HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 30 June 2018

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் நடிகை மும்தாஜ் கலந்துக்கொண்டார்.
இவர் கடந்த வாரம் டாஸ்க் பிடிக்காததால் மைக்கை அணிய மறுத்தார், இதனால், கமல் கோபமாகி இது பெரிய தவறு, அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை மைக் அணியாமல் ஓரமாக உட்காருங்கள் என்று சொன்னார்.
அப்போது மும்தாஜ் கமலையையே திட்டுவது போல் ஏதோ வாய் அசைக்க, ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர், இன்று தான் தெரியும் என்ன பிரச்சனை என்று, பார்ப்போம்.

கமலையே திட்டினாரா மும்தாஜ், கமல் கொடுத்த தண்டனை, பிக்பாஸில் இன்று வெடிக்கும் பிரச்சனை...

விஜய்-அஜித் படங்களுக்கு எப்போதுமே சவால்கள் இருக்கும். அவர்களுக்குள் இல்லை என்றாலும் ரசிகர்களே அதை ஏற்படுத்துவார்கள்.
இதுநாள் வரை கில்லி பிரபல தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, முதல் இடத்தில் இருக்கிறது என்று கூறப்பட்டது.
இப்போது அஜித்தின் விவேகம் படம் தமிழை தாண்டி பாலிவுட் வரை சென்று சாதனை செய்துள்ளது. ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சியில் முதன்முறையாக அஜித்தின் விவேகம் படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது மட்டும் அந்த தொலைக்காட்சிக்கு 94% பார்வையாளர்கள் அதிகமாகியுள்ளார்களாம். டிஆர்பி ரேட்டிங்கில் இது புதிய சாதனை என்கின்றனர்.
இதோ பாருங்க அந்த தகவலுக்கான ஆதாரம்,








இங்கே விஜய் இருக்கலாம், ஆனால் பாலிவுட் படங்களுக்கே சவால் விட்ட அஜித் படம்- இதுதான் நிஜ மாஸ்..

அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் அஜித் குறித்து பல வதந்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
அவர் இனி நடிப்பதில்லை, அரசியல் பக்கம் செல்ல போகின்றார் என்று, ஆனால், இதில் எதிலுமே உண்மையில்லை.
அஜித் அடுத்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, அதற்கான முதற்கட்ட பேச்சு தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவே பெரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது.



அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், முதல் கட்ட பேச்சு வார்த்தை இவருடன் தான்...

Wednesday, 27 June 2018

தமிழ் சினிமாவில் எல்லா மாஸ் நடிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் அடிக்கடி வருவது இல்லை.
இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள் என்றே கூறலாம். இந்த நேரத்தில் தான் விசுவாசம் படத்தின் விவேக் அவர்கள் இணைந்துள்ளதாக தகவல் வந்தது.
தற்போது விசுவாசம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கும் அனு வர்தன் ஒரு பேட்டியில், விசுவாசம் கண்டிப்பா ஒரு மாஸ் படமாக இருக்கும். வீரம் படம் போல இந்த படமும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவர்கள் மிகவும் ரசித்து இப்படத்தில் நடிக்கிறார். அஜித்-நயன்தாரா இருவருக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கும், திரையில் பார்த்தால் புரியும் என்று பேசியுள்ளார்.






விசுவாசம் படம் எப்படி இருக்கும், சில தகவலை வெளியிட்ட பிரபலம்- அப்போ மாஸ் தான்...

Monday, 25 June 2018





தல அஜித் தற்போது நடித்துவரும் விசுவாசம் படத்தை சிவா இயக்கிவருகிறார். அதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்பே அறிவித்தது படக்குழு. ஆனால் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் சர்க்கார் மற்றும் சூர்யாவின் NGK ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதனால் விசுவாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என சென்னையின் பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Conversation

I predict #Viswasam will be released for #Pongal2019 ... Superb 5day long weekend festival release date ... #2Point0 must target April 2019 release ... Considering the massive budget it is safe to play during the summer holidays ...

அஜித் ரசிகர்களுக்கு வந்த துக்க செய்தி விஸ்வாசம் அப்டேட்...

