விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ‘புரியாத புதிர்’ கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இருந்தாலும் படம் ம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்று கூறி வந்தது தயாரிப்பு நிர்வாக
அஜீத்தின் விவேகம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் அந்த படம் தோல்வி என்றும் தியேட்டரில் ஆளே இல்லை என்றும் பொய்யாக வெளிவந்த வதந்தியை நம்பி ‘புரியாத புதிர்’ அடுத்த வாரமே ரிலீஸ் ஆனது. ஆனால் ‘விவேகம்’ படம் பற்றி கூறியது எல்லாமே வதந்தி என்பது தெரியவந்தது. மேலும் ‘விவேகம்‘ படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நல்ல வசூல் செய்ததால் ‘புரியாத புதிர்’ படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
விஜய்சேதுபதி அவசரப்பட்டிருக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வாரம் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment