HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday, 12 February 2025

 தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் மகிழ்திருமேனி.

இவரின் திரைப்பயணத்தில் வரப்பிரசாதமாக அமைந்தது அஜித்தின் விடாமுயற்சி படம், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வெளியாகியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

நல்ல விமர்சனங்கள் அதிகம் வர சில நெகட்டீவ் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனால் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பார்த்து தயாரிப்பு குழு மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஹேப்பி என மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தமிழகத்தில் 6 நாள் முடிவில் அஜித்தின் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு? | Ajith Vidaamuyarchi Tamilnadu Bo Details

நாளுக்கு நாள் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை ரூ. 80 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் ரூ.170.25 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது.

வசூல் ஒருபக்கம் மாஸாக நடக்க படத்தில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் குறித்த தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் மூலம் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்பபடுகிறது. 


6 நாள் முடிவில் அஜித்தின் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு?:-

Sunday, 9 February 2025

 கடந்த 6ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் அஜித் நடித்திருந்தார்.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 3 Days Box Office

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் வெறித்தனமாக அமைந்திருந்தது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 3 Days Box Office

அதன்படி, உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா:-

Thursday, 6 February 2025


 

கதைக்களம்

அஜித், திரிஷா பார்த்தவுடனே இருவருக்கும் பிடிக்க, 3 வருடம் காதலித்து திருமணம் செய்கின்றனர்.

வாழ்க்கை அழகாக போக, திரிஷா கர்ப்பம் ஒரு முறை கலைகிறது, அதோடு அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்ய இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க, அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என ட்ராப் செய்ய வருகிறார்.

வந்த இடத்தில் கார் ப்ரேக் டவுன் ஆக, அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக்கில் ஏற்றி செல்கின்றனர். ஆனால், ட்ரக்கில் ஏறிய திரிஷா காணாமல் போக, அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார்.

அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் ஒன்றை ரெஜினா சொல்ல, அதன் பின் அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா, ரெஜினா சொன்னது உண்மையா என்பதே மீதிக்கதை.  

படத்தை பற்றிய அலசல்

அஜித் இப்படி ஒரு மாஸ் ஹீரோ இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம், அதை விட இந்த கதாபாத்திரம், ஒரு நார்மல் மனிதன் பிரச்சனை வந்தால் அவன் தெம்புக்கு என்ன செய்வானோ அப்படி இதை உருவாக்கியதற்கே மகிழ் திருமேனிக்கு பாராட்டுக்கள்.

அஜித்-திரிஷா இருவரின் ஜோடியும் திரையில் அத்தனை அழகு, அதிலும் இளமை தோற்றத்தில் அஜித் தோன்றும் காட்சி சூப்பர், திரிஷா தன் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி இருவரின் பயணம் ஆரம்பித்ததும் மெல்ல கதை சூடு பிடிக்கிறது.

அதிலும் ஆரவ் கேங் செய்யும் அட்டகாசம், அதை தொடர்ந்து அர்ஜுன், ரெஜினா வருகை, திரிஷா காணாமல் போவது என ஒரு பதட்டம் படத்தில் இருந்துக்கொண்டே உள்ளது, ஆனால், காட்சிகள் கொஞ்சம் மெதுவாகவே நகர்வது சினிமா ரசிகர்கள் தாண்டி ஆலுமா டோலுமா எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் தான்.

மேலும், அர்ஜுன் ரெஜினா பேக் ஸ்டோரி மகிழ் பேட் மேன் படத்தில் வரும் ஜோக்கர், ஹார்லி குயில் போல் உருவாக்கியுள்ளார், அதிலும் ரெஜினா தன் தோழியை கொலை செய்யும் காரணம் எல்லாம் பெரும் சைக்கோதனத்தை காட்டியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் இசை, மெதுவாக நகரும் காட்சிகளை கூட தன் பின்னணி இசையால் தாங்கி புடித்துள்ளார், அதிலும் அஜித்தே என்று கத்துவது போல் அவர் போட்ட இசை, தியேட்டர் அதிர்கிறது, கிளைமேக்ஸ் பத்திகிச்சு சாங் ரசிகர்களுக்கு விருந்து.

அதே நேரத்தில் அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்-யை அத்தனை அழகாக காட்டியுள்ள ஓம் பிரகாஷையும் பாராட்டாமல் இருக்க முடியாது, மேலும் ஆரவ்-வுடன் காரில் நடக்கும் சண்டைக்காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் க்ளாஸ்.

க்ளாப்ஸ்

அஜித் முழு படத்தையும் தன் நடிப்பால் தாங்கி செல்கிறார். அனிருத் இசை, படத்தின் ஒளிப்பதிவு. முதல் & இரண்டாம் பாதி.

பல்ப்ஸ்

முதல் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.   

4/5

விடாமுயற்சி திரை விமர்சனம்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com