Saturday, 23 June 2018

ஓர் #அஜித் ரசிகனின் உண்மை கடிதம்...எனக்கு சிறு வயதில் #விஜய் மீது ஈர்ப்பு இருந்தது அவருடைய Cuteness,வசீகரம்,Dance,dialogue delivery இதெல்லாம் பார்த்து அவருடைய ரசிகரானேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் #யூத் படம் வரை #விஜய் ரசிகனாகவே வலம் வந்த காலம் அது. வயது ஏற ஏற Meturity அடையும்போது குடும்ப பொறுப்பை ஏற்றநாள்முதல் #விஜய்யின் ஓவர் பந்தா எரிச்சலை ஏற்படுத்தியது,அரசியல்ஆசை,ரசிகர்களை பகடைக்காயாக பயன்படுத்தியது,இவையெல்லாம் மேலும் கோபமடையச்செய்தது.
👍இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் எளிமையாக இருக்கும் #அஜித் என்ற தனி மனித சக்தியின் மீது என் பார்வை திரும்பியது. என்னுள் இருந்த விஜய் ஈர்ப்பை அடித்து நொறுக்கி தன்வசப்படுத்தியது என்பதுதான் உண்மை.சரியாக #வில்லன் படத்தில் இருந்து தல ரசிகன் இனி அஜித் என்ற நல்ல மனிதனின் ரசிகனாகவே இருப்பேன்.......👍👍👍👍👍👍



ஓர் #அஜித் ரசிகனின் உண்மை கடிதம்....

Wednesday, 20 June 2018

அஜித் நடிப்பில் கடந்த வருடம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது.
வசூலும் ஓப்பனிங் பெரியளவில் இருந்தாலும், அதை தொடர்ந்து வசூல் குறைய ஆரம்பித்தது, சத்யஜோதி நிறுவனத்திற்கு பெரிய அடி விழுந்தது.
அதை தொடர்ந்து அந்த நஷ்டத்திற்காக தான் அஜித் விசுவாசம் படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.
இந்நிலையில் விவேகம் படம் தற்போது ஹிந்தி டப்பிங் யு-டியூபில் ரிலிஸ் செய்ய, 7 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தற்போது வரை 12 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, மேலும், வட இந்திய ரசிகர்கள் அனைவருமே படத்தை புகழ்ந்து வர, தயாரிப்பாளர் தரப்பிற்கே ஆச்சரியமாக தான் இருக்கும்.







ஓராண்டிற்கு பிறகு விவேகம் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா...

Monday, 18 June 2018

நடிகர் அஜித்குமார் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகின்றது.
படம் முழுவதும் அஜித் படுலோக்கலாக நடிக்கவுள்ளதாகவும், படத்தில் இரண்டு அஜித் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விஸ்வாசத்தில் அண்ணன் அஜித்தான் நடிக்கும் கதாபாத்திரம் மதுரை தமிழ் பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அஜித் மதுரை ஸ்லாங்கில் பேசி கலக்கவுள்ளதாக கூறுகின்றனர். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வெளியான ரெட் படத்தில் அஜித் மதுரை இளைஞனாக நடித்திருந்தார்.
ஆனால், அப்போது அவர் மதுரை தமிழ் எல்லாம் பேசவில்லை, இப்படத்தில் மதுரை தமிழில் பேசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று தெரிகின்றது.



இத்தனை வருடம் கழித்து விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யவுள்ள விஷயம்..

