விஜய் ரசிகர் மன்றத்தால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வசூல் மன்னனாகவும், முன்னணி நடிகராகவும் இருப்பவர் விஜய்.
அதனால் இன்றைய 2K கிட்ஸ் வரை அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த ரசிகர்கள் எண்ணிக்கை அவர் சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், விஜய் ரசிகர்கள் மன்றம் அமைக்கப்பட்டது. அதிலிருந்து விஜய் மக்கள் இயக்கமாகப் பதிவு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளும், உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், சில ரசிகர்கள் விரும்பத்தகாத விசயங்களில் ஈடுபவதும்கூட அவர்களுக்கே விபரீதத்தில் முடிவதும் உண்டு. அந்த வகையில் விஜய் ரசிகர் மன்றதால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தவெக கட்சிச் தொடங்கி வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தவெக பொ.செ., புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சி நிகழ்ச்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெகமேடையில் தவெக பொ.செ., புஸ்ஸி ஆனந்த் பேசிக் கொண்டிருந்தபோது, பெண் ஒருவர், ‘இன்றைக்கு என் குடும்பம் நடுத்தெருவில் நிற்கக் காரணமே விஜய் ரசிகர் மன்றம். இந்த மன்றத்தை உருவாக்கியது தங்கத்துரை. அந்த மன்றம் இருப்பது எங்கள் பகுதி. இந்த மன்றத்தில் இன்றைக்கு இருப்பது ஏமாற்றும் வேலை! இதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும்.
20 லட்சம் ரூபாய் முதலை விட்டுவிட்டு என் மகன் தெருவில் நிற்கிறான்’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தால் அப்பெண்ணின் குடும்பத்தார் எப்படி பாதிக்கப்பட்டனர் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
அப்பெண்ணிடம் புஸ்ஸி ஆனந்த், நீங்கள் பேசுவதை எழுதிக் கொடுங்கள் என்று கூறினார். பின், தான் அடுத்து, தஞ்சாவூர் போகனும், அடுத்து, திருவாரூர், திருச்சிக்கும் போக வேண்டும் என்று கூறவே, அப்பெண்ணை தவெக நிர்வாகிகள் சமாதானம் செய்த முயன்றனர்.
ஆனால், அப்பெண் தான் கூற வந்ததை அத்தனை நிர்வாகிகளின் முன்பு துணிச்சலுடன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தவெக தலைவர் விஜய் நிச்சயம் உதவி செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..