நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்திருமேனி கதையை ஓகே செய்து இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நேற்று இப்படத்தின் டீஸர் திடீரென படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. டீஸர் குறித்தும் ரசிகர்கள் நிறைய பேசி வருகிறார்கள். இப்படத்தை முடித்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் கதையை தான் அஜித் ஓகே செய்திருந்தார், ஆனால் கடைசியில் என்னவோ சில பிரச்சனைகளால் படம் டிராப் ஆனது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் பேசும்போது, நான் அஜித் அவர்களிடம் சொன்ன கதை ஆவேசம் போன்ற கதைக்களத்தை கொண்ட ஒரு கதை தான்.
இந்த படம் ஓகே ஆகியிருந்தால், இது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான பட கதையாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.
JANHVI KAPOOR CUTE IMAGES -3:-https://e-funandjoyindia.blogspot.com/2024/10/janhvi-kapoor-cute-images-3.html