Sunday, 17 June 2018


தமிழ் திரையுலகில் அஜித்தை பற்றி முன்னனி கதாநாயகிகள் கூறியது . .
1. #நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம்
2. #த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்
3. #நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும்
4. #லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்
5. #பிந்து_மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும்
6. #டாப்ஸி- ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும்
7. #ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை
8. #லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்
9. #குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்
10. #தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு . . . .
Etc. . .
இது போல் எந்த ஒரு கதாநாயகியாவது உங்கள் தலைவனை பற்றி பேசியதுண்டா .. தமிழின் ஒரே ஆணழகன் அஜித் டா..
தைரியம் இருந்தால் இவரைபோல் முடிக்கு டை அடிக்காமல் மேக்கப் போடாமால் நடிக்கசொல் உன் தலைவனை நீ புகைபடத்தில் கூட பார்க்கமாட்டாய் . .
What's your favorite Ajith movie ?
 1. 2015 - என்னை அறிந்தால்(55)
 2. 2014 - வீரம் (54)
 3. 2013 - ஆரம்பம் (53)
 4. 2013 - இங்கிலிஷ் விங்கிலிஷ்.(52)
 5. 2012 - பில்லா 2 (51)
 6. 2011 - மங்காத்தா (50)
 7. 2010 - அசல் (49)
 8. 2008 - ஏகன் (48)
 9. 2007 - பில்லா (47)
 10. 2007 கிரீடம் சக்திவேல் (46)
 11. 2007 ஆழ்வார் (45)
 12. 2006 வரலாறு (44)
 13. 2006 திருப்பதி (43)
 14. 2006 பரமசிவன் (42)
 15. 2005 ஜீ (41)
 16. 2004 ஜனா (40)
 17. 2004 அட்டகாசம் (39)
 18. 2003 என்னை தாலாட்டவருவாளா (38)
 19. 2003 ஆஞ்சநேயா (37)
 20. 2002 வில்லன் (36)
 21. 2002 ரெட் (35)
 22. 2002 ராஜா (34)
 23. 2001 பூவெல்லாம் உன் வாசம்(33)
 24. 2001 தீனா (32)
 25. 2001 அசோகா (31)
 26. 2001 சிட்டிசன் (30)
 27. 2000 முகவரி (29)
 28. 2000 கண்டுகொண்டேன்
(28)
 29. கண்டுகொண்டேன் (27)
 30. 2000உன்னை கொடு என்னை தருவேன்(26)
 31. 1999 நீ வருவாய் என (25)
 32. 1999 தொடரும் (24)
 33. 1999 உன்னை தேடி (23)
 34. 1999 ஆனந்த பூங்காற்றே (22)
 35. 1999 அமர்க்களம்(மனைவி ஷாலினியுடன்) (21)
 36. 1999 வாலி (20)
 37. 1998 காதல் மன்னன் (19)
 38. 1998 உன்னிடத்தில்என்னை கொடுத்தேன் (18)
 39. 1998 உயிரோடு உயிராக (17)
 40. 1998 அவள் வருவாளா (16)
 41. 1997 ரெட்டை ஜடை வயசு (15)
 42. 1997 ராசி (14)
 43. 1997 பகைவன் (13)
 44. 1997 நேசம் (12)
 45. 1997 உல்லாசம் (11)
 46. 1996 வான்மதி (10)
 47. 1996 மைனர் மாப்பிள்ளை (9)
 48. 1996 கல்லூரி வாசல் (8)
 49. 1996 காதல் கோட்டை (7)
 50. 1995 ராஜாவின் பார்வையினில்6)
 51. 1995 ஆசை (5)
 52. 1994 பாசமலர்கள் (4)
 53. 1994 பவித்ரா (3)
 54. 1993 அமராவதி (2)
 55. 1992 பிரம்மபுஸ்தகம்தெலுங்கு(அறிமுகம
1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை
 சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
2. இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில்.
3. ஆந்திரத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்.
4. இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம்.
5. என்பீல்டு கம்பெனியில் வேலைப்பார்த்தவர் பிறகு துணிகளை ஏற்றுவதி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்.
6. அடுத்தக்கட்டமாக மாடலிங் துறையில் ஈடுபட்டார்.
7. தன்னுடைய 20-வது வயதில் நடித்த தெலுக்கு படத்தின் டைரக்டர் இறந்து விட படம் பாதியிலேயே நின்று போனது.
8. மே மாதம் பட வாய்ப்பு கை நழுவி போனபோது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா இயக்குனர் செல்வாவிடம் அஜீத் புகைப்படத்தை காட்ட ‘அமராவதி’ படத்தின் நாயகனாகி விட்டார்.
9. அஜீத்தின் முதல் சம்பளத்தில் வாங்கிய பைக் இன்றும் பத்திரமாக அவரிடம் இருக்கிறது.
