesday, 26 March 2024


 

தஜ்ஜாலிடம் பூமியின் கருவூலங்கள்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-45:-

தஜ்ஜாலின் ஒற்றைக்கண்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-44:-


தஜ்ஜால் Greater israel-ன் கதாநாயகன்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-46:-

Friday, 8 March 2024



 சென்னை: நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் அஜித்தின் உடல் நலம் எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது ஆகிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது 'விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் அஜர்பைஜான் சென்று வருகிறார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் பிற இடங்களை சுற்றி பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது. அதாவத மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும்அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வலைதளங்களில் பிரார்த்தனையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின்
காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது.

இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது? டிஸ்சார்ஜ் எப்போது? குட்நியூஸ்:-

Thursday, 7 March 2024

 



சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:- https://e-funandjoyindia.blogspot.com/2024/03/42.html

தஜ்ஜால் யாருக்கு எல்லாம் சோதனை,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-43:-

Tuesday, 5 March 2024


பெயரும் புகழும் வாங்குவதற்காகவே தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் நம் நடிகர்கள் இருந்த போதும் வெற்றியின் போதை தலைக்கேறாமல் கண்ணியத்துடன் நடப்பது சில நடிகர்கள் மட்டுமே அவ்வாறு தான் நடிகனாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான் என பந்தா காட்டாத ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர்  துப்பறியும் கதைகளை கொண்ட பல வெற்றி படங்களில் நடிகராகவும் பின்னாளில் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களுடன், முரட்டுக்காளை அருணாச்சலம் போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த காலத்தில் இருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன் மட்டுமே. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என தனி பெரும் ஆளுமைகளுக்கு இடையே காதல்படங்கள் மூலம் ரசிகர்களை வசியப் படுத்தியவர் ஜெமினி கணேசன். தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கனம் அல்லாது 90ஸ் காலகட்டம் வரை வெள்ளி திரை, சின்னத்திரை என இளம் நடிகர்களுடன் நடித்து பெயர் வாங்கிப் போனார் ஜெமினி. 

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவையாளர் நாகேஷ் ஆவார். உலக நாயகன் கமல் நாகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை மட்டுமே தனது ஆபிசில் உள்ள பர்சனல் அறையில் வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நாகேஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தனது சக நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பழகி கவுண்டர் காமெடி அடிப்பாராம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைக்கு முன் அல்ல, திரைக்குப் பின்னாலும் இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சக நடிகர்கள் பயந்து ஓடும் அளவு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுவாராம் கவுண்டமணி.  இன்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் கவுண்டமணி ஆபிசுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு தலைக்கனமோ கெத்தோ இல்லாமல் இயல்பான மனிதர் போல் அனைவரிடமும் பழகுகிறார் கவுண்டமணி.


பழகும் அனைவரிடமும் இனிமையானவர் என்று பெயரெடுத்தவர் அஜித். இன்றைய ஊடகங்கள் இவரை பற்றி பல்வேறு புரளி பேசினாலும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அசராமல் அமைதி காத்து வருபவர் அஜித். விடாமுயற்சி சூட்டிங் என்பது வெளிநாட்டில் அஜித்தின் ரசிகர்கள் அவரை காண படையெடுத்து வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோவாக விளங்கும் அஜித் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு  கஷ்டத்தில் உள்ள பலருக்கும் கை கொடுத்து உதவுவதில் வல்லவராம்.

பேரும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத 5 நடிகர்கள்.. அஜித்தை கொண்டாட இதுவும் ஒரு காரணம்:-

Monday, 4 March 2024

உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம்.



ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் | Rajinikanth Desire To Act In Kamal Marudhanayagam

ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக மருதநாயகம் படத்தை எடுப்பேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பிரம்மாண்டமாக இப்படத்தை அவர் அமைத்துள்ளார்.

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்

இந்நிலையில், மருதநாயகம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தாராம். ஆம், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்துவிட்டதால், வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாத காரணத்தினால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சம்பளமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் :-

Friday, 1 March 2024


 

தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும், இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-41:- https://e-funandjoyindia.blogspot.com/2024/02/41.html

சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:-

Wednesday, 28 February 2024



ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்துக்கு எதிராக வயதான சுதந்திர போரட்ட தியாகி ஒருவர் பொங்கி எழுதுவதை திரைக்கதையாக உருவாக்கியிருந்தார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் 20 வருடங்களுக்கு பின் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது இப்படம் முடிவடையும் நிலையை எட்டியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் எனில் இந்தியன் 3வது பாகத்துக்கான காட்சிகளையும் சேர்த்து ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார் என்பதுதான். எண்ணூர் துறைமுகத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பங்குபெறும் ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த பாடலில் சுமார் 500 நடன கலைஞர்கள் நடனமாடவுள்ளனர்.

இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது

அதோடு, கமலின் விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்ட நிலையில் இந்தியன் 2 படமும் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிக்க துவங்கிய படம் இது.

ஆனால், அதுவும் இப்போது வரை முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. விரைவில் இந்த 2 படங்களையும் ஷங்கர் முடித்துவிட்டு இந்தியன் 3 ரிலீஸ் தொடர்பான வேலைகளை செய்ய துவங்குவார் என சொல்லப்படுகிறது. விக்ரமுக்கு பின் இந்தியன் 2 படம் கமலுக்கு நல்ல மைலேஜை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது

ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2:-

 ஒவ்வொரு படங்களின் வசூல் தான், அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. மேலும் அதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இறுகிறுகிறார்கள். அதுவும் முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் வசூல் என்றால் சொல்லவே தேவையில்லை.

ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ | Top Actors 50 Crore Movies List

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதில் முதலிடத்தை கமலின் இந்தியன்  பிடித்துள்ளது. ஆம், ஷங்கர் கமல் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகும்.

இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.

இதன்பின் விக்ரமின் அந்நியன் மூன்றாவது இடத்தையும், அஜித்தின் பில்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ பாருங்க..

  • இந்தியன் 2 - ரூ. 55 கோடி
  • படையப்பா - ரூ. 60 கோடி
  • அந்நியன் - ரூ. 63 கோடி
  • வரலாறு - ரூ. 60 கோடி
  • பில்லா - ரூ. 75 கோடி
  • சிங்கம் - ரூ. 53 கோடி
  • வேலாயுதம் - ரூ. 66 கோடி
  • வேலையில்லா பட்டதாரி - ரூ. 55 கோடி
  • ரெமோ - ரூ. 55 கோடி 
  • காஷ்மோரா - ரூ. 50 கோடி
  • மாநாடு - ரூ. 87 கோடி



ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ :-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com