தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படம் உருவாகி வந்தது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டார்கள்.
மேலும் நடிகர் அஜித் பைக்கில் லடாக், இமயமலை என வெளிமாநிலங்களில் சுற்றி வருகிறார். அதுமட்டுமின்றி அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் அவருடன் அந்த பைக் ட்ரிபில் இணைந்ததை பார்த்திருந்தோம்.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் தயாரிப்பாளர் பிரபல விநியோகஸ்தர் ஒருவரிடம் ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளார்.
விநியோகஸ்தரிடம் நடத்தபட்ட சமீபத்திய ரெய்டு பிறகு அவர் யாருக்கும் பணத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்கிறார். அவரிடமிருந்து பணம் வந்த பிறகுதான் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடியும் என்ற நிலையில், இப்போது அனைத்து பிரச்னை முடிந்து செப்டம்பர் 15 மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் துவங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. AK61 கதாநாயகி மஞ்சு வாரியர் இதை உறுதிப்படியுள்ளார்.
Post a Comment