10. அஜீத்திற்கு ரேஸ் பழக்கம் எப்படி ஏற்பட்டதெனில் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்தின் முதலாளி சென்னை சோழவரம் ரேஸ்களில் கலந்துக் கொள்வாராம். அவரைப் பார்த்து தான் அஜீத்திற்கு பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
11. அமராவதி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விபத்தில் சிக்கி முதுகுத் தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டு மீண்டார்.
12. ’பெடரேஷன் மோட்டார்ஸ் ஆப் இந்தியா’ போட்டியில் கலந்துக் கொண்டு 5-வது இடத்தை பிடித்தார்.
13. ஆசை படம் இவரின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
14. அஜீத் எம்மதமும் சம்மதம் என்ற பாலிசியை உடையவர்.
15. அதை குறிக்கும் விதமாக வீட்டு சுவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மத சின்னங்களுடன் கல் பதிக்கப்பட்டிருக்கும்.
16. அஜீத் ஒருவரை பார்த்து விட்டால் அவர்களை அப்சர்வ் பண்ணுவதில் கில்லாடி.
17. அவர் வீட்டில் பால்ய கால நிகழ்வுகளின் புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளார்.
18. அதைப்பற்றி தனது மகள் அநெளஷ்காவுக்கு அடிக்கடி சொல்வதுண்டு அஜீத்.
19. அஜீத்திற்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று புகைப்பட கிளிக்
20. அஜீத் வீட்டில் சிறிய விளையாட்டு அரங்கு உள்ளது.
21. தன்னுடைய நண்பர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்.
22. இயக்குனர் – நடிகர்களின் திறமைகளை வெளிப்படையாக பாராட்டுவார்.
23. இவரால் சமீபத்தில் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர் அட்டகத்தி தினேஷ்.
24. வெளிப்புற படப் பிடிப்பு என்றால் ஐதராபாத் இடம்பெற்றிருக்கும். ராமொஜி ராவ் திரைப்பட நகரத்தின் மீது அவருக்கு ஒரு காதல். பிறந்த மண் ஆயிற்றே.
25. இவரின் அண்மைக்கால சேகரிப்பு ஆத்திச்சூடி.. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
26. ஆத்திச்சூடியை பற்றிய விழிப்புணர்வு இல்லையே என்ற வருத்தம் அஜீத்திற்கு உண்டு,
27. தன்னுடைய பிறந்த நாளை பசுமைக் திரு நாளாக கொண்டாட சொல்வார்.
28. ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
29. மனைவி ஷாலினியிடம் ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம்.
30. அஜீத்தை ஷாலினி பேபி என்று தான் செல்லமாக அழைப்பார்.
31. நண்பர்களை தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசுவார்.
32. நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின் நெருங்கிய நணபர்
33. ஞாபகசக்தி அதிகமுடையவர்.
34. தெரிந்தவர் என்றால் கைகுலுக்கி பேசுவார். மிகவும் தெரிந்தவரென்றால் தோல் மீது கைபோட்டு பேசுவார்.
35. துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்காக பாயிண்ட் 32 ரக துப்பாக்கி வைத்திருக்கிறார்.
36. தனது உதவியாளர்கலுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுடன் பேசலாமா?....நேரம் கிடைக்குமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.
37. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறையில் காணலாம். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்.
38. வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சீருடை மட்டுமல்ல. அவர்கள் வசிப்பதற்காக வீடுகளும் கொடுக்கிறார்.
39. அஜீத்திடம் வேலை பார்ப்பவர்கள் 14 பேர். தனது வீட்டுத் தளம் போலவே அவர்களின் வீட்டுத் தளமும் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
40. அஜீத்திடம் ஐந்து பைக்குகள் உண்டு. நீண்ட தொலைவு பயணத்துக்காக வாங்கியதில் தான் பெங்களூர், மும்பை என பயணம் செய்தார்.
41. அஜீத் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்
42. பட்டதாரி இல்லை என்றாலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ் தெரியும்.
43. ஒரு நாட்டின் குடிமகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரிய வேண்டுமோ அது அஜீத்திற்கு தெரியும்...

நீயும் அஜித் ரசிகன் என்றால் இந்த தகவலை #share செய்து உன் தலைவனின் புகழை உலகறியச்செய்



அஜித் வயதை ஏளனம் செய்யும் முட்டாள்களே இதை படியுங்கள் !...

Thursday, 14 June 2018

சிவா கூட்டணியில் நான்காவது முறையாக அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்குவதாக தெரிகிறது.
இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கதை மற்றும் சம்பளம் பற்றி பேசாமல் அஜித்தின் மேல் வைத்துள்ள மரியாதையால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டன.
தற்போது என்னவென்றால் அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் அண்ணன், தம்பியாக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் வருகிறது.



விசுவாசம் படத்தில் அஜித்தின் கெட்டப், கதாபாத்திரம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்....

காயத்ரி ரகுராம் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு செம்ம பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவரின் பெயர் செம்ம டேமேஜ் ஆனது.
அதை தொடர்ந்து காயத்ரி ரகுராமை டுவிட்டரில் வறுத்தெடுத்தனர், இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளது.
இதுக்குறித்து அவரிடம் ஒரு முன்னணி பத்திரிகை பேட்டி எடுக்கையில் ’இந்த நிகழ்ச்சி முடிந்ததும், கமல் எனக்கு பக்க பலமாக இருப்பதாக கூறினார்.
ஆனால், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை, தற்போதே அவர் முழு அரசியல்வாதி ஆகிவிட்டார்’ என கோபமாக பேசியுள்ளார்.




கமல் என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை, திட்டிய பிக்பாஸ் காயத்ரி ரகுராம்...

Sunday, 10 June 2018

நடிகர் அஜித்குமார் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ளது “விஸ்வாசம்”. இந்த படத்திற்கு பிறகு அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம், அஜித்குமார் தன்னுடைய 59-வது படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு கொடுக்கவுள்ளார். ஏற்கனவே, பில்லா, ஆரம்பம் என இரண்டு மெகா ஹிட் படங்களை அஜித்தை வைத்து இயக்கியுள்ள விஷ்ணுவர்தன்.
இதற்க்கான, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் ரிலீசிற்கு முன்னரே தல59 படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் அஜித்குமார் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்குமாருடன் அஜித் இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்பொது விஷ்ணுவர்த்தன் இந்த வாய்ப்பை பெற்றுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.






அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதகளம் பண்ணும் ரசிகர்கள்...

Wednesday, 6 June 2018

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித். இவர் தற்போது விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
இந்த நேரத்தில் படத்தில் நடன அமைப்பாளராக பணியாற்றியுள்ள பிருந்தா, அஜித்தை பற்றி ஒரு சீக்ரெட் கூறியுள்ளார்.
எவ்வளவு பெரிய மனிதர் அவர் இப்போதும் Nokia மொபைல் தான் பயன்படுத்துகிறாராம். நாமெல்லாம் ஐ போன் அது இது என்று பயன்படுத்துகிறோம், ஆனால் அவ்வளவு பெரிய நடிகர் அஜித் இன்னும் அப்படிபட்ட மொபைலை தான் பயன்படுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார்.


அஜித் பயன்படுத்தும் மொபைல் என்னது தெரியுமா?- கேட்டா அசந்து போய்டுவீங்க...

Monday, 4 June 2018

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் கடந்த முறை உருவான படம் விவேகம். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.
அஜித்தை தீவரமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படத்தில் இடம் பெற்ற சில அதீத சென்டிமெண்ட் காட்சிகள் தான் காரணம் என சமூகவலைதளங்களில் பேச்சு அடிப்பட்டது.
இதனால் விசுவாசம் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. இந்த நேரத்தில் விவேகம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வீர் என அண்மையில் வெளியானது.
படத்திற்கு நல்ல ஓப்பனிங்க் கிடைத்துள்ளதாம். மேலும் படத்திற்கு 5 க்கு 4 என ரேட்டிங்ஸ் கொடுத்திருக்கிறார்கள். சிலர் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருக்கிறது என வாழ்த்தியுள்ளார்களாம்.







எதிர் விமர்சனங்களுக்கு நடுவில் அஜித்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு...

Saturday, 2 June 2018

அஜித் நடிக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் எனும் சரித்திரக் கதையை உருவாக்குவது உறுதி என்று தெரிகிறது. எழுத்துச்சித்தர் பாலகுமாரன், சோழர்களின் காலத்துக்கு இந்தக் கதைக்கான ஒன்லைன் ரெடிசெய்து கொடுத்திருக்கிறார்.
வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவையாகவும் மனதையே புடம்போட்டதாகவும் வாழ்க்கையையே திசை திருப்பியதாகவுமான பல நாவல்களைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக, தஞ்சைப் பெரிய கோயில், தஞ்சாவூர், கும்பகோணம் முதலான சோழ தேசத்தின் பல பகுதிகள் எனச் சென்று வந்தார். கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வுகள் மேற்கொண்டார். கல்வெட்டு ஆய்வாளர்கள், குடவாயில் பாலசுப்ரமணியம், டாக்டர் கலைக்கோவன் முதலான சரித்திர ஆய்வாளர்களுடன் சோழ தேசம் குறித்தும் ராஜராஜ சோழன் குறித்தும் கேட்டறிந்தார்.
கிட்டத்தட்ட தன் கனவுப் படைப்பாக, ராஜராஜ சோழனின் சரிதத்தையும் சோழர்களின் கலாச்சாரத்தையும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்துடன் நிற்கும் பெரியகோயில் எழுப்பப்பட்ட விதத்தையும் பிரமிக்கும் வகையில், உடையார் எனும் ஆறு பாகங்கள் கொண்ட நாவலைப் படைத்தார். சுமார் 1,500 பக்கங்கள் கொண்டது உடையார்.
கடைக்கு வந்ததுமே விற்றுத்தீர்ந்தன உடையார் புத்தகங்கள். நண்பர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் பரிசாக உடையார் புத்தகங்களை வாங்கி அன்பளிக்காக வழங்கி மகிழ்ந்தார்கள் வாசகர்கள்.
வாசகர்களை மட்டுமின்றி, திரையுலகில் பலரையும் பாலகுமாரனின் உடையார் நூல், ஈர்த்தது. படித்துப் பார்க்க என்னவோ செய்தது. மொத்தக் கதைகளையும் எப்போதும் நம் கண்ணுக்கு எதிரே காட்சிப்படுத்திக் கொடுக்கிற எழுத்து பாலகுமாரனுடையது. அந்த விஷூவல், திரையுலகில் பலராலும் ரசிக்கப்பட்டது. இதில் மிக மிக ரசித்து லயித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
அறிந்தும் அறியாமலும் மூலம் அறிமுகமாகி பட்டியல், பில்லா, ஆரம்பம் என அஜித்தின் மனதுக்கு நெருக்கமாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். உடையார் படித்துவிட்டு, எழுத்தாளர் பாலகுமாரனைச் சந்தித்தார். தன் ஆசையைச் சொன்னார்.
மேலும் பல விஷயங்களையும் விவாதிக்கத் தொடங்கினார் விஷ்ணுவர்த்தன். கிட்டத்தட்ட, ஸ்டோரி டிஸ்கஷன் என்பது அங்கே மெல்ல மெல்ல நடந்தேறியது.
தினமும் பாலகுமாரனின் வீட்டுக்கு விஷ்ணுவர்த்தன் வந்து, அவருடன் கதை குறித்த விவாதங்களில், திரைக்கதையாக்கும் வடிவத்திலும் முழுவதுமாக ஈடுபட்டார். பிறகு ஒருநாள், விஷ்ணுவர்த்தனை அழைத்துக்கொண்டு, தஞ்சாவூர்ப் பெரியகோயிலைச் சுற்றிக் காட்டினார். அங்கே உள்ள கல்வெட்டுகள் மொத்தமும் பாலகுமாரனுக்கு அத்துப்படி. அப்படியே அந்தக் கல்வெட்டு வார்த்தைகளை வாசித்துக் காட்டினார்.
தஞ்சை பெரியகோயிலுக்குச் சென்று நின்றாலே, முப்பது நாற்பது வயது குறைந்துவிடும் அவருக்கு. வழக்கமாகவே உற்சாகமாக வலம் வருபவர், இன்னும் உற்சாகமானார்.
பெரியகோயிலின் கோபுரத்துக்குள் ஏறிச்செல்ல படிகள் உண்டு. கோபுரத்தின் உட்பகுதிகளில், ராஜராஜ சோழன் காலத்து ஓவியங்கள் பலவும் இருக்கின்றன. இதை பாலகுமாரனே பலமுறைக் குறிப்பிட்டு, தான் வியந்ததை எழுதியிருக்கிறார். இயக்குநர் விஷ்ணுவர்த்தனை அழைத்துக்கொண்டு, கோபுரத்தின் உள்பகுதிக்குள் படியேறிச் சென்று, அங்கே உள்ள ஓவியங்கள், ஓவியங்களில் இருப்பவர்கள் என அவரிடம் விவரித்தார் பாலகுமாரன்.
கோபுரப்பகுதிக்குள் இருந்தபடி பெரியகோயிலின் 216 அடி விமானம், அதன் பிரமாண்டம், தொழில்நுட்பம், தஞ்சைப் பகுதி என்றெல்லாம் விளக்கிய பாலகுமாரன், அங்கிருந்தபடியே, கதையை எங்கிருந்து துவக்கினால் சரியாக இருக்கும், கதையின் போக்கு எங்கெல்லாம் போய்வரவேண்டும், கதையில் பெரியகோயில் களமாக அமைந்து எதுமாதிரியான தாக்கங்களையெல்லாம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்றெல்லாம் முழுமையாகச் சொன்னார் பாலகுமாரன்.
தமிழில் சரித்திரப்படங்களின் காலம் முடிந்துவிட்டது என்பார்கள். எண்பதுகளுக்குப் பிறகு சரித்திரப் படங்களை ஆர்வமாக எடுப்பவர்களும் இல்லை; ஆர்வத்துடன் பார்ப்பவர்களும் இல்லை எனும் நிலையே இருந்தது. கமல்ஹாசன் கூட, மருதநாயகம் எனும் சரித்திரக் கதையை எடுக்க பூஜை போட்டு, சில காட்சிகளை எடுத்தார். ஆனால், எகிறியடிக்கும் பட்ஜெட் முதலான காரணங்களால் அப்படியே நிறுத்திவைத்தார்.
மீண்டும் சரித்திரப் படங்கள் எடுக்கலாம். லாபமும் பேரும் நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தி, எல்லோருக்கும் நம்பிக்கையை விதைத்தது பாகுபலி. சரித்திரக் கதைக்கான அத்தனை ஜிம்மிக்ஸ் வேலையும் செய்து மிரட்டியெடுத்த பாகுபலி, சினிமாக்காரர்களுக்கு ஒரு உத்வேக வெளிச்சத்தைப் படரவிட்டது. முக்கியமாக, விஷ்ணுவர்த்தனுக்கு!
தனக்குப் பிடித்த, மனதுக்கு நெருக்கமான அஜித்தை ராஜராஜ சோழனாக உருவகப்படுத்திப் பார்த்தார். இதுகுறித்து அஜித்திடமும் விஷ்ணுவர்த்தன் பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதையடுத்து, மீண்டும் பாலகுமாரனை சந்தித்துப் பேசிய பிறகு, அடுத்த சில நாட்களிலேயே அஜித் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் கதைக்கான ஒன்லைன் ஆர்டரும் முழுவதும் எழுதிக் கொடுத்துவிட்டார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்.
ஒரு படத்துக்கு முதல் விஷயமும் முக்கியமான விஷயமும்… ஒன்லைன் தான்! அதாவது, கதையின் ஆரம்பம் தொடங்கி அடுத்தடுத்து கதை நகரும் போக்கு முதலான விஷயங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கட்டமைப்பு… ஒன்லைன்… அஜித், விஷ்ணுவர்த்தன், பாலகுமாரன் கூட்டணியிலான ராஜராஜசோழன் படத்துக்கு ரெடி.
பாகுபலி அளவுக்கு மிக பிரமாண்டமாய் மிரட்டியெடுக்கும் வகையில் ராஜராஜ சோழனின் கதையைப் பண்ணுவது என்பதெல்லாம் உறுதிசெய்யப்பட்டது. படத்துக்கு ராஜராஜசோழன், ராஜராஜன், உடையார் என்று டைட்டில் வைக்கலாம் என்றும் யோசித்து வருகிறார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் (மே 15ம் தேதி) மறைந்தார். மும்பையில் ஹிந்திப் படஷூட்டிங்கில் இருந்த விஷ்ணுவர்த்தன், உடனே புறப்பட்டு சென்னைக்கு வந்து, பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மிகப்பிரமாண்டமான முறையில் ஹிந்திப்படம் இயக்கி வரும் விஷ்ணுவர்த்தன், அடுத்த வருடம் 2019ல் படம் ரிலீசாகிவிடும் என்று தெரிவித்தார்.
அநேகமாக, 2019ல் அஜித், விஷ்ணுவர்த்தன், பாலகுமாரன் கூட்டணியில் உடையார் திரைப்பட அறிவிப்பு வரும். அதையடுத்து படப்பிடிப்பைத் தொடங்கி, 2020ல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது விஷ்ணுவர்த்தனின் திட்டம்!


பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட கதையில் அஜித் 2020 ரிலீஸ் உறுதியான தகவல்...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com